தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 53: மொத்த பாதிப்பு 8000-ஐ தாண்டியது
தமிழகத்தில் இன்று மேலும் புதிதாக 798 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் மொத்த எண்ணிக்கை 8000ஐ தாண்டியுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 538 கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் புதிதாக 798 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் மொத்த எண்ணிக்கை 8000ஐ தாண்டியுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 538 கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மே11ம் தேதி, மேலும் புதிதாக 798 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில்,கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்துள்ளது. மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.
Advertisment
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் சென்னையில் அதிகபட்சமாக கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை காணப்படுகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
Advertisment
Advertisements
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பற்றி தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் இன்று மேலும் புதிதாக 798 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8002 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில், 538 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,371-ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று 4 பெண்கள் 2 ஆண்கள் என மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர். இதனால், மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 92 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர். இதுவரை மொத்தம் 2,051 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாறத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"