தமிழகத்தில் இனி தினமும் 10 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்ய முடியும்: அமைச்சர் விஜயபாஸ்கர்

Minister vijayabaskar press meet: கொரோனா பாதிப்பால் சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த 34 வயது நபர் உயிரிழந்தார். அதனால், அவருடைய உடலை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

coronavirus, covid-19, minister vijayabaskar interview, கொரோனா வைரஸ், அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக அரசு நடவடிக்கை, விஜயபாஸ்கர் பேட்டி, tamil nadu government action against outbreak of coronavirus, mask, vijaybaskar, கொரோனா வைரஸ் செய்திகள், chennai, corona news, tamil nadu coronavirus news

CoronaVirus Chennai News: சென்னை தலைமை செயலத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய, சுகாதார அமைச்சர் விஜய பாஸ்கர், “தமிழகத்தில் கொரோனா பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வருகிற ஓரிரு நாட்களில் 10 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்ய முடியும்” என்று தெரிவித்தார்.  தமிழகத்தில் நேற்று புதிதாக 66 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் சதவீதம் 52% ஆக உயர்ந்துள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும், “கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் தற்போது 835 பேர் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை மொத்தம் 80,110 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இன்றைக்கு மட்டும் 7,707 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 66 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்றைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்த 94 பேர் மருத்துவமனைகளில் இருந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். இதுவரை மொத்தம் 960 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி மருத்துவமனையில் இருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 52% பேர் குணமடைந்துள்ளனர். இதனை மத்தியக் குழுவே பாராட்டியுள்ளது. குணமடைபவர்களின் சதவீதம் 52 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதைவிட நோய் தொற்றின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இருப்பினும், கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையை மேலும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் நேற்று  மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா பாதிப்பால் சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த 34 வயது நபர் உயிரிழந்தார். அதனால், அவருடைய உடலை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் நேற்று 43 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல, காஞ்சிபுரம் 7, தென்காசி 5, மதுரை 4, பெரம்பலூர், விருதுநகரில் தலா 2 பேர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் தலா 1 நபர் என மொத்தம் 66 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 6 பி.ஜி. மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்தன. அவர்களின் உடல்நிலை ஏற்கெனவே உறுதியாக இருந்தது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்ததைத் தொடர்ந்து, 6 மருத்துவர்களும் 1 செவிலியரும் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தங்களுடைய ரத்தத்தில் இருந்து பிளாஸ்மாவை எடுத்து மற்றவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க தாமாக முன்வந்து ஒப்புதல் அளித்துள்ளனர். அதே போல கோவையில் இருந்து 2 பி.ஜி. மருத்துவர்கள் குணமடைந்துள்ளனர்.” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Coronavirus covid 19 positive rate daily report minister vijayabaskar press meet recovered percent high from covid 19

Next Story
கேலிக்கூத்தாக மாறிய ஊரடங்கு: சந்தைகளில் அலைமோதிய கூட்டம்tamil nadu lockdown, முழு ஊரடங்கு, சென்னை, மார்க்கெட், கடைகளில் குவிந்த மக்கள், tamil nadu lockdown today, சென்னை கடைகளில் மக்கள் கூட்டம், chennai lockdown, edappadi palaniswami lockdown, tamil nadu lockdown news tamil nadu panic buying lockdown
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com