coronavirus, Covid pandemic, lockdowm, tamil nadu, chennai, corona deaths, corona infections, chennai corporation, royapuram, kodambakkam, coronavirus news, coronavirus tamil news, coronavirus tamil nadu news, coronavirus chennai news, coronavirus Tamil nadu, coronavirus outbreak
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் நிகழ்ந்த மரணங்களில் 80 சதவீகிதம் சென்னையில் தான் நிகழ்ந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில், தமிழ்நாடு தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,277 ஆக அதிகரித்துள்ளது.
Advertisment
Advertisement
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 16 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், இதில் சென்னையின் பங்கு மட்டும் 10,576 ஆகும். இதில் 4,844 பேர் குணமடைந்துள்ளதாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில், தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து 2500 பேர் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
மே 24ம் தேதி, தமிழகத்தில் புதிதாக 765 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இதில் சென்னையின் பங்கு மட்டும் 587 ஆகும்.
கொரோனாவால் நிகழ்ந்துள்ள மரணங்களின் எண்ணிக்கை 111ஆக அதிகரித்துள்ளது. சென்னையில், மே 24ம் தேதி மட்டும் 6 பேர் இறந்துள்ள நிலையில், அங்கு மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் நிகழ்ந்துள்ள கொரோனா மரணங்களில், 80 சதவீதம், சென்னையில் மட்டுமே நிகழ்ந்துள்ளது.
செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த இருவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சென்னை ராஜிவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தனர். இதனையடுத்து, மே 24ம் தேதி மட்டும் சென்னையில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மண்டலங்கள் பட்டியலில், ராயபும், கோடம்பாக்கம், தண்டையார்பேட்டை, திரு.வி.க. நகர் உள்ளிட்ட பகுதிகள் தொடர்ந்து முன்னிலையில் உள்ளன.
கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட மரணங்களில், ராயபுரம் (17), திரு.வி.க.நகர் (12), தண்டையார்பேட்டையில் 11 பேர் மரணமடைந்துள்ளனர்.
ராயபுரத்தில், 1204 பேருக்கும், கோடம்பாக்கம் 707, தேனாம்பேட்டை 602, திரு.வி.க. நகரில் 582 பேருக்கு கொரோனா பாதிப்பு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட கொரோனா தடுப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், முக கவசம் அணியுமாறும், அடிக்கடி கைகளை கழுவுமாறும் வேண்டுகோள் விடுத்தார். பலபகுதிகளில், மாநகராட்சி சார்பில் மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil