Advertisment

சென்னை- வட மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு: பலி எண்ணிக்கை 1000-ஐ கடந்தது

சென்னையை ஒட்டியுள்ள வடமாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிக எண்ணிக்கையில் இருப்பது தெரிய வந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai lock down, tamilandu Coronavirus

chennai lock down, tamilandu Coronavirus

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில், நேற்று ஒரே நாளில்  3,713 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறு தி செய்யப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,335 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் நேற்று மட்டும் 68 பேர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1025 ஆக உயர்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் அதிக தொற்று எண்ணிக்கையும் இறப்பு எண்ணிக்கையும்  பதிவாகியுள்ளது.

Advertisment

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக அரசு அதன்படி, தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை, இறப்பு எண்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கை ஆகிய புள்ளிவிவரங்களை தமிழக சுகாதாரத்துறை தினமும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 78,335 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் நேற்று மட்டும்  68 பேர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1025 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் அதிக தொற்று எண்ணிக்கையும் இறப்பு எண்ணிக்கையும் உச்ச எண்ணிக்கையாக பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள 47 அரசு கொரோனா பரிசோதனை மையங்கள் மற்றும் 42 தனியா கொரோனா பரிசோதனை மையங்கள் என மொத்தம் 89 கொரோனா பரிசோதனை மையங்களில் இன்று 34,805 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 10 லட்சத்து 77 ஆயிரத்து 454 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 32,068 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்றும் இதுவரை மொத்தம் 10 லட்சத்து 25 ஆயிரத்து 59 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து 2,737 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம், தமிழகத்தில் இதுவரை 44,094 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். அதே நேரத்தில், தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,213 ஆக உள்ளது.

சென்னையில் மட்டும் நேற்று 1,939 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், சென்னையில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 51,699 ஆக உயர்ந்துள்ளது. சென்னையை அடுத்து அதிபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 248 பேருக்கும் மதுரை மாவட்டத்தில் 218 பேருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் 146 பேருக்கும் வேலூர் மாவட்டத்தில் 118 பேருக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 127 பேருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் 101 பேருக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 98 பேருக்கும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 96 பேருக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் 62 பேருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் 43 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையில் சென்னை 51,699, செங்கல்பட்டு 4,911, திருவள்ளூர் 3,420, காஞ்சிபுரம் 1,683, திருவண்ணாமலை 1,624, வேலூர் 1,011 கடலூர் 940, ஆக உள்ளது. இந்த மாவட்டங்கள் அனைத்தும் சென்னையை ஒட்டியுள்ள வட மாவட்டங்களாக உள்ளன. அதே நேரத்தில் தென் மாவட்டங்களில் அதிகபட்சமாக மதுரையில் 1,703, தூத்துக்குடியில் 832, நெல்லை 723, தேனி 513, ராமநாதபுரம் 648 என்ற அளவில் மொத்த தொற்று எண்ணிக்கை இடம்பெற்றுள்ளன. மேற்கு மாவட்டங்களில் அதிகப்பட்சமாக சேலம் 604 ஆக உள்ளது.

இந்த எண்ணிக்கையை வைத்து பார்க்கும்போது, சென்னையை ஒட்டியுள்ள வடமாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிக எண்ணிக்கையில் இருப்பது தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில், தென் மாவட்டங்களில் மதுரை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைவாக உள்ளது. இதற்கு காரணம், மக்கள் அடர்த்தி மட்டுமில்லாமல் மக்கள் நடமாட்டமும் ஒரு காரணமாக உள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Chennai Coronavirus Madurai Kanchipuram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment