தமிழகத்தில் ஒரே நாளில் 6,972 பேருக்கு கொரோனா; 88 பேர் பலி
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,972 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த எண்ணிக்கை 2,67,288ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 88 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,972 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த எண்ணிக்கை 2,67,288ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 88 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் ஒரே நாளில் 6,972 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,67,288ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Advertisment
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கம் ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், முதல்வர் பழனிசாமி பொதுமுடக்கத்தை நீட்டிக்கலாமா அல்லது மேலும் தளர்வுகளை அறிவிக்கலாமா என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோச்னை நடத்தி வருகிறார். மேலும், தமிழகத்தில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை, உயிரிழந்தோர் எண்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கை உள்ளிட்ட புள்ளிவிவரங்களை தமிழக சுகாதாரத்துறை தினசரி வெளியிட்டு வருகிறது.
அதன்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,972 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,67,288ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Advertisment
Advertisements
மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்களில் இன்று 59,584 பேருக்கு கோரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், 23,83,664 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று 88 பேர் உயிரிழந்தனர். இதனால், மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,659ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை செய்திக்குறிப்பில் அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 4,707 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,66,956 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் தனிமைப்பட்டுள்ளவர்கள் 57,073 பேர்கள் உள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 1,107 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையை அடுத்து அதிகபட்சமாக, விருதுநகர் - 577, திருவள்ளூர் - 486, திருநெல்வேலி - 387, தூத்துக்குடி - 381, செங்கல்பட்டு - 365, மதுரை - 346, தேனி - 283, கோவை - 273, காஞ்சிபுரம் - திருவண்ணாமலை - 268, 223, கன்னியாகுமரி - 223, தஞ்சாவூர் - 209, ராணிப்பேட்டை 198, கள்ளக்குறிச்சி 195, வேலூர் - 151, திருச்சி - 149, கடலூர் -142, புதுக்கோட்டை - 128, சேலம் - 124, திண்டுக்கல் - 114 என்ற அளவில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில், சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் அதிக எண்ணிக்கையில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று பதிவாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"