தமிழகத்தில் 4,244 பேருக்கு கொரோனா தொற்று; 2000ஐ நெருங்குகிறது பலி எண்ணிக்கை
தமிழகத்தில் இன்று புதிதாக 4,244 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த என்ணிக்கை 1,38,470 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 68 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 1,966ஆக உயர்ந்து 2000ஐ நெருங்கியுள்ளது.

Advertisment
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை ஏற்ற இரக்கங்களுடன் பதிவானாலும் தினசரி கொரோனா பலி எண்ணிக்கை தினமும் 60-க்கு மேல் பதிவாகி வருகிறது. தமிழக அரசும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று பற்றிய தினசரி புள்ளி விவரங்களின்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,244 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த என்ணிக்கை 1,38,470 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
தமிழகத்தில் உள்ள மொத்தம் 105 கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்களில் இன்று 41,325 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் இதுவரை 15 லட்சத்து 42 ஆயிரத்து 234 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் இன்று 68 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 25 பேர் தனியார் மருத்துவமனையிலும் 43 அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதிபால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிகை 1,966 ஆக அதிகரித்து 2000ஐ நெருங்கி வருகிறது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றில் இருந்து 3,617 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடுதிரும்பியுள்ளனர். மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 89 ஆயிரத்து 532 பேர் குணமடைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
அதே நேரத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருபவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை 46,969 ஆக உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 1,168 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 32 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையை அடுத்து அதிகபட்சமாக காஞ்சிபுரம் -385, மதுரை - 319, விருதுநகர் 246, செங்கல்பட்டு - 245, திருவள்ளூர் - 232, வேலூர் - 151, திருவண்ணாமலை - 151, தூத்துக்குடி - 136, திருநெல்வேலி - 131, கோவை - 117, தேனி - 115, கன்னியாகுமரி - 104, திருச்சி 103, சேலம் - 98, சிவகங்கை 75 என கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 2000க்கு மேல் பதிவாகி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக 1,200 - 1,300-க்குள் கொரோனா வைரஸ் தொற்று பதிவாகி வருகிறது. அதே நேரத்தில், சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கணிமான எண்ணிக்கையில் தொற்று பதிவாகி வருகிறது.
தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிக எண்ணிக்கையில் பதிவாகி வருவது கவலை அளிப்பாதாக உள்ளது. இதனால், கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சென்னையில் இருந்து கவனத்தை பிற மாவட்டங்களுக்கும் திருப்ப வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"