தமிழகத்தில் ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா தொற்று; 62 பேர் பலி
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
tamil nadu coronavirus daily report, tamil nadu covid-19 positive cases today, tn covid-19 positive cases new record, corona viurs death rate in tamil nadu, latest corona virus news, கொரோனா வைரஸ் தினசரி ரிப்போர்ட், தமிழகத்தில் 2949 பேருக்கு கொரோனா தொற்று, தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 62 பேர் பலி, கொரோனா வைரஸ், கோவிட்-19, latest tamil nadu coroona virus report, tamil nadu corona virus death rate, today tested covid-19 positive 3949, today tn corona death 62
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 62 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,141 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
Advertisment
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு 1000 தாண்டியுள்ளது. கடந்த 2 நாட்களாக 3,000ஐ தாண்டி கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.
தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. உயிர் காக்கும் மருந்துகளைக் கொள்முதல் செய்ய தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் தினமும் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை, உயிரிழப்பு எண்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.
Advertisment
Advertisements
அதன்படி, தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு புதிய உச்சமாக பதிவாகியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவர கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 86,224 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 62 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,141 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 47 கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்கள் தனியார் 43 பரிசோதனை மையங்கள் என 90 கொரோனா பரிசோதனை மையங்களில் இன்று 30,039 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 11 லட்சத்து 40 ஆயிரத்து 411 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இன்று 30,005 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதுவரை மொத்தம் 10 லட்சத்து 86 ஆயிரத்து 569 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 2,167 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 55,969 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றில் இருந்து 2,212 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 47,749 ஆக உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில், மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 37,331 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"