தமிழகத்தில் புதிதாக 6,986 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,13,723 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதோடு தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு 3494 பேர் பலியாகியுள்ளனர்.
Advertisment
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கையை எடுத்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. தமிழக அரசு மாநிலத்தின் தினசரி தொற்று எண்ணிக்கை, உயிரிழப்பு எண்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கை உள்ளிட்ட புள்ளிவிவரங்களை தினமும் வெளியிட்டு வருகிறது.
தமிழகத்தில் இன்று 64,129 மாதிரிகள் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. இதனால், மாநிலத்தில்,இதுவரை மொத்தம் 23,51,463 மாதிரிகள் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
Advertisment
Advertisements
அதன்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 6,986 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,13,723 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு 85 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவரின் மொத்த எண்ணிக்கை 3,494 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று 5,471 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், மாநிலத்தில் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த என்ணிக்கை, 1,56,526 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 53,703 ஆக உள்ளது என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 1,155 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை அடுத்து அதிகபட்சமாக, செங்கல்பட்டு -501, திருவள்ளூர் -480, விருதுநகர் -385, ராணிப்பேட்டை -367, காஞ்சிபுரம் -363, தூத்துக்குடி -248, கோவை -220, தேனி -217, குமரி -215, மதுரை -209, விழுப்புரம் -208, திண்டுக்கல்- 203, வேலூர் -196, நெல்லை-186, திருவண்ணாமலை - 176, கடலூர்-165, சேலம்-162, தஞ்சை-153, திருச்சி - 131, தர்மபுரி - 131, கள்ளக்குறிச்சி-125, புதுக்கோட்டை-113, திருவாரூர்-93, ராமநாதபுரம்-89, சிவகங்கை-88, தென்காசி-73, கிருஷ்ணகிரி-51, திருப்பத்தூர்-44, நாகை-36, ஈரோடு -34, திருப்பூர்-32, நீலகிரி -31, அரியலூர்-27, பெரம்பலூர் - 26, கரூர்-12, நாமக்கல் -9 என்ற அளவில் கொரோனா வைரஸ் தொற்று பதிவாகி உள்ளது.
சென்னையில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை ஒரு நிலையான அளவில் பதிவாகி வரும் நிலையில், சென்னைக்கு வெளியே செங்கல்பட்டு, திருவள்ளூர், விருதுநகர், ராணிபேட்டை, காஞ்சிபுரம் தூத்துக்குடி, கன்னியாகுமரி , மதுரை ஆகிய பல மாவட்டங்களிலும் கனிசமான அளவில் கொரோனா வைரஸ் தொற்று பதிவாகி வருவது சுகாதராத்துறையினருக்கு கவலையளிக்கும் விஷயமாக உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"