தமிழகத்தில் இன்று 4,231 பேருக்கு கொரோனா; தென் மாவட்டங்களில் தொற்று அதிகரிக்கிறதா?
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,231 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,26,582 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,231 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,26,582 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,231 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,26,582 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Advertisment
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 4,231 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,26,582 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 3,700 - 3,900-குள் பதிவாகி வந்த நிலையில் இன்று மீண்டும் 4,000க்கு மேல் பதிவாகி உள்ளது.
Advertisment
Advertisements
கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல், கைகளைக் கழுவுதல் உள்ளிட்ட நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. மேலும், தினசரி கொரோனா தொற்று என்ணிக்கை, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கை உள்ளிட்ட புள்ளிவிவரங்களை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.
அதன்படி, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 4,231 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,26,582 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,765ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 100 கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்களில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 41,038 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை 14 லட்சத்து 28 ஆயிரத்து 360 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 3,994 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பினர். அதே நேரத்தில் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் 46,652 பேர்கள் உள்ளனர் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 1,216 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இன்று கொரோனா தொற்றில் இருந்து 2700 பேர் குணமடைந்தனர். அதே நேரத்தில் கொரோனா பாதிப்பால் 23 உயிரிழந்தனர்.
சென்னைக்கு அடுத்து, அதிகபட்சமாக இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் 364, விருதுநகர் 289, மதுரை 262, கள்ளக்குறிச்சி 254, தூத்துக்குடி 196, திருநெல்வேலி 110, செங்கல்பட்டு 169, கோவை 98, திருப்பூர் 93, கன்னியாகுமரி சேலம் 92, தேனி 90, வேலூர் 87, ராணிப்பேட்டை 79, திருவண்ணாமலை 70, காஞ்சிபுரம் 67 என கொரோனா வைரஸ் தொற்று பதிவாகி உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று சென்னையை ஒட்டியுள்ள வட மாவட்டங்களில் மட்டுமே அதிக எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் தொற்று பதிவாகி வந்த நிலையில் இன்று தென் மாவட்டங்களிலும் மேற்கு மாவட்டங்களிலிலும் கொரோனா வைரஸ் தொற்று கணிசமான அளவில் அதிக எண்ணிக்கையில் பதிவாகி உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"