தமிழகத்தில் இன்று புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 1ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 65 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,450ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் நேற்று கொரோனா வைரஸ் தொற்று மொத்த எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது. இந்தியாவில் தேசிய சராசரியைவிட வேகமாக கொரோனா அதிகரிக்கும் முதல் 10 மாநிலங்களின் பட்டியலில் தமிழகமும் உள்ளது.
இருப்பினும், தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுபடுத்த தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. தமிழக்தில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளையுடன் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழக அரசு இன்றைய கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை, உயிரிழப்பு, குணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஆகிய புள்ளிவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 1ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 94 கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்களில் இன்று 35,426 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மாநிலத்தில் மொத்தம் 12 லட்சத்து 49 ஆயிரத்து 317 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 2,214 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 60,592 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
அதே நேரத்தில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் கிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை 44,956ஆக உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து 3வது நாளாக கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 4,000ஐ கடந்து பதிவாகியுள்ள நிலையில், சென்னையில் கொரோனா இதுவரை நடந்த மொத்த கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 1000ஐ தாண்டியுள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 1,842 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த என்ணிக்கை 66538 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், சென்னையில் கொரோனா பாதிப்பால் இன்று 37 பேர் உயிரிழந்ததன் மூலம் சென்னையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,033ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு மூலம் தெரியவந்துள்ளது.
சென்னையை அடுத்து அதிகபட்சமாக இன்று மதுரை மாவட்டத்தில் 352 பேருக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 215 பெருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.