தமிழகத்தில் ஒரே நாளில் 4,150 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 151 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா பாதிப்பால் இன்று 60 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 1,510 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக தினமும் பெரிய அளவில் தொற்று எண்ணிக்கை பதிவாகி வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 2 நாட்களாக 2000-க்கு குறைவாக பதிவாகி வருகிறது.
தமிழக அரசின் சுகாதாரத்துறை தினசரி கொரோனா கொரோனா வைரஸ் தொற்று என்ணிக்கை, உயிரிழந்தோர் எண்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கை உள்ளிட்ட புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறது.
அதன்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,150 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 151 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா பாதிப்பால் இன்று 60 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 1,510 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 95 கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்களில் இன்று 34,102 பேருக்கு கொரோன பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை 12 லட்சத்து 83 ஆயிரத்து 419 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
கோரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 2,186 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பினர். இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 62,778ஆக உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் தனிமைப் படுத்தப்பட்டவர்கள் 46,860 பேர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 1713 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியபட்டுள்ளது. சென்னைக்கு அடுத்து அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 308 பேர்களுக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 274 பேருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் 209 பேருக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் 152 பேருக்கும் வேலூர் மாவட்டத்தில் 179 பேருக்கும் விருதுநகர் மாவட்டத்தில் 113 பேருக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் 109 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 93 பேருக்கும், சிவகங்கை மாவட்டத்தில் 88 பேருக்கும் திருச்சி மாவட்டத்தில் 86 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள வட மாவட்டங்களில் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் பதிவாகி வந்த நிலையில், இன்று தென் மாவட்டங்களிலும் கணிசமான அளவில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.