தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,795 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 116 பேர் உயிரிழந்துள்ளனர். 6,384 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,795 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 116 பேர் உயிரிழந்ததையடுத்து, இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 6,123 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை, உயிரிழப்பு எண்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கை, பரிசோதனை எண்ணிக்கை உள்ளிட்ட புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறது.
அதன்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,795 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 55 ஆயிரத்து 449 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 136 பரிசோதனை மையங்களில் இன்று 67,720 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 39 லட்சத்து 13 ஆயிரத்து 523 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மாநிலத்தில் இன்று 65,592 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 37 லட்சத்து 78 ஆயிரத்து 249 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் இன்று ஒரே நாளில் 116 பேர் உயிரிழந்தனர். இதனால், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 6,123 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபர்கள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 53,155 பேர் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
அதே நேரத்தில், தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 6,384 பேர் குணமடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 96 ஆயிரத்து 171ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1186 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையை அடுத்து அதிகபட்சமாக கோவையில் 394 பேருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் 393 பேருக்கும், செங்கல்பட்டு - 315, சேலம் - 295, தேனி 288, கடலூர் - 238, காஞ்சிபுரம் - 257, விருதுநகர் - 184, வேலூர் - 175, திருநெல்வேலி - 151, ராணிப்பேட்டை - 146 என்ற அளவில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று 1186 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், பிற மாவட்டங்களில் 4,609 தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. சென்னையில் கொரோனா தொற்று 2 வாரங்களுக்கும் மேலாக தினசரி தொற்று 1,100 - 1,200க்குள் ஒரு நிலையான எண்ணிக்கையில் பதிவாகி வருகிறது. ஆனால், சென்னைக்கு வெளியே அதிக அளவில் மாறி மாறி பதிவாகி வருகிறது.
தமிழகத்தின் இன்றைய கொரோனா வைரஸ் தொற்று தினசரி அறிக்கையில், இன்று புதிதாக கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களின் 5,795 எண்ணிக்கையைவிட குணமடைந்தவர்கள் 6,384 பேர் என்ற எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.