டாக்டர் சைமன் இறுதி ஆசையை நிறைவேற்ற நீதிமன்றத்தை நாடுவேன்: ஆனந்தி சைமன்
உலக சுகாதார நிறுவனத்தின்படி, இறந்தவரின் உடலில் 3 மணிநேரங்கள் மட்டுமே, கொரோனா வைரஸ் வீரியத்துடன் இருக்கும். தனது கணவர் வேலங்காட்டில் புதைக்கப்பட்டு சில நாட்கள் ஆகிவிட்டன.
உலக சுகாதார நிறுவனத்தின்படி, இறந்தவரின் உடலில் 3 மணிநேரங்கள் மட்டுமே, கொரோனா வைரஸ் வீரியத்துடன் இருக்கும். தனது கணவர் வேலங்காட்டில் புதைக்கப்பட்டு சில நாட்கள் ஆகிவிட்டன.
coronavirus, dr.simon hercules, Lockdown,burial, kilpauk cemetry, chennai corportation, WHO, legal , pandemic,covid-19, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil
சென்னையில் கொரோனா தொற்றுக்கு பலியான டாக்டர் சைமனின் உடலை, சட்டரீதியாக கீழ்ப்பாக்கம் கல்லைற பகுதியில் மறு அடக்கம் செய்ய தான் தயாராக இருப்பதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
சென்னையின் முன்னணி நரம்பியல் டாக்டர் சைமன் ஹெர்குலிஸ். 550 வயதான இவர், தனியார் மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இதனிடையே, அவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
Advertisment
Advertisements
ஊரடங்கு உத்தரவு நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதால், சைமனின் உடலை எடுத்துக்கொண்டு சில பேர் மட்டுமே ஆம்புலன்சில் கீழ்ப்பாக்கம் கல்லறைக்கு சென்றனர். கொரோனா பாதிப்பில் இறந்தவரின் உடலை இங்கு புதைப்பதால், தங்களுக்கும் அந்த தொற்று ஏற்படும் எனக்கூறி அப்பகுதி மக்கள் உடலை புதைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒருகட்டத்தில், ஆம்புலன்ஸ் மற்றும் அதில் வந்தவர்கள் மீது கல்வீசித்தாக்குதல் நடத்தினர்.
இதனையடுத்து, வேலங்காடு பகுதியில் சைமனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தனது கணவரின் உடலை, கீழ்ப்பாக்கம் கல்லறையிலேயே புதைக்கப்பட வேண்டும் என்ற சைமனின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று மனைவி கோரிக்கை வைத்தார். இதுதொடர்பாக, அவர் முதல்வர் பழனிசாமியிடமும் கோரிக்கை வைத்தார்.
மறுப்பு : இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், ஒரு இடத்தில் புதைக்கப்பட்ட உடலை தோண்டி மீண்டும் மறுஇடத்தில் புதைப்பது என்பது பாதுகாப்பானதாக இருக்காது என்று அவர் தெரிவித்தார்.
தங்களது இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாவிடில், நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை. உலக சுகாதார நிறுவனத்தின்படி, இறந்தவரின் உடலில் 3 மணிநேரங்கள் மட்டுமே, கொரோனா வைரஸ் வீரியத்துடன் இருக்கும். தனது கணவர் வேலங்காட்டில் புதைக்கப்பட்டு சில நாட்கள் ஆகிவிட்டன. தற்போது அங்கிருந்து தனது கணவரின் உடலை தோண்டி, கீழ்ப்பாக்கம் கல்லறையில் புதைப்பதால், யாருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுவிடாது.
தனது கணவர், இந்த மக்களுக்காக அரிய சேவையை புரிந்துள்ளதோடு மட்டுமல்லாமல், அதற்காக தன்னுயிரையும் இழந்துள்ளார். அவரது இறுதி ஆசையான தனது உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் புதைக்க வேண்டும் என்ற அவரது விருப்பத்தை நிறைவேற்றி வையுங்கள் என்று அவரது மனைவி ஆனந்தி சைமன் மீண்டும் தனது கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.
அரசு, இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்...
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil