கொரோனா வைரஸ் தாக்குதல் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், சென்னை விமான நிலையத்துக்கு சீனாவில் இருந்து வந்த 8 பேர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவருக்கு விமான நிலையத்தில் பரிசோதனையின்போது காய்ச்சலும் ஜலதோஷமும் இருந்தது.
இதில் மற்ற ஐந்து நோயாளிகள் அனைவரும் இந்தியர்கள் அவர்களுக்கு ஃபுளு காயச்சல் போன்ற அறிகுறிகள் இருப்பதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தமிழக சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் ஊடகங்களிடம் கூறுகையில், இவர்கள் சீனாவின் குவாங்டாங் மாகாணத்திலிருந்து வந்தவர்கள். அது கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான சீனாவின் வுஹான் மாகாணத்திலிருந்து சுமார் 800 கி.மீ. தொலைவில் உள்ளது. அவர்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் டவர் 2 பிளாக்கில் உள்ள தனி வார்டுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.” என்று கூறினார்.
அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற துணை மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு முகமூடிகள், கையுறைகள், பிற தனிப்பட்ட பாதுகாப்பு உடைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
நாசி சுத்தப்படுத்துபவை உள்ளிட்ட மாதிரிகள் பரிசோதனைக்காக கிண்டியில் உள்ள தடுப்பு மருத்துவத்திற்கான கிங் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. பரிசோதனை முடிவுகள் இன்று வரும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று பொது சுகாதார இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி தெரிவித்தார். மேலும், அவர், “குறைந்தபட்சம் 700 பேர் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளனர்” என்று அவர் கூறினார்.
இந்திய விமான நிலைய ஆணையம், சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வருகிற பயணிகளை சென்னை விமான நிலையத்தில் கண்காணித்து பரிசோதனை செய்து வருகிறது. சிங்கப்பூர், தாய்லாந்து நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பல நோயாளிகளுக்கு இருந்துவருகிறது.
விமான நிலைய சுகாதார அமைப்பு பரிசோதனைக்குப் பின் வழிகாட்டுதல்களையும் திருத்தியுள்ளது. மேலும், கடந்த 14 நாட்களில் சீனாவுக்கு பயணம் செய்தவர்களை அல்லது நாவல் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களை 14 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்குமாறு பயணிகளுக்கு தொடர்பு கொண்டு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள், ஒரு தனி அறையில் தூங்கவும் மற்ற குடும்ப உறுப்பினர்களுடனான தொடர்பைக் குறைக்கவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், சீனாவில் இருந்து வந்த 12 பேரிடம் நடத்தப்பட்ட சோதனை முடிவில், தமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.