Chennai Full Lockdown : கொரோனா வைரஸின் பரவலை தடுக்க, சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகரங்களில் நாளை முதல் 29-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட இருக்கிறது. நேற்று மாலை இந்த அறிவிப்பு வெளியான நிலையில் இன்று காலை முதலே சென்னையின் பெரும்பாலான இடங்களில் அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட்டம் அலைமோதியது. சில இடங்களில் சமூக விலகலை மறந்து மக்கள் கூடினர். ஏற்கனவே ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு அத்தியாவசிய கடைகளும் செயல்படாது என அறிவிக்கப்பட்டது. இதனால் மளிகை மற்றும் காய்கறிகளை வாங்க மக்கள் அலை மோதினர். இன்னும் சில இடங்களில் சாதாரண தினம் போல போக்கு வரத்து நெரிசலும் ஏற்பட்டது. அந்தப் படங்களை இங்கே பதிவிடுகிறோம்.
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் கூடிய கூட்டம்.
சமூக விலகலை மறந்து, கோயம்பேட்டில் முண்டியடித்த மக்கள்.
தாம்பரத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்
கொரோனா தொற்றின் மூல காரணத்தை மறந்து பொருட்கள் வாங்குவதில் பிஸியான சென்னைவாசிகள்.
அத்தியாவசிய பொருட்களை வாங்க வெயிலில் காயும் மக்கள்
பொருட்கள் வாங்க வரிசையில் நிற்கும் மக்கள்.
சென்னை, மேற்கு மாம்பலத்தில் கூடிய கூட்டம்.
வழக்கத்தை விட அதிகமான நபர்கள் இன்று பொது வெளியில் நடமாடியதை பார்க்க முடிந்தது.
சில இடங்களில் சாலைகள் முடக்கப்பட்டன.
கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் இருக்கும் தெருக்கள் முடக்கப்பட்டிருந்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”