Advertisment

கொரோனா வைரஸ்: இன்று 5 முக்கிய செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்றுநோயை ஒட்டி பல்வேறு செய்திகள் ஒவ்வொரு நாளும் பல்வேறு செய்திகள் வெளியாகிறது. அவற்றில் முக்கியமான செய்திகளை தொகுத்து ஐ.இ தமிழ் வாசகர்களுக்கு அளிக்கிறோம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus headline news, covid-19 cases rates, coronavirus report, கொரோனா வைரஸ், முக்கிய செய்திகள், tamil nadu coronavirus report,ஐ.என்.எஸ் ஜலஷ்வா கப்பல், அண்ணா பல்கலைக்கழகம், coronavirus daily report, coronavirus top 5 news today, ins jalashwa ship, anna university

கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை இந்திய அளவிலும் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்க 5-ம் கட்ட பொதுமுடக்கம் சில தளர்வுகளுடன் அமலில் உள்ள நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

Advertisment

கொரோனா வைரஸ் தொற்றுநோயை ஒட்டி பல்வேறு செய்திகள் ஒவ்வொரு நாளும் பல்வேறு செய்திகள் வெளியாகிறது. அவற்றில் முக்கியமான செய்திகளை தொகுத்து ஐ.இ தமிழ் வாசகர்களுக்கு அளிக்கிறோம்.

இன்று முக்கிய 5 செய்திகள்

*தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரேநாளில் புதிதாக 1,515 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31,667 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் இன்று 18 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் கொரோனா உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 269 ஆக உயர்ந்துள்ளது.

*இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். ஜலஷ்வா கப்பல் மாலத்தீவில் இருந்து 700 இந்தியர்களை அழைத்துக்கொண்டு இன்று தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்தது. இதில் வந்த பயணிகள் பாதுகாப்பாக இறக்கப்பட்டனர்.

*முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசின் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து ஊடகங்கள் மூலம் மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, கொரோனா வைரஸுக்கு எதிரானா போரில் நாம் வெற்றி பெறுவோம் என்பதில் ஐயம் இல்லை என்று நம்பிக்கை தெரிவித்தார்.

*கொரோனா பொது முடக்கத்தால் கல்வி நிறுவனங்கள் அனைத்தும்

மூடப்பட்டுள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் இறுதியாண்டு மாணவர்களுக்கு நடத்தவேண்டிய இறுதி செமஸ்டர் தேர்வினை ஆன்லைன் முறையில் நடத்த பரீசிலித்து வருகிறது. ஆன்லைன் முறையில் தேர்வுகள் நடத்தப்பட்டாலும், கிராமப்புற மாணவர்களின் வசதிக்காக நேரடியாகவும் தேர்வுகள் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Coronavirus Corona Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment