/tamil-ie/media/media_files/uploads/2020/06/a141.jpg)
covid 19 chennai, corona in chennai, corona chennai, chennai news, tamil nadu news, latest tamil news, corona in tamil nadu, கொரோனா, தமிழக செய்திகள், சென்னை செய்திகள்
COVID-19 Chennai: வடசென்னையில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தங்கியிருந்த 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வடசென்னை ராயபுரம் எஸ்என் செட்டி தெருவில் சிறுவர் சீர்திருத்த பள்ளி உள்ளது. இங்கு ஆதரவற்றவர்கள், குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறுவர்கள் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். இங்கு 50க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தங்கி உள்ளனர். இவர்கள் சென்னை தமிழகம் மற்றும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள்.
மேற்கு வங்கம், ஜார்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களை சேர்ந்த சிறுவர்களும் உள்ளனர். அனைவரும் எட்டு முதல் 17 வயது சிறுவர்களே.
சென்னையால் பாதிக்கும் 3 மாவட்டங்கள் - புதிய கட்டுப்பாடு உத்தி
சீர்திருத்தப் பள்ளி என்று அழைக்கப்படும் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து வெளியே வர முடியாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக இருக்கும். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து இவர்கள் வெளியே வந்ததும் இல்லை. இவர்களை உறவினர்கள் பார்த்ததும் இல்லை.
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தங்கியுள்ள சிறுவர்களுக்கு காய்ச்சல் மற்றும் சளி இருந்ததால் கொரோனா தொற்று இருக்கலாம் என்பதால் சுகாதாரத்துறையினர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பரிசோதனை செய்தனர். அதில் நேற்று முன்தினம் 20 சிறுவர்களுக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது . மேலும் சிறுவர்களை பரிசோதனை செய்ததில் நேற்று 15 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட சிறுவர்களை தண்டையார்பேட்டையில் உள்ள அரசு புறநகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் - தமிழக அரசு நிர்ணயம்
மேலும் நோய் தொற்று பரவாமல் உள்ள சிறுவர்களை அருகிலுள்ள ஆதரவற்ற பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இங்கு தங்கியிருந்த சிறுவர்களுக்கு எப்படி நோய்த்தொற்று வந்தது என்பது கேள்விக்குறியாக உள்ளது. சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கொரோனா வைரஸ் எப்படி பரவியது என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு வருகின்றனர்.
"சிறுவர்களுக்கு கை சுத்திகரிப்பு மற்றும் சோப்பு விநியோகம் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம், அவர்களுக்கு சுய சுகாதாரம் குறித்து கல்வி கற்பித்தாலும், அவர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் எப்படி பரவியது என்பது தெரியவில்லை. தனி நபர் இடைவெளி கடைபிடிக்காமல் இருந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.