Tamilnadu corona daily report : சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,116 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், சென்னை மாநகராட்சியில் கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 20,000-ஐ நெருங்கியது.
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,116 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், சென்னை மாநகராட்சியில் கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 20,000-ஐ நெருங்கியது.
Advertisment
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நேற்று மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 232 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 1,116 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19,809 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. . நாட்டிலேயே கொரோனா பரிசோதனை அதிகம் மேற்கொள்ளும் மாநிலங்களின் வரிசையில் முதலிடத்தில் தமிழகம் தான் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 5 லட்சம் அளவிற்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஜூன் 5ம் தேதியில் 1,438 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக தெரிவித்தது. இதனனையடுத்து, கொரோனா மொத்த பாதிப்பு 28,694 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 72 பரிசோதனை மையங்கள் மூலமாக நேற்று ஒரு நாளில் 15,692 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 560,673 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 861 பேர் நோயில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15,762 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil