தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து மூன்றாவது நாளாக ஆயரத்தைத் தாண்டியது.கடந்த 24 மணி நேரத்தில் 1,091பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,586 ஆக அதிகரித்துள்ளது.
Advertisment
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 பேர் நேற்று உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 197 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் நேற்று மட்டும் புதிதாக 809 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,585 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. . நாட்டிலேயே கொரோனா பரிசோதனை அதிகம் மேற்கொள்ளும் மாநிலங்களின் வரிசையில் முதலிடத்தில் தமிழகம் தான் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 5 லட்சம் அளவிற்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஜூன் 2ம் தேதியில் 1,091 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக தெரிவித்தது. இதனனையடுத்து, கொரோனா மொத்த பாதிப்பு 24,586 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 72 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று மட்டும் 11,094 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று உள்ளவர்களில், 1378 பேர் 12 வயதுக்குட்பட்டவர்கள்
20,857 பேர், 13 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள்
2,351 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் 536 பேர் நோயில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குனமடைந்தவர்களின் எண்ணிக்கை 13,706 ஆக உயர்ந்துள்ளது.
நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் கொரோனா தொற்று இல்லாத மாவட்டங்கள் ஆகியுள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil