கொரோனா வைரஸ் பாதிப்பை உறுதிப்படுத்த உதவும் ரேபிட் டெஸ்ட் கருவிகள் 5 லட்சம் எண்ணிக்கையில், சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வந்துள்ளன. தமிழகமும், பெருமளவு, ரேபிட் டெஸ்ட் கிட்களை ஆர்டர் செய்துள்ளதால், மத்திய அரசு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிடையே இதை பிரித்து வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,380 ஆக உயர்ந்துள்ளது. கோவிட்-19க்கு நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 414 ஆக உள்ளது. 1488 பேர் குணமாகியுள்ளனர் / குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
கோவிட்-19 நோய்த் தொற்றைக் கையாள நாட்டில் ஒவ்வொரு மாவட்டமும் பின்வருமாறு வகைப்படுத்தப் பட்டுள்ளன: நோய் பரவ அதிக வாய்ப்புள்ள (ஹாட்ஸ்பாட்) மாவட்டங்கள், பாதிப்புகள் பதிவான, நோய் பரவ அதிக வாய்ப்பில்லாத (ஹாட்ஸ்பாட் அல்லாத) மாவட்டங்கள்,
பசுமை மண்டல மாவட்டங்கள்.
நோய் கட்டுப்படுத்தும் மண்டலங்களில், அத்தியாவசிய சேவைகள் தவிர, மற்ற நகர்வுகள் மற்றும் செயல்பாடுகள் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஊரடங்கின் போது, விவசாயிகளுக்கும், விவசாயத்துக்கும் உயர் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை குடியரசு துணைத்தலைவர் திரு. எம்.வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார். இந்த ஊரடங்கு முடக்க காலத்தில், வேளாண் நடவடிக்கைகளை சுமுகமாக மேற்கொள்ளவும், வேளாண் விளைபொருள்களை சந்தைக்குக் கொண்டு செல்லும் போக்குவரத்து வசதிகளை செய்து தரவும் உதவ வேண்டுமென்று அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.
மேலும், இதுபோன்ற முக்கிய செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.
Live Blog
Coronavirus Updates : கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.
உலக சுகாதார அமைப்புக்கான நிதி நிறுத்தப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளதற்கு, அந்த அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், நிதி இடைவெளிகளை நிரப்பவும், பணிகளை தடையின்றி தொடர்வதற்கும், கூட்டாளர்களுடன் தொடர்ந்து பேசி வருவதாக தெரிவித்தார். மேலும் கொரோனா வைரசுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இழந்த பொருளாதாரத்தை திரும்பப் பெற, விளையாட்டு போட்டிகளை நடத்துவது அவசியம் என, அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிபர் டிரம்ப், மீண்டும் விளையாட்டு போட்டிகளை காண ஆர்வமுடன் இருப்பதாக தெரிவித்தார். முன்னதாக பொருளாதாரத்தை சீரமைப்பது குறித்து, தொழில்துறை அதிகாரிகளுடன் டிரம்ப் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்தூரில் 110 பேர் உட்பட மத்திய பிரதேசத்தில் இன்று புதிதாக 142 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஒட்டுமொத்தமாக இந்தூரில் 701 பேர் உட்பட மத்திய பிரதேசத்தில் 1,115 பேருக்கு கொரோனா பாதிப்பு..
இதுவரை 53 பேர் பலி; 70 பேர் குணமடைந்துள்ளனர்..
திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறி குறித்து பரிசோதனை மேற்கொள்ளும்போது மாதிரிகளை பாதுகாப்பாக எடுப்பதற்காக கோவிட்விஸ்க் அறை துவங்கப்பட்டது. இதனை கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பரிசோதனை செய்யும் முறைகளை பார்வையிட்டார்.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை இந்தியாவில் 12,759 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 420 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகளவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு இதுவரை 2,919 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 187 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தில் தற்போது கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட இடமாக மும்பை நகரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான தாராவி பகுதி மாறிவருகிறது. இங்கு இதுவரை 86 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. பலி எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது. மக்கள் மிக நெருக்கமாக வசித்து வரும் இப்பகுதியில் கொரோனா மேலும் பரவும் அபாயம் நிலவுகிறது.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பருவ தேர்வுகள் மறு உத்தரவு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ்பாபு தெரிவித்துள்ளார். மறு தேர்வுக்கான அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இந்த கல்வியாண்டின் பருவம் வரும் 30 ஆம் தேதியுடன் முடிவு பெறுவதாகவும் அவர் அறிவித்தார். எனவே இந்த பருவத்திற்கான நடத்தாத பாடங்களை ஆன்லைன் மூலமாக கற்பிக்க பேராசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் பேட்டி: ரமலான் நோன்பு கஞ்சிக்கான அரிசி அந்தந்த பள்ளிவாசல்களுக்கே 19ம் தேதிக்குள் வழங்கப்படும்; தன்னார்வலர்களின் உதவியுடன் தகுதிவாய்ந்த குடும்பங்களுக்கு பள்ளிவாசல்களே சிறு சிறு பைகளில் அரிசியை பிரித்து அளிக்கும் என்று கூறினார்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து விமான டிக்கெட்களுக்கும் முழு தொகையும் அளிக்க வேண்டுமென மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் விமான
நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவலைத்தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் அனைத்து கல்லுரி, பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கல்வி ஆண்டின் தொடக்கத்தின்போதுஇந்த ஆண்டில் நடத்தப்பட வேண்டிய கல்லூரி பருவத்தேர்வுகள் நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கலை, அறிவியல்,பொறியியல் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளுக்கும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தேர்வுகள் நடக்கும் என்று உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
முதல்வர் பழனிசாமி பேட்டி: ஏழைகளுக்கு எந்த நோயும் இல்லை. கொரோனா பணகாரர்களால் இறக்குமதி செய்யப்பட்ட தொற்று நோய். வெளிநாடு சென்று திரும்பிவந்தவர்களால்தான் கொரோனா தொற்று நோய் இறக்குமதி செய்யப்பட்டது. இதுவரை எந்த மாநிலத்திற்கு ரேபிட் கிட் கருவி வந்து சேரவில்லை. பத்திரிகையாளர்கள் மற்றும் செய்தியாளர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டால் அரசே மொத்த செலவையும் ஏற்கும் என்று கூறினார்.
முதல்வர் பழனிசாமி பேட்டி: கொரோனா பரவலின் தீவிரத்தை முன்வைத்து 3 வண்ணங்களாக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தமிழக மற்றும் பிறமாநில தொழிலாளர்கள் யாரும் உணவின்றி வாடவில்லை; தினமும் 54,000 ஆதரவற்றோருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த 3 நாட்களில் தமிழகத்தில் புதிதாக கொரோனா தொற்று எதுவும் இருக்காது; அரசின் நடவடிக்கைகளால் இன்னும் சில நாட்களில் பாதிப்பு பூஜ்ஜியம் ஆகும். அரசின் நடவடிக்கைகளால் இன்னும் சில நாட்களில் பாதிப்பு பூஜ்ஜியம் ஆகும்; இன்னும் 15 நாட்களில் பாசிட்டிவ் அனைத்தும் நெகட்டிவ் ஆகிவிடும். ஐ.ஏ.எஸ் அதிகாரி கிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், ஊரடங்கு தளர்வு பற்றி அறிவிக்கப்படும் என்று கூறினார்.
முதல்வர் பழனிசாமி பேட்டி: இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துவிடும். தமிழகத்தில் காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாகக் கூறுவது தவறு. தமிழக அரசு துவரம் பருப்பு 500 மெட்ரிக் டன், மிளகு, கடுகு, சீரகம், வெந்தயம் 100 மெட்ரிக்டன் கொள்முதல் செய்து விலை உயர்வு தடுக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்கள் வாங்கும் அளவுக்கு காய்கறிகளின் விலையை அரசு கட்டுப்படுத்தியுள்ளது என்று கூறினார்.
முதல்வர் பழனிசாமி பேட்டி: தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் கொரோனா தொற்று பரவும் தீவிரம் குறைந்துள்ளது. கொரோனா தொற்று எளிதாக பரவும் என்பதால் மிகப்பெரிய சவாலாக உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 3,371 வென்டிலேட்டர்கள் உள்ளன. மத்திய அரசு கூறுவதற்கு முன்னரே தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு துரிதப்படுத்தியது. தமிழகத்தில் கொரோனாவை தடுக்க 12 குழுக்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றை தடுப்பதுதான் மிகவும் முக்கியம்; அதைத்தான் அரசு செய்து வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கான அனைத்து மருத்துவ உபகரணங்களும் தமிழகத்தில் போதிய அளவு உள்ளன என்று கூறினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி பேட்டி: தமிழகத்தில் இன்று மேலும் 25 பேருக்கு கொரோன வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோ எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 1267 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 180 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என்று கூறினார்.
கோவிட் -19 அவசர நிலையை சமாளிப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து பேசிய ராகுல் காந்தி,"மாநிலம் மற்றும் மாவட்டம் அளவில் தான் கோவிட்- 19 போராட்டம் முன்னெடுக்க வேண்டும். கேரளா அரசு நிர்வாகம் திறன்பட வேலை செய்த காரணத்தால் தான், வயநாட்டில் வெற்றி கிடைத்தது.பிரதமர் மாநிலங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகங்களுக்கு அதிமாரமளிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
அரசாங்கத்தின் கடந்தகால நடவடிக்கைகள் குறித்து தற்போது விவாதிக்க விரும்பவில்லை என்று கூறிய காந்தி, " இந்த அவசரநிலையை எதிர்த்துப் போராட நாடு ஒன்று சேர வேண்டும்" என்றும் தெரிவித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி : " இந்தியாவிலும், அயல்நாட்டிலும் உள்ள நிபுணர்களிடம் கோவிட் -19 தடுப்பு நடவடிக்கை குறித்து பேசி வருகிறேன். பொது முடக்கம் ஒரு தற்காலிக நிறுத்தமே தவிர, இது எந்த வகையிலும் முழுமையான தீர்வாகாது. இந்த பொது முடக்க காலத்தில், சுகாதார வளங்களை அதிகரித்தல், பரிசோதனைகளை மேம்படுத்துதல், கோவிட்- 19 தொடர்பான சிகிச்சைக்கு மருத்துவமனைகளை தயார் செய்தல் போன்றவைகளில் கவனம் செலுத்த வேண்டும். கோவிட்- 19 நோய் தடுப்புக்கு உண்மையான ஆயுதம் "பரிசோதனை" என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
கோவிட்- 19 பரிசோதனையை அதிகப்படுத்த ராகுல் காந்தி மத்திய அரசை வலியுறித்தினார்.
LIVE: Special Congress Party Briefing by Shri @RahulGandhi via video conferencing.#RahulSpeaksForIndia https://t.co/B7FzeIuiXK
— Congress (@INCIndia) April 16, 2020
கொரோனா வைரஸ் தொற்று குறித்து காங்கிரஸ் கட்சியின் சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி பதில் அளித்து வருகிறார்.
கொரோனா பரவல் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதையொட்டி எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பது குறித்தும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் முதல்வர் ஆய்வு மேற்கொண்டார்.
கொரோனா தொற்று பரவி வரும் இந்த சூழ்நிலையில் மக்கள் தனிமையாக உணர்ந்தாலோ, எதிர்மறை எண்ணங்கள் தோன்றினாலோ, கொரோனா குறித்த அச்சம் ஏற்பட்டாலோ 044-26425585 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் பொது மக்களின் மன அழுத்தத்தையும், அச்சத்தையும் போக்க உதவுவர் என்றும் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் மாவட்ட ஆட்சியர் திருமதி பல்லவி பல்தேவ் அறிவுரையின்படி நிர்வாக அதிகாரி சிவக்குமார் மேற்பார்வையில் பெட்ரோல் பங்க்கில் கிரிமி நாசினி தெளிக்கப்பட்டது.#COVID19 #Corona #TamilNadu #COVID19outbreak #COVID_19 #StayHome #StaySafe #Lockdown2 pic.twitter.com/RO4UaoVEfg
— AIR News Chennai (@airnews_Chennai) April 16, 2020
நெல்லை டவுணில் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, குப்பைகளும் சேகரிக்கப்பட்டது.
AIR Pic: Thirumalaikumar#COVID19 #Corona #TamilNadu #TNAgainstCorona #COVID19outbreak #COVID_19 #TNGovt #StayHome #StaySafe #Lockdown2 pic.twitter.com/whGff0ffAp
— AIR News Chennai (@airnews_Chennai) April 16, 2020
கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவு நினைக்கும் தன்னார்வ அமைப்புகள், சமூக அக்கறை கொண்ட மனிதர்கள், அதிகாரிகளிடம் அனுமதி பெற தேவையில்லை என்றும், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாலே போதும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஊரடங்கு உத்தரவு காரணமாக சிரமத்துக்குள்ளாகியுள்ள மக்களுக்கு உணவு, அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை நேரடியாக வழங்க அரசியல் கட்சிகளுக்கு தடை விதித்த உத்தரவை எதிர்த்து தி.மு.க உயர்நீதிமன்றத்தில் மனு தொடுத்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலகளவில், 20 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 1,30,000 க்கும் அதிகமான மக்கள் மரணமடைந்துள்ளனர். அமெரிக்காவில், கொரோனா வைரஸ் தொற்று மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 31,000 ஐ நெருங்குகிறது. அதற்கு அடுத்தபடியாக இத்தாலி (21,067), ஸ்பெயின் (18.056) போன்ற நாடுகள் உள்ளன.
கடந்த புதன்கிழமை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட பெங்களூரைச் சேர்ந்த 66 வயது நிரம்பிய ஒருவர் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம், கர்நாடாக மாநிலத்தில் கோவிட் -19 தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது .
இறந்தவர் கடுமையான கடுமையான தீவிர மூச்சுத் திணறல் உடல் நலக் குறைபாடு (சாரி நோய்) உடையவர் என்றும், அவர் மார்ச் 12 அன்று மணிப்பூரிலிருந்து பெங்களூருக்கு பயணம் செய்திருந்தார்' என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 57 வயது நிரம்பியவர் உயிர் இழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பரிசோதனையின் முடிவின் அடிப்பைடயில், இது கோவிட்- 19 தொடர்பான மரணம் என்பது உறுதி செய்யப்படும்.
கொரோனா வைரஸ் காரணமாக காப்பீட்டுக் திட்டத்தை புதுப்பிப்பதற்கான கட்டணம் செலுத்தும் தேதியை மே 15 வரை நீட்டிக்கும் அறிவிப்பை நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மார்ச் 25 முதல் மே 3 வரை காலங்களில் கட்டப்படும் மருத்துவம் மற்றும் மோட்டார் காப்பீட்டாளர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நோயாளிகள் இடையே, நேரடியாகப் பணியாற்றி வரும் மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களைப் பாதுகாக்கும் பிபிஇ எனப்படும் தனிநபர் பாதுகாப்பு கருவிகளை இந்திய ரயில்வேயின் உற்பத்தி பிரிவுகள், பணிமனைகள் மற்றும் தொழில் பிரிவுகள் உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளன. இந்திய ரயில்வே, ஏப்ரல் மாதத்தில் 30,000க்கும் அதிகமான பிபிஇ உபகரணங்களைத் தயாரிக்கும். மே மாதத்தில் 1,00,000 கருவிகளைத் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights