Corona Updates: சென்னையில் அனைத்து தனிக்கடைகளும் திறக்க அனுமதி – மாநகராட்சி அறிவிப்பு

Coronavirus Latest Updates: இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு, அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்

By: May 5, 2020, 10:43:39 PM

Covid-19 Cases Update : கொரோனாவின், ‘ஹாட் ஸ்பாட்’ ஆக, சென்னை மாறியுள்ளதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு, முழு வீச்சில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், கல்லுாரி மற்றும் வளாகங்களில், நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, டாக்டர்கள் சுறுசுறுப்புடன் பணியாற்றி வருகின்றனர். கோயம்பேடு மார்க்கெட்டில் ஏற்பட்ட தொற்று காரணமாக, மற்ற மாவட்டங்களிலும், நோய் பரவல் அதிகரித்து வருகிறது.

கொரோனா போர்வீரர்களுக்கு கப்பற்படை மரியாதை

நாடு முழுதும், 42 ஆயிரத்து, 533 பேர், கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதில், 11 ஆயிரத்து, 706 பேர், குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்; 1,373 பேர் பலியாகி உள்ளனர்.கடந்த, 24 மணி நேரத்தில், 1,074 பேர், குணமடைந்துள்ளனர். இதன் மூலம், குணமடைவோர் விகிதம், 28 சதவீதமாக உயர்ந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog
Corona latest news updates : உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்
22:43 (IST)05 May 2020
மே 29ம் தேதி வரை ஊரடங்கு

தெலுங்கானா மாநிலத்தில் மே 29ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவிப்பு.

22:23 (IST)05 May 2020
அனைத்து தனிக்கடைகளும் திறக்க அனுமதி

"சென்னையில் நாளை அனைத்து தனிக்கடைகளும் திறக்க அனுமதி; வணிக வளாகங்கள், ஷாப்பிங் மால் திறக்க அனுமதியில்லை!"

- சென்னை மாநகராட்சி அறிவிப்பு

22:02 (IST)05 May 2020
வதந்திகளை நம்பாதீர்கள் - ஆவின் பால்

ஆவின் பால் பண்ணைகள் மற்றும் அலுவலகங்களில் நூறு சதவிகிதம் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கு காலத்தில் அத்தியாவசியப் பொருளான பால் இல்லாமல் பொதுமக்கள் கஷ்டப்படக்கூடாது. அதனால் இந்த இக்கட்டான நேரத்தில் ஆவின் பால், பொதுமக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற முதல்வரின் உத்தரவின்படி, ஆவின் நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.

பால் பண்ணையின் உள்பகுதி மற்றம் வெளிப்பகுதி கிருமிநாசினி மூலம் தினமும் முழுமையாகச் சுத்தம் செய்யப்படுகிறது. இந்தப் பணியாளரின் பிரச்சினைக்குப் பிறகு, சுத்தப்படுத்தும் பணியில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.

- ஆவின் பால் நிர்வாகம்

21:36 (IST)05 May 2020
20 மாவட்டங்களில் கொரோனா

தமிழகத்தில் மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு விவரம்!

தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களில் கொரோனா தொற்று உறுதியானது...

21:12 (IST)05 May 2020
விசிக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் திறப்பை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம். நாளை அவரவர் வீடுகள் முன்பு டாஸ்மாக் கடைகள் திறக்க வேண்டாம் என முழக்கம் எழுப்புவோம் என திருமாவளவன் அறிவித்துள்ளார்.

- திருமாவளவன் அறிவிப்பு

20:53 (IST)05 May 2020
கடைகளைத் திறக்க அரசு வெளியிட்ட அறிவிப்பு தெளிவாக இல்லை - டிடிவி தினகரன்

தமிழகம் முழுவதும் கடைகளைத் திறக்க அரசு வெளியிட்ட அறிவிப்பு தெளிவாக இல்லாததால், சென்னை உள்ளிட்ட பல இடங்களில் வணிகர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்படுவதாக செய்திகள் வருகின்றன.

அரசு திறக்கச் சொல்கிறது; காவல்துறையினர் மூடச் சொல்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது?’ என்று வணிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். இது குறித்து தமிழக அரசு உடனடியாக தெளிவுப்படுத்தி, தேவையற்ற சட்டம் – ஒழுங்கு பிரச்னைகளைத் தவிர்க்க வேண்டும்.

மேலும் அந்தந்தப் பகுதிகளிலுள்ள வணிகர்களுக்கும், அரசு நிர்வாகத்திற்கும், காவல்துறைக்கும் இடையில் முழுமையான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்துகிறேன்.

- டிடிவி தினகரன்

20:28 (IST)05 May 2020
இறக்குமதிக்கான மாற்று பற்றிய கொள்கை

உலக அளவிலான கோவிட்-19 நோய் காரணமாக உருவாகியுள்ள, புதிய பொருளாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இறக்குமதிக்கான மாற்று பற்றிய கொள்கையை உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக, மத்திய சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME), சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று தெரிவித்தார்.

20:08 (IST)05 May 2020
மின் இணைப்பை துண்டிக்க கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்

மே 6-ம் தேதிக்குள் மின் கட்டண செலுத்த வேண்டும் என்ற இறுதிகெடுவை ரத்து செய்யக்கோரியும், ஜூலை 31ஆம் தேதி வரை மின் கட்டணத்தை வசூலிக்ககூடாது என வலியுறுத்தியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மே 18-ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தவில்லை என்றாலும், மின் இணைப்புகளை துண்டிக்க கூடாது என உத்தரவிட்டனர். மேலும் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

20:06 (IST)05 May 2020
அனுமதி ரத்து...

வீட்டு வேலை பணியாளர்களுக்கு பாஸ் வாங்கி வேலைக்குச் செல்லலாம் என்ற அனுமதி ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

19:45 (IST)05 May 2020
பலி எண்ணிக்கை 33

புதிதாக இன்று 2 பேர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு

இன்று கொரோனா பாதித்தவர்கள் கோயம்பேடு சந்தையுடன் தொடர்பில் இருந்தவர்கள்

19:44 (IST)05 May 2020
508 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா பாதிப்பு

* தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4058 ஆக அதிகரிப்பு

* சென்னையில் இன்று 279 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிப்பு

19:33 (IST)05 May 2020
இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - 24 மணி நேரத்தில் 195 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 46 ஆயிரத்து 433 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 900 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். ஒரே நாளில் 195 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 1020 பேர் குணமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

19:11 (IST)05 May 2020
பலர் வீட்டிற்கு அனுப்பிவைப்பு

அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வீட்டிற்கு அனுப்பிவைப்பு

* வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தல்

* கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து பலர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்

18:39 (IST)05 May 2020
4,000 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் தயார்

சென்னையில் 4,000 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளது.

அரசின் சரியான நடவடிக்கைகள் மூலம் கொரோனா தொற்று வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது

கண்ணின் இமை காப்பது போல் மக்களை காத்து வருகிறது தமிழக அரசு

- முதல்வர் பழனிசாமி'

18:30 (IST)05 May 2020
நிலவேம்பு கசாயம்..

கபசுர குடிநீரும், நிலவேம்பு கசாயமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படுகிறது

- முதல்வர் பழனிசாமி

18:28 (IST)05 May 2020
விலையில்லாமல் பொருட்கள்

"ரேஷன் கடைகளில் ஜூன் மாதமும் விலையில்லாமல் பொருட்கள் வழங்கப்படும்!" - தமிழக முதலமைச்சர் பழனிசாமி

18:25 (IST)05 May 2020
7 லட்சம் பேருக்கு உணவளித்து வருகிறோம்

அம்மா உணவகம் மூலமாக நாள் ஒன்றுக்கு 7 லட்சம் பேருக்கு உணவளித்து வருகிறோம் - முதல்வர்

18:24 (IST)05 May 2020
சொந்த ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கை...

வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை

- முதல்வர் பழனிசாமி

18:23 (IST)05 May 2020
குறுகிய தெருக்கள், மக்கள் தொகை அதிகம்

“சென்னையில் கொரோனா வேகமாக பரவ காரணம் குறுகிய தெருக்கள், மக்கள் தொகை அதிகம் உள்ளிட்ட காரணங்களால்தான்” - முதல்வர் பழனிசாமி

18:21 (IST)05 May 2020
3 வேளையும் கிருமிநாசினி

சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 3 வேளையும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது; அதிக மக்கள் கொண்ட பகுதி என்பதால் சென்னையில் வேகமாக கொரோனா தொற்று பரவுகிறது

- முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரை

18:19 (IST)05 May 2020
மருத்துவமனைகள் தயார்...

சென்னையில் 4,000 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளது

தமிழகத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை

- முதல்வர் பழனிசாமி

18:17 (IST)05 May 2020
மண்டல வாரியாக...

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா தடுப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது

- முதல்வர் பழனிசாமி

18:16 (IST)05 May 2020
இதுவரை 4 முறை ஆலோசனை

தமிழகம் முழுவதும் நோய் தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுக்கள் அமைப்பு; மாவட்ட ஆட்சியர்களுடன் இதுவரை 4 முறை ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி

18:13 (IST)05 May 2020
முதல்வர் பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு

“கொரோனா பரவலை தடுக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது” - தமிழக முதல்வர் பழனிசாமி

18:05 (IST)05 May 2020
25 பேருக்கு கொரோனா

கோயம்பேடு காய்கறி சந்தையில் இருந்து சென்றவர்கள் மூலம் விழுப்புரத்தில் இன்று 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,

17:50 (IST)05 May 2020
அடிப்படை வசதிகள் இருந்தால் மட்டுமே வியாபாரம்

நாளை மறுநாள் முதல் திருமழிசையிலிருந்து சென்னைக்கு காய்கறி விநியோகிக்க திட்டமிட்டிருந்தது அரசு

கோயம்பேடு வியாபாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் அரசு

திருமழிசையில் பாதுகாப்பு, மற்றும் அடிப்படை வசதிகள் இருந்தால் மட்டுமே வியாபாரம் - கோயம்பேடு வியாபாரிகள்

8 ஆம் தேதி முடிவு அறிவிப்பதாக தெரிவித்த கோயம்பேடு வியாபாரிகள்

17:46 (IST)05 May 2020
காய்கறி வரத்து குறையும் அபாயம்

சென்னைக்கு இரண்டு நாட்கள் காய்கறி வரத்து குறையும் அபாயம்

* அடுத்த இரண்டு நாட்களில் காய்கறிகளின் விலை உயர வாய்ப்பு

* கோயம்பேடு சந்தையை திருமழிசைக்கு மாற்றுவதில் வியாபாரிகள் அதிருப்தி

17:39 (IST)05 May 2020
பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும்

வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும்

* புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தொடங்கும் - மத்திய அரசு

17:15 (IST)05 May 2020
கள்ளக்குறிச்சியில் 71 பேருக்கு கொரோனா

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் மூன்று பேருக்கு குணமடைந்து அவர்களது வீட்டில் தனிமை படுத்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி பகுதிகளை சேர்ந்த 23 கர்ப்பிணி பெண்கள் மற்றும் கோயம்பேடு தொடர்பில் உள்ளவர்கள் என மொத்தம் 71 பேருக்கு நோய்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது.

16:48 (IST)05 May 2020
விஜய் சேதுபதி ட்வீட்
16:28 (IST)05 May 2020
இந்தியாவில் 24 மணி நேரத்தில் 195 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 195 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

16:22 (IST)05 May 2020
சென்னையில் அதிகரிக்கும் கட்டுப்பாடு பகுதிகள்

சென்னையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாட்டு பகுதிகள் 230-ல் இருந்து 357ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

15:57 (IST)05 May 2020
செங்கல்பட்டில் இன்று 36 பேருக்கு கொரோனா

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா வேகம் எடுக்கும் நிலையில் அருகே உள்ள மாவட்டத்திலும் கொரோனா தீவிரமடைகிறது. நசரத்புரத்தில் 18 பேர், மதுராந்தகத்தில் 5 பேர், நந்திவரத்தில் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

15:24 (IST)05 May 2020
ஆவின் பால் பண்ணையில் மேலும் 6 பேருக்கு கொரோனா

சென்னையை அடுத்த மாதவரம் ஆவின் பால் பண்ணையில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு. இதனால் மாதவரம் ஆவின் பால் பண்ணையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. 

15:12 (IST)05 May 2020
எடப்பாடி பழனிச்சாமி உரை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, இன்று மாலை தொலைக்காட்சி மூலமாக தமிழக மக்களிடம் உரையாற்றுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. 

15:04 (IST)05 May 2020
மின்சார வாரியம் அறிவிப்பு

மின் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் வரும் 22 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

14:26 (IST)05 May 2020
மின் கட்டணம் வசூலிக்க இடைகால தடை

தமிழகத்தில் மின்கட்டணம் வசூலிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டிருப்பதால் மின் கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

14:09 (IST)05 May 2020
தமிழகத்தில் 711 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்

தமிழகத்தில் 711 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்ட வாரியாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. வ்வொரு வாரமும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

13:08 (IST)05 May 2020
ஜூலை 26ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு

ஜூலை 26ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். ஜெ.இ.இ. முதன்மைத் தேர்வுகள் ஜூலை 18 முதல் 23 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

12:46 (IST)05 May 2020
மே 18 வரை மின் கட்டணம் வசூலிக்க தடை

மே 18 வரை மின் கட்டணம் வசூலிக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மே 18 வரை மின் கட்டணம் செலுத்தாவிட்டாலும் இணைப்பை துண்டிக்க கூடாது என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

12:35 (IST)05 May 2020
வீட்டிலேயே சிகிச்சை – தமிழக அரசு முடிவு

கொரோனா அறிகுறி இல்லாமல் பாதிக்கப்பட்டால் வீட்டிலேயே சிகிச்சை வழங்கவும், பாதிக்கப்பட்டோரும் அவர்களை கவனித்துக் கொள்வோரும் ZINC-20 mg எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

12:12 (IST)05 May 2020
உலகின் மருந்தகமாகத் திகழும் இந்தியா - அணி சேரா மாநாட்டில் பிரதமர் மோடி

பிரதமர் மோடி, வீடியோ கான்ஃபரன்ஸில் நடைபெற்ற அணி சேரா இயக்க நாடுகளின் (Non-Aligned Movement (NAM)) கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அதில் அவர் பேசியதாவது, இந்தியா எப்போதும் உலக நாடுகளைத் தன்னுடைய குடும்பமாக நினைக்கும். நாங்கள், எங்கள் மக்களைப் போலவே உலக மக்கள் மீதும் அக்கறை கொண்டிருக்கிறோம். எங்களின் தேவைகள் போக, நாங்கள் உலகின் 123 நாடுகளுக்கு இந்த கொரோனா காலத்தில் மருந்துப் பொருள்களை அனுப்பியுள்ளோம். இதில் 59 நாடுகள் அணி சேரா இயக்க குழுமத்தில் உள்ள நாடுகள். அந்த வகையில் உலகின் மருந்தகமாக இந்தியா இருக்கிறது. மேலும், நாங்கள் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து உருவாக்கும் பணியிலும் இருக்கிறோம்” என்றார்.

11:41 (IST)05 May 2020
டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது- தமிழக அரசு

சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவும் நிலையில் நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

11:25 (IST)05 May 2020
இந்தியாவில் மாநிலவாரியாக கொரோனா பாதிப்பு, மரணங்கள்

இந்தியாவில் அதிக கொரோனா பாதிப்பு உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா தொடர்ந்து முன்னிலையிலேயே உள்ளது. 2வது இடத்தில் குஜராத் உள்ளது.

11:11 (IST)05 May 2020
டாஸ்மாக் திறப்புக்கு டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் எதிர்ப்பு

தமிழகத்தில் மே 7ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கும் அரசின் முடிவுக்கு டாஸ்மாக்க ஊழியர் சம்மேளனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

10:53 (IST)05 May 2020
4.16 லட்சம் பேர் கைது

தமிழகத்தில் தடையுத்தரவை மீறியதாக இதுவரை 4.16 லட்சம் பேர் கைது  செய்யப்பட்டுள்ளனர். 3.48 லட்சம் வாகனங்கள் பறிமுதல்  செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடமிருந்து ரூ4.16 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளாாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

10:34 (IST)05 May 2020
டாஸ்மாக் திறப்பு - கமல் கண்டனம்

டாஸ்மாக் மதுக்கடைகளை தமிழக அரசு திறக்கும் முடிவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

10:07 (IST)05 May 2020
அபிஜித் பானர்ஜியிடம் ராகுல் வலியுறுத்தல்

இந்தியாவில் ஊரடங்கு தளர்த்துவதற்கு முன்பாக, மக்களிடையே  கொரோனா பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிக முக்கியமான தேவை ஆகும் என்று நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியிடம் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

09:39 (IST)05 May 2020
ஒரேநாளில் 3900 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3900 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.195 பேர் மரணமடைந்துள்ளதாக மத்திய சுகாாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 46,433 ஆக உள்ளதாக மேலும் தெரிவித்துள்ளது.

09:09 (IST)05 May 2020
சென்னையில் மே 17 வரை 144 தடை அமல்

கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் சென்னையில் 144 தடை உத்தரவு வரும் 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் எச்சரித்துள்ளார்.

Corona latest news updates : கொரோனா பரிசோதனை அதிகம் நடத்துவதால், பாதிப்பு அதிகமாக தெரிகிறது. மக்கள் பதற்றமடைய தேவையில்லை,'' என, கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறினார்.

தி.மு.க.,வுடன் இணைந்து, ஏழை மக்களுக்கு உணவளிக்கும் தன்னார்வலர்களின் பங்களிப்பு, மிகவும் முக்கியமானது' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார். 'டுவிட்டர்' பக்கத்தில், அவர் கூறியிருப்பதாவது: கொரோனா பேரிடரில் இருந்து மீள, தன்னார்வலர்களின் பங்களிப்பு, மிகவும் முக்கியமானது. ஏழை, எளியோருக்கு உணவு முயற்சியில், தி.மு.க.,வுடன் இணைந்துள்ள, தன்னார்வ நிறுவனங்களுடன் உரையாடினேன். இவர்களின் முனைப்பு, இப்பேரிடரில் இருந்து மீண்டெழும் நம்பிக்கையை அளிக்கிறது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Web Title:Coronavirus live updates india lockdown modi chennai koyembedu

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X