முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று மாலை திடீர் நெஞ்சுவலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . தற்போது, எயம்ஸின் இருதய நோய் சிகிச்சைப் பிரிவில் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.
தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும், டீக்கடை முதல், அனைத்து வகை கடைகளையும் திறக்க, அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது. கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக, அரசுக்கு நிதி ஆலோசனை வழங்க, உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் மட்டத்தில் நடந்த, நீண்ட விவாதத்திற்கு பின், இதற்கான உத்தரவுகளை,முதல்வர் பழனிசாமி பிறப்பித்துள்ளார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
'கடந்த, 2019 - 20ம் ஆண்டுக்கான, எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியை, ரத்து செய்யும் சுற்றறிக்கை, பார்லிமென்ட் ஜனநாயகத்திற்கு எதிரானது' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார். உரிமையின் அடிப்படையில், கொடுக்க வேண்டியதை கொடுக்காமல் நிறுத்தி வைப்பதும், கொடுத்ததை பாதியில் பறிப்பதும் பண்பாடாகாது.இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உத்தரவையும், திரும்ப பெற வேண்டும். இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிகள் திறக்கப்படும் போது உயர்மட்டக் குழுவின் ஆலோசனைப்படி தனிநபர் இடைவெளியுடன் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
பட்டயக் கணக்காளர் தேர்வுக்காக 75 ஆயிரம் மாணவர்களுக்கு ஆன்-லைன் மூலம் பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
முதல் கட்டமாக இரு மார்க்கத்தில் 15 ரயில்கள் இயக்கப்படும் என்றும் நாளை மாலை முதல் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படும் என்றும் ரயில்வே துறை அறிவித்துள்ளது.
சிறப்பு ரயில்களாக கருதப்படும் ரயில்கள் டெல்லியில் இருந்து சென்னை உட்பட 15 நகரங்களுக்கு இயக்கப்படும்.
பயணிகள் ரயில் சேவை மே 12-ஆம் தேதி முதல் படிப்படியாக தொடக்கம் - ரயில்வே அறிவிப்பு
முதற்கட்டமாக 15 தடங்களில் 30 பயணிகள் ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம், மும்பை உட்பட 15 நகரங்களுக்கு இயக்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.
'திருச்சியில் 14 பேர் டிஸ்சார்ஜ்- 44 பேருக்கு சிகிச்சை’
திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் இன்று 14 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்
*பெரம்பலூர் - 24, திருச்சி - 13, அரியலூர் - 5, புதுக்கோட்டை - 2 பேர் என மொத்தம் 44 பேர் சிகிச்சையில் உள்ளனர்
’திருச்சியில் 14 பேர் டிஸ்சார்ஜ்- 44 பேருக்கு சிகிச்சை’
திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் இன்று 14 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்
*பெரம்பலூர் - 24, திருச்சி - 13, அரியலூர் - 5, புதுக்கோட்டை - 2 பேர் என மொத்தம் 44 பேர் சிகிச்சையில் உள்ளனர்
சென்னையில் 3 இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆய்வு
* நந்தம்பாக்கம் வர்த்தக மைய கொரோனா வார்டு, கோட்டூர்புரம் ஐஐடி வளாக வார்டு, கொரோனா பாதித்த ஆயுதப்படை காவலர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பரங்கிமலை பள்ளிக்கும் சென்று ஆய்வு
மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் பணிபுரிந்து வந்த தமிழகத்தை சேர்ந்த, 962 பேர், கேரளாவை சேர்ந்த 8 பேர் என மொத்தம் 970 பேர் சிறப்பு ரயில் மூலம் திருச்சி வந்தடைந்தனர். அவர்களை வரவேற்ற, திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, அவர்களுக்கு தேவையான முக கவசம், உணவு, தண்ணீர் பாட்டில்களை வழங்கினர். அனைவரும் அவரவர் சொந்த ஊர்களுக்கு 30 அரசு பேருந்து மூலம் இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டனர். சிறப்பு ரயிலில் வந்தவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் வைத்து பரிசோதனை மேற்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
புதுச்சேரி மக்கள் வெயிலின் தாக்கத்தை குறைக்கவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் குடைகள் கொண்டு செல்ல வேண்டும்!
47 நாட்களாக ஒருவர் கூட பாதிப்பு இல்லாத நிலையில், காரைக்காலில் புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று!
புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்!
நாளை முதல் எந்தெந்த கடைகள் செயல்படலாம் என்பது குறித்து தமிழக அரசு விளக்கம்
* டீக்கடைகள், பேக்கரிகள், உணவகங்கள் பார்சல் மட்டும் வழங்கலாம்
* பூ, பழம், காய்கறி மற்றும் பல சரக்கு கடைகள் செயல்படலாம்
கட்டுமான பொருட்கள் விற்கும் கடைகள் நாளை முதல் செயல்பட அனுமதி
* 34 வகையான கடைகளுக்கு நாளை முதல் கட்டுப்பாடுகள் தளர்வு
* சலூன் கடைகள், ஸ்பா மற்றும் அழகுநிலையங்கள் இயங்க தடை தொடரும்
உயிரின் கரு! உணர்வின் திரு! வாழ்வின் உரு! வளர்ச்சியின் எரு! எல்லாம் சேர்ந்தவள் அன்னை!
இயற்கையும் அன்னையும் இல்லாமல் எவரும் வளரவும் வாழவும் முடியாது!
என் அன்னைக்கும் அவர் போன்ற அன்னையர் குலத்துக்கும் வாழ்த்துகள்! உங்கள் அன்பும் கருணையுமே உலகம் என்றும் வேண்டி நிற்பது!
என்று அன்னையர் தினத்தையொட்டி திமுக தலைவர் ஸடாலின் குறிப்பிட்டுள்ளார்.
திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 204 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது..கோயம்பேடு சந்தையிலிருந்து வியாபாரிகள் மூலமாக பரவ தொடங்கிய கொரோனா தொற்று தமிழகம் முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸால் இதுவரை 6535 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 44 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1824 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
சென்னை அண்ணாசாலையில் உள்ள உணவகத்தில் பணியாற்றிய நபருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. உணவக ஊழியர்கள், உணவு வாங்கி சென்றவர்களை கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதிலிருந்து உணவகம் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 571ஆக உயர்ந்துள்ளது. கோடம்பாக்கத்தில் 563 ஆகவும், திரு.வி.க நகரில் பாதிப்பு 519 ஆகவும் அதிகரித்துள்ளது. ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க நகர் ஆகிய 3மண்டலங்களும் கருஞ்சிவப்பு மண்டலங்களாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
அன்னையர் தினத்தில் தாயின் சிறப்புகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் டுவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார்.
You are AAI to me because, besides everything else you are Always Amazing & Irreplaceable.
Thank you for everything you have done for me. 🙏Happy #MothersDay Aai. pic.twitter.com/UVQeMMmRjX
— Sachin Tendulkar (@sachin_rt) May 10, 2020
இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும் என்று ரஜினி டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்
— Rajinikanth (@rajinikanth) May 10, 2020
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் முதன்முறையாக தூய்மைப் பணியாளர் உயிரிழந்துள்ளார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். எவ்வித அறிகுறியுமின்றி இருந்தவர் அதிகாலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதிகளில் இருந்து, தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு சென்றவர்களால், பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை, கோயம்பேடு தொற்று காரணமாக, சென்னையில், 1,000 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக, கடலுார் மாவட்டத்தில், 317 பேர்; அரியலுார் மாவட்டத்தில், 239 பேர்; விழுப்புரம் மாவட்டத்தில், 177 பேர்; திருவள்ளூர் மாவட்டத்தில், 124 பேர் என, மாநிலம் முழுவதும் பாதிப்பு அதிகரித்துள்ளது. மொத்தம், 2,167 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட, கோயம்பேடு மார்க்கெட் காரணமாகி உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights