Covid-19 Cases Update : தமிழகத்தில், ஆபத்து நீங்கிய பகுதிகளில், தொழில்களை மீண்டும் துவங்க, அரசு அனுமதி அளித்துள்ளது. அனுமதிக்கப்படும் தொழிற்சாலைகளில், 50 வயதுக்கு மேற்பட்டோர் பணிபுரிவதை தவிர்க்கும்படியும், அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. தொற்று அதிகம் உள்ள பகுதி களில், ஊரடங்கு நீடிக்கும் என்றும், எந்தெந்த தொழில்களை துவங்கலாம் என்பது குறித்து, அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்றும், கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
சென்னையில், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலங்களில் கொரோனா பாதிப்பு உள்ளது. இதில், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் பாதிப்பு தீவிரமாக உள்ளது. இந்த ஆறு மண்டலங் களில், 1.75 லட்சம் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அதனால், கொரோனாவை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது. பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகள், தெருக்களுக்கு, 'சீல்' வைக்கப்பட்டுள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Coronavirus Latest Updates: இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு, அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்
"வெளிமாநிலங்களில், அதிலும் தொலைதூர பகுதிகளில் சிக்கித்தவிக்கும் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்களை பேருந்துகளில் அழைத்துவருவது இயலாத காரியமாகும்; இதற்காக சிறப்பு ரயில்களை மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்"
- பீகார் துணை முதல்வர் சுஷில் மோடி
சீனாவை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் தொற்று இத்தாலி ,ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடியது. அங்கு நாளுக்கு நாள் அதிகரித்த பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாடுகள் திணறி வந்தன. இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளால் அந்நாடுகளில் தற்போது நோயில் தாக்கம் படிபடியாக குறைந்து வருகிறது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு இத்தாலியில் 27,000பேரும் ஸ்பெயினில் 24,000பேரும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் ஸ்பெயினின் உயிரிழப்புகளை பின்னுக்குத் தள்ளி ஐரோப்பாவில் கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை கண்டுள்ள இரண்டாவது நாடாக இங்கிலாந்து மாறியுள்ளது. இங்கிலாந்தில் ஆரம்ப காலகட்டங்களில் வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் இருந்தாலும் பின்னாளில் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. இதுவரை அங்கு 26,097பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளதோடு 1,65,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளை அடிப்படை வசதிகளுடன் தயாராக வைத்திருங்கள் - கொரோனா பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து சென்னை மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு
பள்ளிகளில் முகாம் அமைப்பது தொடர்பாக உயர் அதிகாரிகள் பார்வையிட உத்தரவு. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை
முதலமைச்சருடனான ஆலோசனைக்கூட்டம் நிறைவு. ஐசிஎம்ஆர் துணை இயக்குனர் டாக்டர். பிரதீபாகவுர் செய்தியாளர் சந்திப்பு
சில பகுதிகளில் ஊரடங்கை தளர்த்துவது பற்றி அரசு முடிவு செய்யும். ஆனாலும், முழுவதுமாக ஊரடங்கை தளர்த்த முடியாது. தொடர்ந்து தீவிர கண்காணிப்புக்கு பிறகே அடுத்தகட்ட முடிவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூரில் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 42 பேரும் குணமடைந்தனர். இதனால், கரூர் கொரோனா நோயாளிகள் இல்லாத மாவட்டமாக மாறியது. கரூர் மாவட்டத்தில் கடந்த 12 நாட்களாக புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை.
சென்னையில் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், ஊரடங்கு விதிகளை மீறியும் செயல்பட்ட 350 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்றும் 3 மாதங்களுக்கு சீல் வைக்கப்பட்ட கடைகளை திறக்க அனுமதி இல்லை என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை கஸ்தூரி பாய் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் மருத்துவமனயில் கடந்த 27-ம் தேதி 27 வயது கர்ப்பிணி பெண் பிரசவத்தின் போது உயிரிழந்தார். உயிரிழந்த பெண்ணிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளைக் கொண்டு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கஸ்தூரி பாய் மருத்துவமனையில் பணியாற்றும் 8 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்: சென்னையில் 98% பேருக்கு அறிகுறியே இல்லாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகப்பட்சமாக சென்னையில் 768 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு திரும்ப விரும்பும் தமிழர்கள் தாயகம் திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்ப விரும்பும் தமிழர்கள் www.nonresidenttamil.org இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் தாயகம் திரும்ப விருப்புவோரை அறியவும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு மத்திய அரசு புவிசார் குறியீடு அங்கீகாரம் கொடுத்துள்ளது. பழநி பஞ்சாமிர்தத்திற்கு சமீபத்தில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கு குறித்த அடுத்த கட்ட அறிவிப்பை மத்திய, மாநில அரசுகள் சிறிதும் தாமதிக்காமல் அறிவிக்க வேண்டும். ஊரடங்கு நீக்கப்படுமா அல்லது நீட்டிக்கப்படுமா என்ற குழப்பம் மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 4 முதல் கொரோனா பாதிப்பில்லாத நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டாலும் ஒரு சில மாவட்டங்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையவில்லை. ஆகையால் மே 4ம் தேதி முதல் கொரோனா பாதிப்பில்லாத நாட்டின் சில மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் மறைவிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Rishi Kapoor’s untimely demise is shocking. An evergreen personality with an always smiling face, he was so full of life that it's difficult to believe that he is no more. A huge loss for the entertainment industry. Let us pray for his soul. Condolences to his family and friends.
— President of India (@rashtrapatibhvn) April 30, 2020
தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக மாநிலம் முழுவதும் 3,46,071 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 3,75,747 பேர் கைதாகி விடுதலை ஆகியுள்ளனர். இவர்களிடமிருந்து 3.54 கோடி ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. 3,09,026 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் ஏழை மக்களின் உணவுத்தேவையை நிறைவேற்ற ரூ.65 ஆயிரம் கோடியே போதும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனுடன், ராகுல் வீடியோ கான்பரன்சிங் முறையில் ஆலோசனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது
உயிர் கொல்லி வைரசான கொரோனா பாதிப்பிலிருந்து, 10 லட்சத்துக்கும் அதிகமானோர் மீண்டனர். சீனாவிலிருந்து பரவ துவங்கிய கொரோனா வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் அதிக உயிர்பலி வாங்கி வருகிறது. இந்நிலையில், உலகளவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 10 லட்சமாக உயர்ந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights