Advertisment

Corona Updates: தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2,323 ஆக உயர்வு - 1,258 பேர் டிஸ்சார்ஜ்

Coronavirus Latest Updates: இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு, அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Corona Updates: தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2,323 ஆக உயர்வு - 1,258 பேர் டிஸ்சார்ஜ்

Covid-19 Cases Update : தமிழகத்தில், ஆபத்து நீங்கிய பகுதிகளில், தொழில்களை மீண்டும் துவங்க, அரசு அனுமதி அளித்துள்ளது. அனுமதிக்கப்படும் தொழிற்சாலைகளில், 50 வயதுக்கு மேற்பட்டோர் பணிபுரிவதை தவிர்க்கும்படியும், அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. தொற்று அதிகம் உள்ள பகுதி களில், ஊரடங்கு நீடிக்கும் என்றும், எந்தெந்த தொழில்களை துவங்கலாம் என்பது குறித்து, அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்றும், கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

சென்னையில், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலங்களில் கொரோனா பாதிப்பு உள்ளது. இதில், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் பாதிப்பு தீவிரமாக உள்ளது. இந்த ஆறு மண்டலங் களில், 1.75 லட்சம் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அதனால், கொரோனாவை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது. பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகள், தெருக்களுக்கு, 'சீல்' வைக்கப்பட்டுள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Coronavirus Latest Updates: இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு, அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்



























Highlights

    22:46 (IST)30 Apr 2020

    எண்ணிக்கை 52 ஆக உயர்வு

    டெல்லியில் மேலும் 6 CRPF வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது..

    இதுவரை பாதிக்கப்பட்ட CRPF வீரர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்வு!

    22:46 (IST)30 Apr 2020

    மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்

    "வெளிமாநிலங்களில், அதிலும் தொலைதூர பகுதிகளில் சிக்கித்தவிக்கும் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்களை பேருந்துகளில் அழைத்துவருவது இயலாத காரியமாகும்; இதற்காக சிறப்பு ரயில்களை மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்"

    - பீகார் துணை முதல்வர் சுஷில் மோடி

    22:35 (IST)30 Apr 2020

    ஐரோப்பாவில் கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை சந்தித்த இரண்டாவது நாடாக மாறியது இங்கிலாந்து

    சீனாவை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் தொற்று இத்தாலி ,ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடியது. அங்கு நாளுக்கு நாள் அதிகரித்த பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாடுகள் திணறி வந்தன. இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளால் அந்நாடுகளில் தற்போது நோயில் தாக்கம் படிபடியாக குறைந்து வருகிறது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு இத்தாலியில் 27,000பேரும் ஸ்பெயினில் 24,000பேரும் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில் ஸ்பெயினின் உயிரிழப்புகளை பின்னுக்குத் தள்ளி ஐரோப்பாவில் கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை கண்டுள்ள இரண்டாவது நாடாக இங்கிலாந்து மாறியுள்ளது. இங்கிலாந்தில் ஆரம்ப காலகட்டங்களில் வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் இருந்தாலும் பின்னாளில் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. இதுவரை அங்கு 26,097பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளதோடு 1,65,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    22:09 (IST)30 Apr 2020

    17 இந்தியர்கள் உயிரிழப்பு

    சவுதி அரேபியாவில் 17 இந்தியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    21:39 (IST)30 Apr 2020

    பலி எண்ணிக்கை 58

    ராஜஸ்தானில் புதிதாக 118 பேருக்கு கொரோனா பாதிப்பு. மேலும் 3 பேர் உயிரிழப்பு;

    இதுவரை 2,556 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பலி எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது..

    836 பேர் குணமடைந்துள்ளனர்

    21:39 (IST)30 Apr 2020

    105 பேருக்கு கொரோனா

    பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 480 ஆக அதிகரிப்பு;

    இதுவரை 104 பேர் குணமடைந்துள்ளனர்.

    21:11 (IST)30 Apr 2020

    தாராவியில் 25 பேருக்கு கொரோனா

    மும்பை தாராவியில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது;

    அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 369 ஆக அதிகரிப்பு; இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

    20:55 (IST)30 Apr 2020

    எண்ணிக்கை 10,498 ஆக அதிகரிப்பு

    மகாராஷ்டிராவில் 10 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

    மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 10,498 ஆக அதிகரிப்பு

    * இன்று மேலும் 583 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் ஒரே நாளில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்

    20:54 (IST)30 Apr 2020

    சென்னையில் கண்காணிப்பு பணிக்காக ரோபோ அறிமுகம்

    சென்னையில் கொரோனா பாதிப்புள்ள பகுதிகளில் கண்காணிப்பு பணிக்காக ரோபோ அறிமுகம்

    ரோபோ தாட்ஸ் என்ற தனியார் நிறுவனத்தினரின் பங்களிப்புடன் சென்னை காவல்துறை அறிமுகம் செய்துள்ளது

    20:37 (IST)30 Apr 2020

    காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும்

    ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதுமாக சீல் வைக்கப்பட்டு காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும்.

    * மதியம் 1 மணிக்கு மேல் வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை - எஸ்.பி.மயில்வாகனன் எச்சரிக்கை

    20:22 (IST)30 Apr 2020

    குமரி, நெல்லை, தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    குமரி, நெல்லை, தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையன் தெரிவித்துள்ளது.

    19:59 (IST)30 Apr 2020

    10 நாட்களுக்குள் தடுத்திட வேண்டும்

    சென்னையில் கொரோனா பரவலை அடுத்த 10 நாட்களுக்குள் தடுத்திட வேண்டும்; மண்டல வாரியாக அமைக்கப்பட்ட அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவு.

    19:51 (IST)30 Apr 2020

    ஸ்விக்கி மூலமாக பெறலாம்...

    ஆவின் பால் மற்றும் பால் உபப்பொருட்களை டன்சோ, ஜொமோட்டோ நிறுவனங்களை தொடர்ந்து ஸ்விக்கி மூலமாகவும் பெறலாம் - ஆவின் இயக்குநர்

    19:34 (IST)30 Apr 2020

    அடிப்படை வசதிகளுடன் தயாராக வைத்திருங்கள்

    அரசு மற்றும் தனியார் பள்ளிகளை அடிப்படை வசதிகளுடன் தயாராக வைத்திருங்கள் - கொரோனா பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து சென்னை மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

    பள்ளிகளில் முகாம் அமைப்பது தொடர்பாக உயர் அதிகாரிகள் பார்வையிட உத்தரவு. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை

    19:34 (IST)30 Apr 2020

    தலா ரூ.5,000

    தமிழகத்தில் மீன்பிடி தடைகால நிவாரணமாக மீனவர்களுக்கு தலா ரூ.5,000 வழங்கப்படும் - தமிழக அரசு

    * மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.83.55 கோடி நிதி ஒதுக்கீடு - தமிழக அரசு

    19:09 (IST)30 Apr 2020

    காலஅவகாசம் நீட்டிப்பு

    தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு வட்டி தள்ளுபடி சலுகைக்கு செப். 30 ஆம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிப்பு - தமிழக அரசு

    19:00 (IST)30 Apr 2020

    9 பேருக்கு கொரோனா

    கோயம்பேடு சந்தையை சேர்ந்த 9 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று கண்டறியப்பட்டுள்ளது. 

    18:37 (IST)30 Apr 2020

    குழந்தைகளின் எண்ணிக்கை 142 ஆக உயர்வு

    தமிழகத்தில் கொரோனா பாதித்த 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளது.

    18:29 (IST)30 Apr 2020

    இன்று உயிரிழப்பு இல்லை

    தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இன்று உயிரிழப்பு இல்லை; தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 48 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

    18:09 (IST)30 Apr 2020

    161 பேருக்கு கொரோனா

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா. கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2323ஆக உயர்வு - தமிழக சுகாதாரத்துறை தகவல்

    சென்னையில் இன்று ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா

    17:57 (IST)30 Apr 2020

    33,000-ஐ தாண்டிய கொரோனா

    புதன்கிழமை மாலை 1,000 க்கும் மேற்பட்ட புதிய வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், இந்தியாவில் இன்று கோவிட் -19 எண்ணிக்கை 33,000-ஐ தாண்டி 33,050 ஆக உயர்ந்துள்ளது. 1,074 பேர் உயிரிழந்தனர்.

    17:52 (IST)30 Apr 2020

    வெளியூர் செல்ல அவசர பாஸ்

    சென்னையில் இருந்து வெளியூர் செல்ல அவசர பாஸ் இன்று முதல் வழங்கப்படும் - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவிப்பு

    கடந்த 4 நாட்களாக முழு ஊரடங்கால் அவசர பாஸ் வழங்குவது நிறுத்திவைக்கப்பட்டது

    17:51 (IST)30 Apr 2020

    சிறப்பு அதிகாரிகள் நியமனம்

    சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரிகள் நியமனம். ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

    17:51 (IST)30 Apr 2020

    அரசு அலுவலகங்கள் வழக்கம்போல செயல்படும்

    "நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இல்லாததால் மே 4 முதல் அரசு அலுவலகங்கள் வழக்கம்போல செயல்படும்" - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

    17:47 (IST)30 Apr 2020

    முழுவதுமாக ஊரடங்கை தளர்த்த முடியாது

    முதலமைச்சருடனான ஆலோசனைக்கூட்டம் நிறைவு. ஐசிஎம்ஆர் துணை இயக்குனர் டாக்டர். பிரதீபாகவுர் செய்தியாளர் சந்திப்பு

    சில பகுதிகளில் ஊரடங்கை தளர்த்துவது பற்றி அரசு முடிவு செய்யும். ஆனாலும், முழுவதுமாக ஊரடங்கை தளர்த்த முடியாது. தொடர்ந்து தீவிர கண்காணிப்புக்கு பிறகே அடுத்தகட்ட முடிவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    16:52 (IST)30 Apr 2020

    கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமானது கரூர்; 42 நோயாளிகளும் குணமடைந்தனர்

    கரூரில் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 42 பேரும் குணமடைந்தனர். இதனால், கரூர் கொரோனா நோயாளிகள் இல்லாத மாவட்டமாக மாறியது. கரூர் மாவட்டத்தில் கடந்த 12 நாட்களாக புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை.

    16:49 (IST)30 Apr 2020

    சென்னையில் விதிகளை மீறி செயல்பட்ட 350 கடைகளுக்கு சீல் வைப்பு - மாநகராட்சி அறிவிப்பு

    சென்னையில் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், ஊரடங்கு விதிகளை மீறியும் செயல்பட்ட 350 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்றும் 3 மாதங்களுக்கு சீல் வைக்கப்பட்ட கடைகளை திறக்க அனுமதி இல்லை என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

    16:42 (IST)30 Apr 2020

    சென்னை கஸ்தூரி பாய் மருத்துவமனையில் 8 பேருக்கு பரிசோதனை - சுகாதாரத்துறை

    சென்னை கஸ்தூரி பாய் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் மருத்துவமனயில் கடந்த 27-ம் தேதி 27 வயது கர்ப்பிணி பெண் பிரசவத்தின் போது உயிரிழந்தார். உயிரிழந்த பெண்ணிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளைக் கொண்டு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கஸ்தூரி பாய் மருத்துவமனையில் பணியாற்றும் 8 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    15:31 (IST)30 Apr 2020

    மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

    சென்னையில் காணொளி மூலம் 19 பேர் கொண்டு மருத்துவக் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். மருத்துவக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    15:07 (IST)30 Apr 2020

    சென்னை எழும்பூர் தாய் சேய் மருத்துவமனையில் 2 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று

    சென்னையில் எழும்பூர் தாய் சேய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 2 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    14:57 (IST)30 Apr 2020

    சென்னையில் 98% பேருக்கு அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்று - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

    சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்: சென்னையில் 98% பேருக்கு அறிகுறியே இல்லாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகப்பட்சமாக சென்னையில் 768 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    14:18 (IST)30 Apr 2020

    வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் நாடு திரும்ப இணையதளம் - தமிழக அரசு அறிவிப்பு

    வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு திரும்ப விரும்பும் தமிழர்கள் தாயகம் திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்ப விரும்பும் தமிழர்கள் www.nonresidenttamil.org இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் தாயகம் திரும்ப விருப்புவோரை அறியவும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    13:59 (IST)30 Apr 2020

    கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு

    கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு மத்திய அரசு புவிசார் குறியீடு அங்கீகாரம் கொடுத்துள்ளது. பழநி பஞ்சாமிர்தத்திற்கு சமீபத்தில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    13:20 (IST)30 Apr 2020

    சிறப்புக் குழு – முதல்வர் பழனிசாமி

    கொரோனா தாக்கத்தால் சில நாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்க்க சிறப்புக் குழு அமைப்பு அமைக்கபபட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    12:43 (IST)30 Apr 2020

    கோயம்பேடு - போலீஸ் எஸ்.ஐ.,க்கு கொரோனா

    சென்னை கோயம்பேடு சந்தையில் பதாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் எஸ்.ஐ.,க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    12:11 (IST)30 Apr 2020

    ஊரடங்கு குறித்து முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் – ஸ்டாலின்

    ஊரடங்கு குறித்த அடுத்த கட்ட அறிவிப்பை மத்திய, மாநில அரசுகள் சிறிதும் தாமதிக்காமல் அறிவிக்க வேண்டும். ஊரடங்கு நீக்கப்படுமா அல்லது நீட்டிக்கப்படுமா என்ற குழப்பம் மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    12:05 (IST)30 Apr 2020

    கொரோனா பாதிப்பில்லாத பகுதிகளில் மே 4 முதல் ஊரடங்கு தளர்வு

    மே 4 முதல் கொரோனா பாதிப்பில்லாத நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டாலும் ஒரு சில மாவட்டங்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையவில்லை. ஆகையால் மே 4ம் தேதி முதல் கொரோனா பாதிப்பில்லாத நாட்டின் சில  மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    11:44 (IST)30 Apr 2020

    ரிஷி கபூர் மறைவு - ஜனாதிபதி இரங்கல்

    பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் மறைவிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    11:31 (IST)30 Apr 2020

    ரிஷி கபூர் மறைவு - ரஜினி இரங்கல்

    பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    10:59 (IST)30 Apr 2020

    3,46,071 வழக்குகள் பதிவு

    தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக மாநிலம் முழுவதும் 3,46,071 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 3,75,747 பேர் கைதாகி விடுதலை ஆகியுள்ளனர். இவர்களிடமிருந்து  3.54 கோடி ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. 3,09,026 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. 

    10:21 (IST)30 Apr 2020

    ரூ.65 ஆயிரம் கோடி தேவை – ராகுல் காந்தி

    இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் ஏழை மக்களின் உணவுத்தேவையை நிறைவேற்ற  ரூ.65 ஆயிரம் கோடியே போதும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனுடன், ராகுல் வீடியோ கான்பரன்சிங் முறையில் ஆலோசனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது

    10:14 (IST)30 Apr 2020

    கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

    சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

    publive-image

    10:04 (IST)30 Apr 2020

    பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் மரணம்

    புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் (வயது 67) சிகிச்சைபலனின்றி, மும்பை மருத்துவமனையில் மரணமடைந்தார். இந்த தகவலை அவரது உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

    10:01 (IST)30 Apr 2020

    காசி மீது கந்து வட்டி வழக்கு பதிவு

    பெண்களை ஏமாற்றிய வழக்கில் குண்டர் சட்டத்தில் கைதானவர் காசி மீது போலீசார் கந்து வட்டி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    09:41 (IST)30 Apr 2020

    சர்வதேச அளவில் கொரோனா பாதிப்புகள்

    கொரோனா வைரஸ் தொற்று, அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளில் பெருமளவு உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அமெரிக்கா  - 61,472

    இத்தாலி - 27,682

    பிரிட்டன் - 26,097

    ஸ்பெயின் - 24,275

    பிரான்ஸ் - 24,087

    ஜெர்மனி -6,467

    09:20 (IST)30 Apr 2020

    சென்னை கோயம்பேட்டில் கொரோனா பாதிப்பு 8 ஆக உயர்வு

    சென்னை கோயம்பேடு சந்தையில் வேலை பார்த்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளிக்கு கொரோனாஉறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து, கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

    Corona latest news updates : நாடு முழுதும், கடந்த, 15 நாட்களில், 'ஹாட் ஸ்பாட்' எனப்படும், தீவிர, 'கொரோனா' தொற்று உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை, 170ல் இருந்து, 129 ஆக குறைந்துள்ளது. அதே நேரம், பச்சை மண்டலம் எனப்படும், தொற்று இல்லா மாவட்டங்களின் எண்ணிக்கை, 325ல் இருந்து, 307 ஆக குறைந்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

    உயிர் கொல்லி வைரசான கொரோனா பாதிப்பிலிருந்து, 10 லட்சத்துக்கும் அதிகமானோர் மீண்டனர். சீனாவிலிருந்து பரவ துவங்கிய கொரோனா வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் அதிக உயிர்பலி வாங்கி வருகிறது. இந்நிலையில், உலகளவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 10 லட்சமாக உயர்ந்துள்ளது.

    Tamil Nadu Chennai Corona Virus Modi
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment