தேசிய அளவிலான பொதுமுடக்கம் வரும் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், சென்னைக்கு தளர்வுகள் வழங்கப்படாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனாவுக்கு தடுப்பூசி தயாரிக்க, நம் நாட்டு மருந்து உற்பத்தியாளர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், உடனடியாக அனுமதி அளிக்க, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன' என, மத்திய உயிரி தொழில்நுட்பத் துறை செயலர், ரேணு ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
கொரோனா வைரஸ் பிரச்னையால் முடங்கியிருந்த உள்நாட்டு விமான போக்குவரத்து, இரண்டு மாதங்களுக்குப் பின், நேற்று மீண்டும் துவங்கியது. மாநில அரசுகளின் கடும் கெடுபிடியால், பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணியர் ஏமாற்றம் அடைந்தனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான போக்குவரத்து, மார்ச் இறுதியிலிருந்து ரத்து செய்யப்பட்டது. இதனால், விமான நிறுவனங்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகின.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Corona latest news updates : உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்
தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள், கருப்பு பேட்ஜ் அணிந்து, மருத்துவ சேவையை செய்து வருகிறார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் செவிலியர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை அவர்கள் வலியுறுத்தினர். கொரோனா பிரிவை தவிர, அனைத்து பிரிவிலும் பணியாற்றும் செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, ஊரடங்கு அமலில் உள்ளதால் புலம்பெயர் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் மே 25ம் தேதி வரை 3 ஆயிரத்து 274 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் 44 லட்சம் பேர் சொந்த மாநிலங்களுக்கு சென்றுள்ளதாகவும், இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய இந்தியர்களின் இருப்புத் தொகையை வழங்குக
தனிமைப்படுத்த 14 நாட்கள் என வரையறுத்து வழங்கிய அட்வான்ஸ் தொகையில் மீதமுள்ள 7 நாட்களுக்கான தொகையை திருப்பித்தருவதை உறுதி செய்ய வேண்டும்
- அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் உள்துறை செயலாளர் கடிதம்
கர்நாடகாவில் ஜூன் 1ஆம் தேதி முதல் கோயில்கள் திறக்கப்படும் என அம்மாநில மீன்வளத்துறை அமைச்சர் கோட்டா ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார். ஆன்லைன் மூலம் கோவில்களில் வழிபாடுகளை நேரடியாக நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கட்டுப்பாடுகளுடன் கோவில்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆதார், வங்கிக்கணக்கு விவரங்களை அளிக்காத விவசாயிகள் முறையாக வழங்க அறிவுரை
ஆதார் அட்டையில் உள்ளபடி பிரதமமந்திரி கிஸான் வலைதளத்தில் பெயர் திருத்தம் செய்து கொள்ள அறிவுரை
- பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் நிதியுதவிபெறாத விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுறுத்தல்
தமிழகத்தில் 12 வயதிற்குட்பட்ட 1,088 சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 13-60 வயதிற்குட்பட்ட 9,685 ஆண்கள், 5,415 பெண்கள் என மொத்தம் 15,105 பேருக்கு தொற்று. 60 வயதிற்குட்பட்ட 952 ஆண்கள், 583 பெண்கள் என மொத்தம் 1,535 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவை மீறி, நாகூர் தர்கா வாசல் முன்பு, ரம்ஜான் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்ட திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி பிரமுகர் உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைபிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் நவ்ஷாத், நாகூர் நகர திமுக முன்னாள் செயலாளர் ராஜா உள்ளிட்டோர் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து செல்லும் நிலை உருவானது மத்திய, மாநில அரசுகளின் தோல்வி
தொழிலாளர்களுக்கு உணவு, தங்குமிடம் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
- உச்சநீதிமன்றம்
* பொதுமுடக்கத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சந்தித்துள்ள பிரச்னை குறித்து தாமாக முன்வந்து விசாரணை
ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை கப்பல் மூலமாக மீட்கும் பணி ஜூன் மாதம் தொடங்கும் என, மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 173 விமானங்கள், மூன்று கப்பல்கள் மூலம், 34 நாடுகளிலிருந்து இந்தியர்களை மீட்டுள்ளதாக கூறியுள்ளார். மே 17 முதல் ஜூன் 13ஆம் தேதி வரையான வந்தே பாரத்தின் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ், பணிகள் நடைபெற்று வருகிறது என்றும், சுமார் 60 நாடுகளில் இருந்து ஒரு லட்சம் இந்தியர்களை மீட்டுக் கொண்டுவரும் பணி நடைபெற்று வருவதாகவும், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
வழக்கமாக கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் முதல் வாரம் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக பொதுத்தேர்வு தள்ளி போய் இருப்பதால், பள்ளிகள் திறப்பும் தள்ளிப் போகும் சூழல் உருவாகியுள்ளது.
10,11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடும் பணிகள், ஜூலை இறுதி வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் துவங்கப்படும் என்றும், 6 முதல் 8ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு காலையிலும், 9 முதல் 12ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு பிற்பகலிலும் வகுப்புகள் நடக்கும் என்றும் கூறப்படுகிறது. 5ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு செப்டம்பர்1 ஆம் தேதி முதல் வகுப்புகள் துவங்கு
இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து மட்டும், கொரோனா பாதுகாப்பு கவச உடைகளை வாங்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று அறிவுறுத்தி உள்ளது. சந்தையில் தரமற்ற பாதுகாப்பு கவச உடைகள் விற்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
50 சதவீத பயணிகளுடன் வாகனங்கள் இயக்க அனுமதிக்க வேண்டும், சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வாடகை வேன் ஓட்டுனர்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வாகனத்தின் தகுதி சான்று, ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், பர்மிட் ஆகியவற்றுக்கு மேலும் 3 மாதம் அவகாசம் அளிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதத்தில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. குணமடைவோர் விகிதம் 41.61% ஆகவும், இறப்பு விகிதம் 2.87% ஆகவும் தற்போது உள்ளது. அதிகபட்சமாக தினமும் 1.1 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் 412 புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகள் செவ்வாய்க்கிழமை பதிவாகியுள்ளன. இதனால் டெல்லியில் வைரஸ் எண்ணிக்கை 14,465 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மே 22 அன்று அதிகப்பட்சமாக 660 புதிய வழக்குகள் பதிவாகின. திங்களன்று 635 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. செவ்வாயன்று வெளியிடப்பட்ட ஒரு செய்திக்குறிப்பில், ”கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது, மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 14,465 ஆக உயர்ந்துள்ளது” என டெல்லி மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் இன்று, செவ்வாய்க்கிழமை 100 புதிய கோவிட் -19 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து திரும்பிய 45 பேர், தமிழ்நாட்டிலிருந்து திரும்பிய 21 பேர் மற்றும் ஜார்க்கண்டிலிருந்து திரும்பிய 13 பேர் அடங்குவர். இந்நிலையில் மாநிலத்தில் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை இப்போது 2,282 ஆக உள்ளது. இதில் 722 பேர் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றின் முதல் கட்ட ஆட்ட பாதிப்பு சற்று தணிந்துள்ளது. இதை தொடர்ந்து, பெரும்பாலான உலக நாடுகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, மக்கள் இயல்பு நிலை திரும்பி வருகிறார்கள். இந்நிலையில், கொரோனாவின் 2ஆம் கட்ட ஆட்டத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள் என உலக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 2ஆம் கட்ட கொரோனா ஆட்டத்தில் எந்த நேரத்திலும் தொற்று பாதிப்பு மிக மிக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
கொரோனாவுக்கு எதிரான போரில் மாநிலங்கள் தன்னிச்சையாக முடிவெடுக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கொரோனா விவகாரத்தில், மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊரடங்கு காரணமாக மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால், மீன்பிடி தடைக்காலத்தை 61 நாட்களில் இருந்து 41 நாட்களாக குறைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து்ளளது.
இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் ஏப்.15 - ஜூன் 14 வரை இருந்த தடைக்காலம் ஏப்.15 - மே 31 ஆக குறைக்கப்பட்டுள்ளது.மேற்கு கடற்கரையில் ஜூன் 1 - ஜூலை 31 வரை இருந்த தடைக்காலம் ஜூன் 15- ஜூலை 31 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், உள்நாட்டு விமான சேவை துவக்கப்பட்டுள்ளதால், சென்னையில், விமான நிலையத்திற்கு செல்வோர், ஆட்டோ, டாக்சி இல்லாமல், பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதையடுத்து, தற்போது தமிழகம் முழுவதும் ரயில் நிலையம் மற்றும் விமான நிலையங்களுக்கு செல்ல டாக்சி, ஆட்டோக்களுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 4,98,995 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. விதிகளை மீறியதாக 5,31,179 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4,22,867 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு விதிளை மீறியதாக ரூ.7.85 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,45,380 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 146 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் நிகழ்ந்த மரணங்களின் எண்ணிக்கை 4,167 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 60,490 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதனை மீறி, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநில மக்கள், நீலகிரி எல்லைக்குள் வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights