Advertisment

மருத்துவ குழுக்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை

Coronavirus Latest Updates: ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, இரண்டு வாரங்கள் முடிந்த நிலையில், அடுத்து வரும் வாரங்கள், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Edappadi Palaniswami

Edappadi Palaniswami

Covid-19 Cases Update: கொரோனா குறித்த விஷயங்களைப் பற்றி விவாதிக்க, மருத்துவ நிபுணர்களுடன், காணொலி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

Advertisment

தமிழகத்தில் மேலும், 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 738 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் மூன்றாம் கட்டத்தை நோக்கி நகராமல் தடுக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை, 21 பேர் சிகிச்சை முடிந்து, வீடு திரும்பியுள்ளனர். தமிழக சுகாதாரத்துறை செயலர், பீலா ராஜேஷ், சென்னையில் நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, 60 ஆயிரத்து, 739 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். அரசு கண்காணிப்பு மையங்களில், 320 பேர் உள்ளனர்.

பிரதமர் மோடி மனிதாபிமானம் மிக்க சிறந்த மனிதர் - பாராட்டு பத்திரம் வாசிக்கும் டிரம்ப்

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், தற்போது களத்தில் உள்ள ஊழியர்களின் வேலை பளுவை குறைக்கும் வகையில், மிகப் பெரிய படையை திரட்ட, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு, நம் நாட்டில் பரவி வருகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, இரண்டு வாரங்கள் முடிந்த நிலையில், அடுத்து வரும் வாரங்கள், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த காலகட்டத்தில்தான், வைரஸ் பரவல் தீவிரமாக இருக்கும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Coronavirus Latest Updates: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்














Highlights

    21:07 (IST)09 Apr 2020

    முதல்வர் பழனிசாமி மருத்துவ நிபணர்களுடன் நாளை காணொலி மூலம் ஆலோசனை

    சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

    20:04 (IST)09 Apr 2020

    இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 169 ஆனது - மத்திய சுகாதாரத்துறை தகவல்

    இந்தியாவில், இதுவரை 1,30,000 பேர்களின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில், கிட்டத்தட்ட 5900 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 169 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 549 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

    19:26 (IST)09 Apr 2020

    கொரோனா தடுப்பு பணிகளுக்கு மத்திய அரசு மாநிலங்களுக்கு ரூ.15,000 கோடி ஒதுக்கீடு

    கொரோனா தடுப்பு பணிகளுக்காக மத்திய அரசு மாநிலங்களுக்கு மருத்துவ கருவிகள் போன்றவற்றை வாங்க கூடுதலாக ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

    18:51 (IST)09 Apr 2020

    மாவட்டம் வாரியாக கொரோனா வைரஸ் பாதிப்பு

    தமிழகத்தில் இன்று (09.04.2020) மாவட்டம் வாரியாக கொரோனா வைரஸ் பாதிப்பு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

    publive-image

    18:27 (IST)09 Apr 2020

    டெல்லி சென்று வந்தவர்கள் 1480

    கொரோனா பாதிக்கப்பட்டது தெரிய வந்தால் உடனடி தொடர் மருத்துவ சிகிச்சை - பீலா ராஜேஷ்

    * ஒரே குழுவாக டெல்லி சென்று வந்தவர்கள் 1480. இதில் 763 பேருக்கு கொரோனா தொற்று

    18:21 (IST)09 Apr 2020

    33 நிமிடங்களில் முடிவு தெரியும்

    27 நபர்கள் வீடு திரும்பினர் - புதிய சோதனைக் கருவி மூலம் 33 நிமிடங்களில் முடிவு தெரியும்

    * ஒரே குழுவாக டெல்லி சென்று வந்தவர்கள் 1480 இதில் 863 பேருக்கு கொரோனா தொற்று

    * மேலும் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு தற்போது வரை மொத்தம் 834 பேருக்கு பாதிப்பு

    18:21 (IST)09 Apr 2020

    834 பேருக்கு பாதிப்பு

    தமிழக சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர் சந்திப்பு

    * தமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலை குறித்து தகவல்

    * மேலும் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு

    * மொத்தம் 834 பேருக்கு பாதிப்பு

    * மொத்தம் 7,267 பேருக்கு கொரோனா பரிசோதனை

    18:03 (IST)09 Apr 2020

    350 இந்தியர்கள் நாடு திரும்ப எடுத்த நடவடிக்கை என்ன?

    ஊரடங்கு காரணமாக மலேசியாவில் சிக்கியுள்ள 350 இந்தியர்கள் நாடு திரும்ப எடுத்த நடவடிக்கை என்ன? - சென்னை உயர்நீதிமன்றம்

    மலேசியாவில் சிக்கியுள்ளவர் சார்பில் தாக்கல் செய்த வழக்கில் மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

    18:03 (IST)09 Apr 2020

    ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி

    கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி அளித்துள்ளார். பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும் வழங்கியுள்ளார். ஃபெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.50 லட்சமும், நடனக்கலைஞர் சங்கத்திற்கு ரூ.50 லட்சமும் நிதியுதவி அளித்துள்ளார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 லட்சமும், ஏழை மக்களுக்கு ரூ.75 லட்சமும் வழங்கியுள்ளார். ரஜினி நடிக்கும் சந்திரமுகி-2 திரைப்படத்தில் நடிக்க அட்வான்ஸ் தொகையில் நிதியுதவி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    17:49 (IST)09 Apr 2020

    தொற்றுக்கு ஆளாகாமல் பாதுகாப்பாக உள்ளனர்

    தமிழக சிறை கைதிகள் கொரோனா தொற்றுக்கு ஆளாகாமல் பாதுகாப்பாக உள்ளனர் - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

    17:37 (IST)09 Apr 2020

    கொரோனா காலத்தில் லாபம் ஈட்டிய டி மார்ட்

    கொரோனா ஏற்படுத்தியுள்ள தாக்கத்திலும், இந்தியாவின் முன்னணி சில்லரை வர்த்தக அங்காடியான டிமார்ட் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆசிய அளவில் முதலிடத்தில் இருந்த, முகேஷ் அம்பானி தற்போது, பல படிகள் கீழிறங்கியுள்ளார். அவரது, ரிலையன்ஸ் குழும நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த நிலையில் எந்த பாதிப்பும் இல்லாமல், ' டிமார்ட் ' நிறுவனத்தின் தலைவர் ராதாகிருஷ்ணன் தமானி அதிக லாபமீட்டி உள்ளார். இந்தியாவின், மிகப் பெரிய, 12 பணக்காரர்களில்,இவரது சொத்து மதிப்பு மட்டுமே, சமீபத்தில் அதிகரித்துள்ளதாக, 'புளும்பெர்க் ' தர வரிசை நிறுவனம் தெரிவிக்கிறது. ஊரடங்கு உத்தரவால், மக்கள் அத்தியாவசியப் பொருட்களை அதிக அளவில் வாங்கி இருப்பு வைத்தது தான், இந்நிறுவனத்தின் லாபத்திற்கும் காரணம் என்றும் புளும்பெர்க் தெரிவித்துள்ளது.

    17:19 (IST)09 Apr 2020

    எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை

    ஊரடங்கின் போது பயணிகள் ரயில் இயக்கப்படுவது குறித்து இதுவரை எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    17:04 (IST)09 Apr 2020

    தென் கொரிய அதிபருடன் பிரதமர் மோடி ஆலோசனை

    கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் உடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலமாக ஆலோசனை.

    17:03 (IST)09 Apr 2020

    ராகவேந்திரா மண்டபம் கொரோனா சிகிச்சைக்காக...

    நடிகர் ரஜினிகாந்த் சார்பில் ராகவேந்திரா மண்டபத்தை கொரோனா சிகிச்சைக்காக வழங்க முன்வருவதாகக் கூறி சென்னை மாநகராட்சிக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

    16:34 (IST)09 Apr 2020

    10 கோடி வழங்கிய சன் டிவி

    சன் டி.வி குழுமம் கொரோனா நிவாரண நிதியாக ₹ 10 கோடி வழங்கியது.

    மேலும் சன் குழுமத்தில் பணிபுரியும் 6 ஆயிரம் ஊழியர்களின் 1 நாள் ஊதியத்தையும் வழங்க முடிவு.

    16:22 (IST)09 Apr 2020

    24 மணி நேரத்தில் 446 பேர் உயிரிழப்பு

    கொரோனா பாதிப்பால் ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 446 பேர் உயிரிழப்பு

    பாதிக்கப்பட்டோர் - 1,52,446, உயிரிழப்பு - 15,238

    16:01 (IST)09 Apr 2020

    எண்ணிக்கை 430ஆக உயர்ந்தது

    ராஜஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 430ஆக உயர்ந்தது.

    இன்று புதிதாக 43 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானது.

    15:37 (IST)09 Apr 2020

    சென்னையில் மழை

    சென்னை பம்மல், ஆவடி, திருமுல்லைவாயில், பட்டாபிராம், திருநின்றவூர் அனகாபுத்தூர் உள்ளிட்ட இடங்களில் மழை.

    சின்னமலை, கிண்டி, அடையாறு, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது

    15:36 (IST)09 Apr 2020

    தனிமைப்படுத்தும் வார்டுகளாக மட்டுமே ரயில் பெட்டிகள்

    கொரோனா தொற்று ஆரம்ப கட்ட அறிகுறிகள் உள்ளவர்களை தனிமைப்படுத்தும் வார்டுகளாக மட்டுமே ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்படும் என தெற்கு ரயில்வே சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

    15:15 (IST)09 Apr 2020

    ஊதியத்தில் 30 சதவீதம் பிடித்தம்

    கர்நாடக மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களின் ஊதியத்தில் 30 சதவீதம் பிடித்தம்

    * கர்நாடக அமைச்சரவை முடிவு

    * ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஓராண்டுக்கான ஊதியத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்ய முடிவு

    15:06 (IST)09 Apr 2020

    கோடை விடுமுறை ரத்து

    கொரோனா பாதிப்பு காரணமாக ஜூன் மாத கோடை விடுமுறை ரத்து - டெல்லி உயர்நீதிமன்றம் அறிவிப்பு

    14:44 (IST)09 Apr 2020

    ரூ.40 லட்சம் அபராதம் வசூல்

    144 தடையை மீறியவர்களிடமிருந்து ரூ.40 லட்சம் அபராதம் வசூல். 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான உதவித்தொகை அவர்களது வீடுகளுக்கு சென்று வழங்கப்படும் - முதலமைச்சர்

    14:33 (IST)09 Apr 2020

    3ஆம் நிலைக்கு செல்ல வாய்ப்பு உள்ளது

    144 தடை உத்தரவை மீறியவர்களிடம் இருந்து ரூ.40 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது கொரோனா தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு நீட்டிப்பு கொரோனா தொற்று 3ஆம் நிலைக்கு செல்ல வாய்ப்பு உள்ளது - முதல்வர் பழனிசாமி

    14:32 (IST)09 Apr 2020

    137 தனியார் மருத்துவ கல்லூரி, மருத்துவமனைகள் தேர்வு

    தமிழகத்தில் 96.30 சதவீதம் பேருக்கு கொரோனா நிவாரண தொகை ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 3 லட்சம் வெளி மாநில தொழிலாளர்கள் உள்ளனர். 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்பட உள்ளது - அதில் 50 ஆயிரம் கருவிகள் இன்று வந்துவிடும். 3,370 செயற்கை சுவாச கருவிகள் கையிருப்பில் உள்ளன. தமிழகத்தில் கொரோனா ஒருங்கிணைப்புக்குழு சிறப்பாக பணியாற்றி வருகிறது. கொரோனா சிகிச்சைக்கு 137 தனியார் மருத்துவ கல்லூரி, மருத்துவமனைகள் தேர்வு - முதலமைச்சர் பழனிசாமி

    14:07 (IST)09 Apr 2020

    நடமாடும் அங்காடி திட்டம் : சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு

    நடமாடும் அங்காடி திட்டத்தில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள்/ வணிகர்கள் அதற்கான அனுமதி சீட்டுக்காக விண்ணப்பிக்க மாநகராட்சி மண்டல அலுவலகங்களை அணுகலாம் என்று சென்னை நகராட்சி தெரிவித்துள்ளது.

    13:52 (IST)09 Apr 2020

    விளைபொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    பொது முடக்கம் அமலில் இருக்கும் காரணத்தால் விவசாய விளைபொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறு விவசாயிகள் பாதிப்டையாமல் இருக்க ரூ. 10 ஆயிரம் கடனுதவி போன்றவற்றையும் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது   

    13:23 (IST)09 Apr 2020

    பொது ஊரடங்கை ஏப்ரல்-30 வரை நீட்டித்தது ஓடிசா

    வரும் ஏப்ரல் 14ம் தேதி வரையில் தேசிய அளவிலான பொது முடக்கம் நடைபெற்றுவரும் நிலையில், இந்த முடக்க காலத்தை ஏப்ரல்-30 வரை ஒடிசா மாநில அரசு நீட்டித்துள்ளது. இன்று நடந்த அமைச்சரவைக் கூடத்தில், மத்திய அரசு ஏப்ரல் 30 வரை பொது முடக்கத்தை நீட்டிக்க வேண்டும்  என்ற கோரிக்கையும் வைத்துள்ளது. 

         

    13:16 (IST)09 Apr 2020

    மாநிலம் வாரியாக இன்று காலை நேர நிலவரப்படி

    ஏப்ரல் 9, காலை 8 மணி நிலவரப்படி, 

     

    13:11 (IST)09 Apr 2020

    தொண்டு நிறுவனங்கள் உணவுப்பொருட்களை வாங்க அனுமதி

    நிவாரண நடவடிக்கைகளுக்காக தொண்டு நிறுவனங்கள் தேவைப்படும் உணவுப்பொருட்களை நேரடியாக இந்திய உணவுக் கழகத்தில் இருந்து வாங்கிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    11:43 (IST)09 Apr 2020

    முதல்வர் வேண்டுகோள்

    கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கும் தொகையை சமூக பொறுப்பு நிதியாக கணக்கிட முடியும் என்பதால், வருமான வரிச்சலுகையை கருத்தில் கொண்டு தாராளமாக நிதி வழங்கும்படி தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    11:38 (IST)09 Apr 2020

    டுரோன் மூலம் கிருமிநாசினி தெளிப்பு

    கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் டுரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

    publive-image

    11:01 (IST)09 Apr 2020

    கொரோனா பாதிப்பு 5,734 ஆக அதிகரிப்பு

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 738ஆக அதிகரித்துள்ளது. 8 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 21 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமாகியுள்ளனர். தலைநகர் டெல்லியில் 669 பேரும், தெலங்கானாவில் 427 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் முதன்முதலில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட கேரளாவில், தற்போது நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 345ஆக உள்ளது. இங்கு அதிகபட்சமாக 83 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    10:54 (IST)09 Apr 2020

    மே மாதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - கல்வித்துறை திட்டம்

    மே மாதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை, 10 நாட்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தி முடிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராக அறிவுறுத்தியுள்ளது.

    10:28 (IST)09 Apr 2020

    இந்திய - அமெரிக்க உறவு மேலும் வலுப்பெறும் - பிரதமர் மோடி

    இந்திய - அமெரிக்க நாடுகளுக்கிடையேயான நட்பு மேலும் வலுப்பெறும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை அமெரிக்காவிற்கு ஏறறுமதி செய்ததற்கு நன்றி தெரிவித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டுவிட்டர் பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, இக்கட்டான தருணங்களே, நட்பின் மகத்துவத்தை மேலும் அதிகப்படுத்தும், இந்திய - அமெரிக்க நாடுகளுக்கிடையேயான நட்பு மேலும் வலுப்பெறும். கொரோனா பாதிப்பு நாடுகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை மனிதாபிமான அடிப்படையில் இந்தியா வழங்கும் என்று மோடி மேலும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

    10:23 (IST)09 Apr 2020

    எய்ம்ஸ் மருத்துவ பணியாளர்கள் தனிமை

    டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், கொரோனா தொற்று உள்ள நோயாளிக்கு சிகிச்சை மேற்கொண்ட 20 மருத்துவ பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வு, அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    10:18 (IST)09 Apr 2020

    மருத்துவ பணியாளர்களுக்கு திருநெல்வேலி காவல்துறை கவுரவம்

    கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள திருநெல்வேலி மாநகராட்சி மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்ளுக்கு நெல்லை போலீஸ் மரியாதை வழங்கிய நிகழ்வு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

    publive-image

    09:44 (IST)09 Apr 2020

    கொரோனா பலி: ஸ்பெயினை மிஞ்சிய அமெரிக்கா

    உலகளவில் கொரோனா உயிரிழப்பில் ஸ்பெயினை முந்தி அமெரிக்கா 2வது இடத்தில் உள்ளது

    உயிரிழந்தோர் எண்ணிக்கை:

    ஸ்பெயின் - 14,792

    அமெரிக்கா - 14,795

    09:36 (IST)09 Apr 2020

    1.24 லட்சம் பேர் கைது

    தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறிதாக இதுவரை 1.24 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக,  1.14 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை 97,146 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடமிருந்து ரூ.38,54,144 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

    Corona latest news updates : 'நாட்டில், சமூக நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் உயிரையும், வாழ்வையும் காப்பாற்றுவது தான், அரசுக்கு முக்கியமான பணியாக இருக்கிறது. இந்நிலையில், நாம் விழிப்புடன் இருப்பது அவசியம்,'' என, பிரதமர், மோடி, பல்வேறு கட்சித் தலைவர்களுடன், நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பேசினார்.

    ஊரடங்கால், வேலை இல்லாததால், பணப்புழக்கம் குறைந்துள்ளது. வெளிச்சந்தையில், அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, விலையும் அதிகரித்துள்ளது. எனவே, ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், ரேஷன் கடைகளில், ஜூன் வரை, அரிசி, கோதுமையுடன், பருப்பு, பாமாயில், சர்க்கரையையும் இலவசமாக, அரசு வழங்க வேண்டும். இவ்வாறு, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரேஷனில், அடுத்த மூன்று மாதங்களுக்கு, கோதுமை, அரிசியை இலவசமாக வழங்கும்படி, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    Tamil Nadu Corona Virus Narendra Modi
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment