Covid-19 Cases Update: வேலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 45 வயது நபர் உயிரிழந்ததாக அம்மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 8 ஆக உயர்ந்துள்ளது. அதோடு தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690-ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில், இந்தியா, உலகுக்கே முன்னுதாதாரணமாக திகழ்கிறது,'' என, பிரதமர், நரேந்திர மோடி கூறினார். அவர் பேசியதாவது: கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையை, உலகமே பாராட்டி வருகிறது. போராட்டம்கொரோனா பரவலை தடுப்பதில், இந்தியா உலக நாடுகளுக்கே முன்னுதாரணமாக திகழ்கிறது. கொரோனாவின் தீவிரத்தை உணர்ந்துள்ள இந்தியா, அதனைத் தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரில், இந்தியா, சர்வதேச நாடுகளுடன் இணைந்து, செயல்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நோய் பரவல் அதிகரித்தால் அதை சமாளிக்க தேவையான மருத்துவமனை உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. நோய் தொற்று ஏற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்களுக்காக மூன்றடுக்கு முகக்கவசங்கள், 'என்- 95' முகக்கவசங்கள், 'வென்டிலேட்டர்'கள், பாதுகாப்பு உடைகள், உபகரணங்கள் போன்றவற்றை கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Coronavirus Latest Updates: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்
தமிழக காவல்துறை: கிருமிநாசினிகள், முகக்கவசம், கையுறைகளை அதிக விலைக்கு விற்றால் அத்தியாவசிய பொருள்கள் கடத்தல் தடுப்பு சட்டம் பாயும். ரேஷன் பொருட்களை கள்ளச் சந்தையில் விற்றால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 117 பேர் உயிரிழந்துள்ளனர் - மத்திய சுகாதாரத்துறை தகவல்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 4,421 ஆக உயர்ந்துள்ளது - சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால்
சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு என்ணிக்கை 690 ஆனது
இன்று கொரோனா பாதிப்பு உறுதியானவர்கள் - 69 பேர்
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் - 19 பேர்
கொரோனா பாதிப்பிலிருந்து இன்று 11 குணமடைந்துள்ளனர்
இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 7 பேர் உயிரிழந்துள்ளனர்
இதுவரை 5,305 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது
தமிழகத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 690ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்வு
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 64 வயது பெண் உயிரிழப்பு
நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. அதன் பிறகு 144 தடை உத்தரவை தளர்த்தப்படுவது குறித்த எந்த அறிவிப்பையும் மத்திய அரசு இதுவரை வெளியிடவில்லை. இந்த நிலையில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஊரடங்கு உத்தரவை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும் ஜூன் 3 ஆம் தேதி வரை இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை நீட்டித்தால் நன்றாக இருக்கும் என பிசிஜி கொடுத்த அறிக்கையை தெலங்கானா அரசு மேற்கோள்காட்டியுள்ளது. இதனிடையே, இது தொடர்பான எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் தெலங்கானா அரசு விளக்கமளித்துள்ளது.
திருச்செங்கோட்டில் மின்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை இயக்கும் எண்ணம் இல்லை. மாற்று போதை நாடுவோருக்கு கவுன்சலிங் வழங்க அரசு மருத்துவமனைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு தொடருமா என்பது பற்றி பிரதமர், முதல்வர் பழனிசாமி எடுக்கும் முடிவில்தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
விவசாயிகளின் விளைபொருட்களை விற்பனை செய்ய அவசரகால தொலைபேசி எண்களை முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த எண்க்ளின் உதவியுடன் வியாபாரிகளை தொடர்பு கொள்ளுதல், சரக்கு போக்குவரத்து அனுமதி, குளிர்சாதன கிடங்கு போன்ற சேவைகளை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நட்பு என்பது வேறு ; பழிவாங்குதல் என்பது வேறு. இந்தியா, உயிர் காக்கும் மருந்துகளை மற்ற நாடுகளுக்கு வழங்கும் முடிவை வரவேற்கிறேன், ஆனால், முதலில் நாட்டு மக்களுக்கு தேவையான மருந்துகளை கைவசம் வைத்தபிறகு மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அண்டை நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி வருகிறோம் என்று ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஏற்றுமதி தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
நாட்டு மக்களின் ஆரோக்கியத்திற்காகவும், நல்வாழ்வுக்காகவும் பிரார்த்திக்கிறேன். கொரோனாவுக்கு எதிரான போரில் முன்னிலை வகிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் மோடி, உலக சுகாதார தினத்தையயொட்டி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Today on #WorldHealthDay, let us not only pray for each other’s good health and well-being but also reaffirm our gratitude towards all those doctors, nurses, medical staff and healthcare workers who are bravely leading the battle against the COVID-19 menace. 🙏🏼
— Narendra Modi (@narendramodi) April 7, 2020
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, பிரதமர் நிவாரண நிதிக்கு, பொதுத்துறையை சேர்ந்த வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள், 399.63 கோடி ரூபாய் நிதி வழங்கி உள்ளன. இதில், அதிகபட்சமாக, பாரத ஸ்டேட் வங்கி, 100 கோடி; ஆயுள் காப்பீட்டு நிறுவனம், 105 கோடி; ஐ.ஐ.எப்.சி.எல்., என்ற, இந்திய உள்கட்டமைப்பு நிதி நிறுவனம், 25 கோடி; ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம், 22.81 கோடி; பாங்க் ஆப் பரோடா, 20 கோடி; பஞ்சாப் நேஷனல் வங்கி, 15 கோடி ரூபாய் வழங்கி உள்ளன.மத்திய நிதித்துறை ஊழியர்கள் உட்பட, அந்த துறை வாயிலாக மொத்தம், 430 கோடி ரூபாய், பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights