Covid-19 Cases Update: வேலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 45 வயது நபர் உயிரிழந்ததாக அம்மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 8 ஆக உயர்ந்துள்ளது. அதோடு தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690-ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில், இந்தியா, உலகுக்கே முன்னுதாதாரணமாக திகழ்கிறது,” என, பிரதமர், நரேந்திர மோடி கூறினார். அவர் பேசியதாவது: கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையை, உலகமே பாராட்டி வருகிறது. போராட்டம்கொரோனா பரவலை தடுப்பதில், இந்தியா உலக நாடுகளுக்கே முன்னுதாரணமாக திகழ்கிறது. கொரோனாவின் தீவிரத்தை உணர்ந்துள்ள இந்தியா, அதனைத் தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரில், இந்தியா, சர்வதேச நாடுகளுடன் இணைந்து, செயல்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நோய் பரவல் அதிகரித்தால் அதை சமாளிக்க தேவையான மருத்துவமனை உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. நோய் தொற்று ஏற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்களுக்காக மூன்றடுக்கு முகக்கவசங்கள், ‘என்- 95’ முகக்கவசங்கள், ‘வென்டிலேட்டர்’கள், பாதுகாப்பு உடைகள், உபகரணங்கள் போன்றவற்றை கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Corona latest news updates : சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ், இந்தியாவில் வேகமாக பரவிவருகிறது. இதுவரை, 4,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2,500 பெட்டிகள், கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிப்பதற்காக, தனிமை வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. மொத்தம், 40 ஆயிரம் படுக்கைகள் தயாராக உள்ளன. தினமும், 375 பெட்டிகள், தனிமை வார்டுகளாக மாற்றப்பட்டு வருகின்றன.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, பிரதமர் நிவாரண நிதிக்கு, பொதுத்துறையை சேர்ந்த வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள், 399.63 கோடி ரூபாய் நிதி வழங்கி உள்ளன. இதில், அதிகபட்சமாக, பாரத ஸ்டேட் வங்கி, 100 கோடி; ஆயுள் காப்பீட்டு நிறுவனம், 105 கோடி; ஐ.ஐ.எப்.சி.எல்., என்ற, இந்திய உள்கட்டமைப்பு நிதி நிறுவனம், 25 கோடி; ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம், 22.81 கோடி; பாங்க் ஆப் பரோடா, 20 கோடி; பஞ்சாப் நேஷனல் வங்கி, 15 கோடி ரூபாய் வழங்கி உள்ளன.மத்திய நிதித்துறை ஊழியர்கள் உட்பட, அந்த துறை வாயிலாக மொத்தம், 430 கோடி ரூபாய், பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது
Web Title:Coronavirus live updates tamilnadu india lockdown corona tests
தமிழக அரசு இரும்பு, உரம், காகித தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளித்த நிலையில், தமிழக அரசு 13 வகையான தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளித்ததை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
தமிழக காவல்துறை: கிருமிநாசினிகள், முகக்கவசம், கையுறைகளை அதிக விலைக்கு விற்றால் அத்தியாவசிய பொருள்கள் கடத்தல் தடுப்பு சட்டம் பாயும். ரேஷன் பொருட்களை கள்ளச் சந்தையில் விற்றால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 117 பேர் உயிரிழந்துள்ளனர் - மத்திய சுகாதாரத்துறை தகவல்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 4,421 ஆக உயர்ந்துள்ளது - சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால்
சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு என்ணிக்கை 690 ஆனது
இன்று கொரோனா பாதிப்பு உறுதியானவர்கள் - 69 பேர்
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் - 19 பேர்
கொரோனா பாதிப்பிலிருந்து இன்று 11 குணமடைந்துள்ளனர்
இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 7 பேர் உயிரிழந்துள்ளனர்
இதுவரை 5,305 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது
இரும்பு, சிமெண்ட், உரம் ஆகிய தொழிற்சாலைகள் இயங்க அனுமதி
- தமிழக அரசு
கொரோனா பாதிப்பில் முதலிடம் சென்னை -149
இரண்டாமிடம் கோவை - 60
மூன்றாமிடம் திண்டுக்கல் -45
மொத்த பாதிப்பு - 690
இன்று கொரோனா உறுதியானவர்கள் - 69
குணமடைந்தவர்கள் - 19
இன்று குணமடைந்தவர்கள் - 11
உயிரிழப்பு - 7
இதுவரை பரிசோதனை செய்யப்பட்டவர்கள் - 5,305
சென்னையில் ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா உறுதியானதன் மூலம் எண்ணிக்கை 149ஆக அதிகரிப்பு
தமிழகத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 690ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்வு
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 64 வயது பெண் உயிரிழப்பு
உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை இதுவரை 76,201 பேர் உயிரிழப்பு; கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,61,024 ஆக உயர்வு!
குணமடைந்து 2,93,617 பேர் வீடு திரும்பிய நிலையில், 47,544 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது!
புனேவில் இன்று மேலும் 3 பேர் கொரோனாவிற்கு உயிரிழப்பு.
புனேவில் பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரித்தது.
"இந்தியாவில் இதுவரை 1,07,006 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது; 136 அரசு பரிசோதனை மையங்கள் செயல்பாட்டில் உள்ளன, 59 தனியார் பரிசோதனை மையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது"
- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்
கொரோனா தடுப்பு பணிக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ஏப்ரல் 6 வரை நிறுவனங்கள், அமைப்புகள் சார்பில் நன்கொடையாக ரூ.79.74 கோடி பெறப்பட்டுள்ளது
- தமிழக அரசு
தமிழகத்தின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறையை உருவாக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.
மக்களை அவமரியாதையுடன் நடத்தக்கூடாது. மக்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடித்து காவல் பணிகளை ஆற்ற அறிவுறுத்தல் - உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியபின் டிஜிபி திரிபாதி
உச்சநீதிமன்ற நீதிபதி அல்லது முன்னாள் நீதிபதியைக் கொண்டு டெல்லி தப்லீக் ஜமாத் மாநாடு குறித்து விசாரிக்க வேண்டும். இதற்கு பொறுப்பானவர்கள் யார் என விசாரித்து அவர்களை தண்டிக்க வேண்டும்” - ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்
சர்வதேச விமான சேவைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டித்தது நேபாள அரசு!
உள்ளூர் விமான சேவைகளுக்கு ஏப்ரல் 15ம் தேதி வரை தடை அமலில் உள்ளது..
சமூக விலகல், ஊரடங்கை பின்பற்றாவிட்டால் ஒரு கொரோனா நோயாளியால் 30 நாட்களில் 406 பேருக்கு நோயத்தொற்றை பரப்ப முடியும்!
"கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தாராளமாக நிதி தாருங்கள். அனைத்து நன்கொடைகளுக்கும் ரசீது அனுப்பப்படும் என்று அறிவிப்பு. நீங்கள் அளிக்கும் சிறு தொகை, ஏழை - எளிய மக்களைக் காப்பாற்ற பேருதவியாக இருக்கும்" முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்
நடிகர் அஜித் #coronavirusinindia நிவாரணத்திற்காக பின்வரும் தொகைகளை நன்கொடையாக வழங்கியுள்ளார் ..
பிரதமர் நிதி: ரூ .50 லட்சம்
முதல்வர் நிவாரண நிதி: ரூ .50 லட்சம்
ஃபெப்சி: ரூ .25 லட்சம்
ஸ்பெயினில் கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 743 பேர் உயிரிழப்பு!
கடைசி 6 தினங்களில் ஸ்பெயினில் பலியானவர்கள் எண்ணிக்கை 4,877
தினசரி பலி எண்ணிக்கை:
ஏப் 06 - 700
ஏப் 05 - 694
ஏப் 04 - 749
ஏப் 03 - 850
ஏப் 02 - 961
ஏப் 01 - 923
வெப்பச்சலனம் காரணமாக தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
பொது மக்களுக்கு காய்கறிகள், பழங்கள் தடையின்றிக் கிடைக்க நடவடிக்கை!
தோட்டக்கலைத்துறை துறை சார்பில் காய்கறிகளை வீடுகளுக்கே சென்று வழங்கும் நடமாடும் விற்பனை நிலையம்!
- தமிழக முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை நீட்டிக்குமாறு பல மாநில அரசுகள் கோரிக்கை
* நிபுணர்களும் ஊரடங்கை நீட்டிக்குமாறு கோரிக்கை -மத்திய அரசு தகவல்
* ஏப்ரல் 14-ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை
மிக அதிக தொற்று உள்ள தமிழ்நாடு, கேரளாவுக்கு குறைவாக நிதி ஒதுக்கியது ஏன்?
- பீட்டர் அல்போன்ஸ்
கொரோனா தடுப்புப் பணி - எம்.எல்.ஏ-க்கள் தொகுதி நிதியில் ஒரு கோடி ரூபாய்...
* மாநில அளவில் ஒருங்கிணைத்து பயன்படுத்த முதலமைச்சர் உத்தரவு
* எம்.எல்.ஏ-க்கள் நிதியை அந்தந்த தொகுதிகளில் மட்டுமே பயன்படுத்த முடியும் - முதலமைச்சர்
நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. அதன் பிறகு 144 தடை உத்தரவை தளர்த்தப்படுவது குறித்த எந்த அறிவிப்பையும் மத்திய அரசு இதுவரை வெளியிடவில்லை. இந்த நிலையில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஊரடங்கு உத்தரவை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும் ஜூன் 3 ஆம் தேதி வரை இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை நீட்டித்தால் நன்றாக இருக்கும் என பிசிஜி கொடுத்த அறிக்கையை தெலங்கானா அரசு மேற்கோள்காட்டியுள்ளது. இதனிடையே, இது தொடர்பான எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் தெலங்கானா அரசு விளக்கமளித்துள்ளது.
திருச்செங்கோட்டில் மின்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை இயக்கும் எண்ணம் இல்லை. மாற்று போதை நாடுவோருக்கு கவுன்சலிங் வழங்க அரசு மருத்துவமனைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு தொடருமா என்பது பற்றி பிரதமர், முதல்வர் பழனிசாமி எடுக்கும் முடிவில்தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான அழகுபடுத்தல் மற்றும் கட்டுமானத் திட்டங்களை ஒத்திவைக்க வேண்டும்
* இந்த தொகை புதிய மருத்துவமனை அமைக்க, மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க செலவிடலாம் - சோனியா காந்தி
மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.1,250 கோடியை விளம்பரங்களுக்காக செலவிடுகிறது
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் விளம்பரங்களுக்கு தடை விதிக்கவும் - பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்
நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்திவைக்கும் முடிவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொகுதிகளுக்குக் கூடுதல் நிதி ஒதுக்குவதை விடுத்து, இருந்த நிதியையும் பறிப்பது எம்பிகளை நெருக்கடியில் நிறுத்தும் - ஸ்டாலின்
வாட்ஸ் ஆப்பில் பரவும் வதந்திகளை கட்டுப்படுத்த புதிய திட்டம்
* செய்திகளை பகிரும் அளவைக் குறைக்க வாட்ஸ் ஆப் நிறுவனம் முடிவு
* கொரோனா வைரஸ் தொடர்பாக பரவும் வதந்திகளை கட்டுப்படுத்த நடவடிக்கை
சென்னை மாநகர் 15 ஆயிரம் வட்டங்களாக பிரிக்கப்பட்டு, சுகாதார துறையின் மூலம் கணக்கெடுப்பு
கணக்கெடுப்பில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பொதுமக்கள் பதிலளிக்க வேண்டும். சென்னையில் தடை செய்யப்பட்ட 43 இடங்களில் காவல்துறை மூலம் கண்காணிப்பு - மாநகராட்சி ஆணையர்
விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களை விற்பனை செய்வதில் உதவிட அவசரகால தொலைபேசி எண்கள் அறிவிப்பு
விவசாயிகள் 044-22253884, 22253883, 22253496, 95000 91904 என்ற எண்களை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம் - முதலமைச்சர் பழனிசாமி
காய்கறிகள் மற்றும் பழங்கள் சேகரித்து விநியோகம் செய்ய முன்வரும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் வசதி - முதலமைச்சர்
வியாபாரிகள் சந்தை கட்டணத்தை வரும் 30ம் தேதி வரை செலுத்த வேண்டியதில்லை - முதலமைச்சர்
கொரோனா குறித்து கோலத்தின் வழியே விழிப்புணர்வு ஏற்படுத்தும் மதுரை ஆத்திகுளம் பகுதியை சேர்ந்த போதிலெட்சுமி. அவரின் புதுமையான இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
கனடா பிரதமர் ஜஸ்டின் டிரிடியூவின் மனைவி ஷோபி
விவசாயிகளின் விளைபொருட்களை விற்பனை செய்ய அவசரகால தொலைபேசி எண்களை முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த எண்க்ளின் உதவியுடன் வியாபாரிகளை தொடர்பு கொள்ளுதல், சரக்கு போக்குவரத்து அனுமதி, குளிர்சாதன கிடங்கு போன்ற சேவைகளை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நட்பு என்பது வேறு ; பழிவாங்குதல் என்பது வேறு. இந்தியா, உயிர் காக்கும் மருந்துகளை மற்ற நாடுகளுக்கு வழங்கும் முடிவை வரவேற்கிறேன், ஆனால், முதலில் நாட்டு மக்களுக்கு தேவையான மருந்துகளை கைவசம் வைத்தபிறகு மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
வயதானவர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திலேயே உணவுகளை கொண்டு சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் ஏ கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்புடன் தாய்லாந்தில் இருந்து மதப்பிரசாரத்திற்காக ஈரோடு வந்த 6 பேர் மீது ஈரோடு சூரம்பட்டி காவல் நிலைய போலீசார், பாஸ்போர்ட் விதிமீறல், நோய்களை பரப்புதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 40 இடங்களில் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆய்வில் யாருக்காவது கொரோனா கண்டறியப்பட்டால் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்படும் எனறு மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அண்டை நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி வருகிறோம் என்று ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஏற்றுமதி தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
நாட்டு மக்களின் ஆரோக்கியத்திற்காகவும், நல்வாழ்வுக்காகவும் பிரார்த்திக்கிறேன். கொரோனாவுக்கு எதிரான போரில் முன்னிலை வகிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் மோடி, உலக சுகாதார தினத்தையயொட்டி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இத்தாலி - 16,523
ஸ்பெயின் - 13,169
அமெரிக்கா - 10,662
பிரான்ஸ் -8,911
பிரிட்டன் - 5.373
ஈரான் -3,739
சீனா -3,331
நெதர்லாந்து - 1,867
ஜெர்மனி - 1,695
பெல்ஜியம் - 1,632
இந்தியாவில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 4,421 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.