மலேசியாவில் சிக்கியுள்ள 350 இந்தியர்கள்; அழைத்துவரக் கோரி வழக்கு
ஊரடங்கினால் மலேசியாவில் சிக்கியுள்ள 350 இந்தியர்களை நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரிய மனுவிற்கு ஒரு வாரத்தில் பதில் அளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கினால் மலேசியாவில் சிக்கியுள்ள 350 இந்தியர்களை நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரிய மனுவிற்கு ஒரு வாரத்தில் பதில் அளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
coronavirus, corona, covid-19 world lock down, malaysia lock down, 350 Indians trapped in Malaysia, கொரோனா வைரஸ், மலேசியாவில் சிக்கியுள்ள 350 இந்தியர்கள், அழைத்துவரக் கோரி வழக்கு, சென்னை உயர் நீதிமன்றம், Case seeks 350 indians return to india, chennai high court, latest corona virus, lates tamil nadu coronavirus news
ஊரடங்கினால் மலேசியாவில் சிக்கியுள்ள 350 இந்தியர்களை நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரிய மனுவிற்கு ஒரு வாரத்தில் பதில் அளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisment
கொரொனோ நோய் பரவாமல் தடுக்க உலகம் முழுவதும் உள்ள பல நாடுகள் ஊரடங்கை கடைப்பிடித்து வருகிறது.
இதன் காரணமாக உள்நாட்டு, மற்றும் சர்வதேச விமான சேவைகளும் பல நாடுகளுக்கிடையே நிறுத்தப்பட்டுள்ளன.
Advertisment
Advertisements
இந்நிலையில், இந்தியாவில் இருந்து மலேசியாவிற்கு சென்ற 350-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஊரடங்கினால், நீண்ட நாட்களாக அங்கேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுலா விசாவில் சென்ற பலரின் விசா காலம் முடிவடைந்த நிலையில் தங்களை இந்தியாவிற்கு அனுப்பி வைக்கும்படி மலேசிய தூதரகத்திற்கு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஊரடங்கினால் இந்தியா திரும்ப முடியாமல் இருப்பது மிகுந்த மன உலைச்சலை ஏற்படுத்தி இருப்பதாகவும், உடனடியாக மத்திய மாநில அரசு கால தாமதமின்றி உரிய நடவடிக்கை எடுத்து இந்தியா திரும்ப வழிவகை செய்ய உத்தரவிடக் கோரி மலேசியாவில் சிக்கியுள்ள முல்லைநாதன் சார்பில் அவரின் வழக்கறிஞர் ஞானசேகர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மனு தொடர்பாக ஒரு வாரத்தில் பதில் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"