/tamil-ie/media/media_files/uploads/2020/06/template-2020-04-10T161133.385.jpg)
coronavirus, lockdown, chennai, chennai high court, tamil nadu government, e-pass, corona tests, covid pandemic, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil
சென்னையில் ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் ஏதும் தற்போதைக்கு இல்லை எனவும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
சென்னையில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 37 ஆயிரத்து 716 பேர் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதில் சென்னையில் மட்டும் 27 ஆயிரத்து 398 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில், 70 சதவீதம் பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பதால் சென்னையில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்படும் எனவும், முழு ஊரடங்கு அறிவிக்கப்படும் எனவும், அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் உலா வந்தன
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு, நேற்று (11.06.2020) மாநில அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணனிடம் சென்னையில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாக இருப்பதால், ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் ஏதும் அரசிடம் உள்ளதா? தற்போது பின்பற்றப்படும் நடைமுறையில் மாற்றம் ஏதும் கொண்டு வரும் திட்டம் அரசிடம் உள்ளதா? என அரசிடம் தகவல் பெற்று தெரிவிக்க அறிவுறுத்தியிருந்தனர்.
இந்த நிலையில் இன்று (12.06.2020) வழக்கு விசாரணை முடிந்த பின் நீதிபதிகள் வினீத்கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகி நேற்று நீதிபதிகள் எழுப்பிய கேள்வி தொடர்பாக விளக்கம் அளித்தார்.
அப்போது,சென்னையில் ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் ஏதும் தற்போதைக்கு இல்லை என தெரிவித்த அவர்,நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தொற்று பரவலை தடுக்க தீவிரமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவ நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையில்
அவ்வப்பொழுது முடிவுகள் எடுக்கப்பட்டு வருவதாக விளக்கம் அளித்தார்.
மேலும்,கொரோனா அறிகுறி இருந்தால் மக்கள் தாங்களாக முன்வந்து சோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் கொரோனா தொற்றை ஒரு களங்கமாக மக்கள் பார்க்க கூடாது எனவும் அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லஇ - பாஸ் நிறுத்தப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அரசு கூடுதல் வழக்கறிஞர். இது தொடர்பாக வெளியாகும் செய்தகள் அனைத்தும் வதந்தி எனவும் இ - பாஸ் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையில், சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்த கோரி ஏற்கனவே தொடரப்பட்டுள்ள வழக்கை வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உள்ளதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.