மூன்று வார தொடர் ஆராய்ச்சிக்குப் பின், ரிவர்ஸ் வேக்ஸினாலஜி நுட்பத்தின் மூலம் SARS-CoV-2 வைரஸுக்கு எதிரான தடுப்பூசியை கண்டறிந்துள்ளதாக சென்னை எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷயன் புதன்கிழமை தெரிவித்தார்.
Advertisment
முதல் கட்டமாக, வைரஸ் மரபணுவை பிணைக்கக்கூடிய ஒரு செயற்கை பாலிபெப்டைடை பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது.
ரிவர்ஸ் வேக்ஸினாலஜி கடந்த 10 முதல் 15 ஆண்டுகளாக செயல்முறையில் உள்ளது. பொதுவாக, ஆய்வகத்தில் வைரல் கல்ச்சர் மூலமாக ஒரு தடுப்பூசியை உருவாக்க வேண்டும். இந்த செயல்முறை, வைரஸில் உள்ள புரதத்தைக் கண்டுபிடிக்க அதிகநேரம் எடுக்கும். ஆனால், ரிவர்ஸ் வேக்ஸினாலஜி நுட்பத்தில் முழு-மரபணு வரிசைமுறையைக் கண்டறியும் ஆய்வுகள் நடத்தப்படுகிறது.
Advertisment
Advertisement
முழு-மரபணு வரிசைமுறை என்பது ஒரு குறிப்பிட்ட உயிரினத்துடைய மரபணுவின் முழுமையான DNA வரிசையை கண்டறியப் பயன்படுத்தப்படும் ஒரு முறையாகும்.
மரபணு வரிசைகளை வெவ்வேறு நாடுகள் பகிர்ந்துகொள்ளும் வகையில், 2008 –இல் உலக சுகாதார அமைப்பால், சர்வதேச அளவில் தொடங்கப்பட்ட பொதுத்தளத்தில் (GISAID) அனைத்து ஃப்ளூ காய்ச்சல் தரவையும் பகிர்வதற்கான உலகளாவிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதில் இதுவரை சர்வதேச அளவில் 9000 மாதிரிகள் வரிசைப்படுத்தும் ஆய்வு நடைப்பெற்றுள்ளது. இந்த வரிசைப்படுத்தும் முறையிலிருந்து பெறப்பட்ட மரபணு மூலமாக, COVID-19 நோய்த் தொற்றைக் கண்டறியும் பரிசோதனையை செய்து, அதற்கான மருந்தையும் எளிதில் கண்டறிய முடியும்.
எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சுதா சேஷய்யன் கூறுகையில், பயோ இன்பர்மேட்டிக்ஸ் மூலமாக முழு-மரபணு வரிசையைக் கண்டறியும் ஆராய்ச்சியைத் தொடங்கினோம். வைரஸ் மரபணுவை பிணைக்கக்கூடிய ஒரு செயற்கை பாலிபெப்டை-ஐ அடையாளம் கண்டுள்ளோம். அடுத்த கட்டத்தில், இந்த பாலிபெப்டைடை திசு செல் கோடுகளில் சோதிக்க வேண்டும். அதற்காக,நாங்கள் திட்டமிட்டு வருகிறோம். நெறிமுறைகளை வடிவமைத்துக் கொண்டிருக்கிறோம். சில ஒப்புதல்களைப் பெற்ற பிறகு திசு கல்ச்சரில் சோதனை தொடங்கும் ”என்று கூறினார். பாலிபெப்டிற்கான பெயர் இன்னும் வைக்கப்படவில்லை என்று அவர் மேலும் கூறினார்.