கொரோனா வைரஸ்: இன்று 10 முக்கிய செய்திகள்

கொரோனா பொது முடக்க காலத்தில் கொரோனா வைரஸ் தொற்று பற்றியும் கொரோனா பொது முடக்கத்தையொட்டியும் பல நிகழ்வுகளின் செய்திகள் வெளியாகின்றன. இன்று நடைபெற்ற முக்கியமான செய்திகளில் பத்து நிகழ்வுகளை தொகுத்து வாசகர்களுக்கு அளிக்கிறோம். அவை கீழே தரப்பட்டுள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus news today, top 10 headlines today, top 10 headline news, today top 10 important news, கொரோனா வைரஸ், இன்று 10 முக்கிய செய்திகள், தமிழ் செய்திகள், தலைப்பு செய்திகள், coronavirus top 10 news, tamil nadu news, latest tamil news, tamil news today

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக அரசும் கொரோனாவைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. என்றாலும் தொற்று எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

Advertisment

கொரோனா பொது முடக்க காலத்தில் கொரோனா வைரஸ் தொற்று பற்றியும் கொரோனா பொது முடக்கத்தையொட்டியும் பல நிகழ்வுகளின் செய்திகள் வெளியாகின்றன. இன்று நடைபெற்ற முக்கியமான செய்திகளில் பத்து நிகழ்வுகளை தொகுத்து வாசகர்களுக்கு அளிக்கிறோம். அவை கீழே தரப்பட்டுள்ளன.

  • தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக இன்று ஒரே நாளில் 1,384 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை இன்று 5வது நாளாக ஒருநாள் தொற்று எண்ணிக்கை 1000ஐ தாண்டி பதிவாகியுள்ளது.
  • சென்னை மயிலாப்பூர் காவல்மட்டத்தில் பணிபுரியும் ஒரு ஐபிஎஸ் அதிகாரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல, சென்னை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரியும் 3 டி.எஸ்.பி.க்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
  • கொரோனா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டபின் மூடப்பட்ட ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் 2 மாதங்களுக்கு மேல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் திறக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
  • கொரோனா பொதுமுடக்கத்தால் தள்ளிவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 15-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது.
  • பொதுமுடக்க காலத்தில் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் முழு ஊதியம் வழங்க வேண்டும் என்ற அரசாணை மத்திய அரசு திரும்பப்பெற்றது. அரசின் இந்த உத்தரவை திரும்பப் பெற்றது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
  • கொரொனாவால் உலகநாடுகள் பல முடங்கியுள்ள நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா மெய்நிகர் உச்சிமாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில், ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிஸன் உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது, கொரோனா பாதிப்பு நிலைமை சீரடைந்தவுடன் குடும்பத்துடன் ஆஸ்திரேலிய பிரதமர் இந்தியா வர வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
Advertisment
Advertisements
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil
Corona Coronavirus Coronavirus

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: