திமுக பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனுக்கும், பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கும் இடையிலான மறைமுக விவாதம் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன்," கொரோனா வைரஸ் பெருந்தோற்று காலத்தில் அமெரிக்க நாடாக இருந்தாலும் சரி, ஏழை நாடாக இருந்தாலும் சரி, பொதுமக்களுக்குத் தேவையான பொருளுதவி மற்றும் பண உதவிகளை அரசு முன்வந்து தருகிறது. ஆனால், நம்மூரில் தான் பிரதமரும் முதலமைச்சரும் பாத்திரம் ஏந்தி பிச்சை எடுத்து வருகின்றார்கள். மக்களே ஏற்கனவே பிச்சை எடுத்து வரும் நிலையில், மக்களிடம் பிச்சை எடுக்கும் ஒரே அரசு இந்திய அரசு தான்" என்று தயாநிதி மாறன் தெரிவித்திருந்தார்.
இதற்கு ட்விட்டரில் பதிலளித்த எச்.ராஜா, " மத்திய அரசு 80 கோடி மக்களுக்கு 1.70 லட்சம் கோடி நேரடியாகவும் 15,000 கோடி சிகிச்சைக்காகவும் 12,000 கோடி மாநிலங்களுக்கும் தந்துள்ள சூழ்நிலையில், பாரத நாட்டு மக்களை பிச்சைக்காரர்கள் என்றும் மக்களை காத்த பிரதமரை பிச்சை வாங்குவதாக கூறியதற்கு தயாநிதிமாறன் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்" என்று மத்திய அரசின் செயல்பாடுகளை முன்வைத்தார். இருப்பினும், அடுத்தடுத்து வந்த எச். ராஜாவின் ட்வீட் தயாநிதி மாறனை தனிப்பட்ட முறையில் தாக்குவதாய் அமைந்தது.
உதாரணமாக,
தயாநிதி மாறனின் தாதா பிச்சை எடுத்த போது. @Dayanidhi_Maran pic.twitter.com/MZm2cbeGez
— H Raja (@HRajaBJP) April 20, 2020
2004ல் ஸ்டார் விஜயில் வாரிசு அரசியல் குறித்து விவாதம். கோபிநாத் டாக்டர் மகன் டாக்டர் ஆவது தவறா என்றார்.நான் டாக்டருக்கு படித்தால் ஆகலாம். ஆனால் தயாநிதிமாறன் தகப்பனார் இறந்ததால் அதே தொகுதியில் எம்பி.உடனே கேபினட் அமைச்சர் என்பது வாரிசு அரசியல்.என்றேன்.24 மணியில் நியூஸ் உரிமம் ரத்து
— H Raja (@HRajaBJP) April 20, 2020
பிச்சைக்காரர் மறுவாழ்வு நிதி பரிசுச் சீட்டு வெளியிட்டு அதையும் ஆட்டைய போட்ட கூட்டம் இந்திய மக்களை, பிரதமரை பிச்சைக்காரர்கள் என்பதா. @Dayanidhi_Maran #திடீர்பணக்கார_திமிர்தயாநிதி pic.twitter.com/APSswZ04zi
— H Raja (@HRajaBJP) April 19, 2020
Without comment#திடீர்பணக்கார_திமிர்தயாநிதி https://t.co/3eKp4TDG5B
— H Raja (@HRajaBJP) April 19, 2020
தான் ஊழல் செய்து சொத்து சேர்த்ததால் டிஸ்மிஸ் செய்யப்பட்டு விசாரணை கமிஷன் வைக்கப்பட்டதை பயன் படுத்தி தொண்டர்களிடம் பிச்சையெடுத்த கருணாநிதியின் பேரன் தயாநிதியின் திமிர் பேச்சு கண்டிக்கத்தக்கது.@BJP4India @BJP4TamilNadu #திடீர்பணக்கார_திமிர்தயாநிதி pic.twitter.com/lwdvT7nWPQ
— H Raja (@HRajaBJP) April 19, 2020
தயாநிதி மாறன், சற்று நிதானமாக பேசியிருந்தால் இன்னும் ஆழமாக மக்கள் மேடையில் அவரது கருத்து சென்றிருக்கும்.
இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட தனது தந்தை இந்த பெருந்தொற்றில் இருந்து தப்புவாரா? தங்கையின் பிரசவத்தில் ஏதேனும் பாதிப்பு வருமா? இன்று, அத்தை ஏன் அளவுக்கு அதிகமாக இருமினாள்? என்று ஆயிரம் கேள்விகளோடு வாழும் மக்களை எச். ராஜா சற்று நிதானமாக யோசித்திருந்தால், சில கருத்துக்களை பொது மேடைக்கு கொண்டு செல்வதை தற்போது தடுத்திருக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.