”எங்க ஏரியா உள்ள வராத”… விகடனின் இந்த வார கார்ட்டூனுக்கு ஏகப்பட்ட வரவேற்பு!

வேற்றுமையை மறந்து அனைவரும் கொரோனாவை எதிர்த்து போராடுவோம் என்பது தான். ஹாசிப் கானுக்கு வாழ்த்துகள். உங்களின் பணி சிறக்கட்டும்.

Coronavirus outbreak Vikatan magazine Hasif Khan's cartoon on COVID19 Enga area ulla varadha
Coronavirus outbreak Vikatan magazine Hasif Khan's cartoon on COVID19 Enga area ulla varadha

ஆனந்த விகடனில் ஒவ்வொரு வாரமும் தலையங்கத்தை படிக்கவும், அதில் இடம் பெற்றிருக்க்கும் ஹாசிப் கானின் கார்ட்டூனை பார்ப்பதற்குமே விகடன் வாங்கிய வகையறாவைச் சேர்ந்தவர்கள் நாங்கள். ஹாசிப் கானின் ஒவ்வொரு சித்திரமும் நம்மை சிந்திக்கவைக்கும். ஏதோ ஒரு வகையில் நம்மை தாக்கும் என்று சொல்வார்களே அவ்வகை சித்திரத்தை தான் எப்போதும் தருவார். அவரின் டிஜிட்டல் சித்திரங்களுக்கு மயங்காதோர் யாரும் இல்லை. அதே போன்று அந்த டிஜிட்டல் சித்திரங்களுக்காக ஒரு தனி ரசிகப் பட்டாளமே இருக்கிறது.

ஹாசிப் கானின் இந்த வார ஓவியத்தை விகடன் இ-மேகஜின் வெளியிட, அந்த புகைப்படம் நம் அனைவரையும் ஏதோ செய்து விட்டது என்று தான் கூற வேண்டும். கொரோனாவால் அடுத்து என்ன நிகழுமோ என்ற அச்சம் நம் அனைவரையும் கொன்று செரித்துக் கொண்டிருக்கிறது. நாட்டின் தலைவராய் பிரதமர் மோடியும், அவர் ஆட்சியில் வாழும் பிரஜைகளாய் மக்களும் கொரோனாவிற்கு எதிராக பலம் கொண்டு போராடும் படி அமைந்திருக்கிறது அந்த ஓவியம். இந்த கார்ட்டூன் நம்மிடம் கூறுவதெல்லாம் ஒன்று தான். வேற்றுமையை மறந்து அனைவரும் கொரோனாவை எதிர்த்து போராடுவோம் என்பது தான். ஹாசிப் கானுக்கு வாழ்த்துகள். உங்களின் பணி சிறக்கட்டும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Coronavirus outbreak vikatan magazine hasif khans cartoon on covid19 enga area ulla varadha

Next Story
இங்கு தான் பெண் ஆணைத் தேடுகிறாள்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com