சென்னையில் குறையும் கொரோனா; அதிகரிக்கும் டிஸ்சார்ஜ்
சென்னையில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 2000க்கும் மேல் பதிவாகி வந்த நிலையில், தற்போது 1000க்கு மேல் பதிவாகி குறைந்து வருகிறது. கொரொனா டிஸ்சார்ஜ் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
சென்னையில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 2000க்கும் மேல் பதிவாகி வந்த நிலையில், தற்போது 1000க்கு மேல் பதிவாகி குறைந்து வருகிறது. கொரொனா டிஸ்சார்ஜ் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
சென்னையில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 2000-க்கும் மேல் பதிவாகி வந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக, சென்னையில் 1000க்கு மேல் என தொற்று பதிவாகி தினசரி தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. அதே நேரத்தில், சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
Advertisment
சென்னையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து 19,971 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், இந்த மாதம் 25,886 கொரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி தெரியவந்துள்ளது. மேலும், சென்னையில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 16,601 ஆக உள்ளது. இந்த எண்ணிக்கையும் நாளுக்கு நாள் சீராக குறைந்து வருகிறது.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்ட மொத்த மாதிரிகளில் மிகக் குறைவாக 11.6% மாதிரிகள் கொரோனா வைரஸ் நேர்மறை என்று கண்டறியப்பட்டது. அதாவது பரிசோதனை செய்யபட்ட 100 மாதிரிகளில் 11.6% சதவீதம் மாதிரிகள் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இது சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருவதற்கான அறிகுறியாகும்.
Advertisment
Advertisements
பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவல்களின்படி, அனைத்து மண்டலங்களிலும் 70%க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனர். முன்பு கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட் மண்டலங்களாக இருந்த ராயபுரம், தண்டையார்பேட்டை மற்றும் திருவிகநகர் 80%க்கும் அதிகமான மீட்சியைப் பதிவு செய்துள்ளன.
இருப்பினும், சென்னை மாநகராட்சி அதிகாரிகள், கடந்த 21 நாள் முழு பொதுமுடக்கத்தின்போது செய்யப்பட்ட தீவிர கொரோனா வைரஸ் பரிசோதனை தொடர்ந்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஊடகங்களிடம் கூறிய சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷ், “நாஙக்ள் ஒவ்வொரு நாளும் 10,000 முதல் 10,500 மாதிரிகளை கொரோனா வைரஸ் பரிசோதனை செய்கிறோம். இந்த எண்ணிக்கை சில நாட்களில் 11,000 வரை உயர்த்தப்படுகிறது. நாட்டிலேயே நாம்தான் அதிக அளவில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்கிறோம். தற்போது, ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு 45,000 பேர் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை கடந்த 12 -13 நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்தாலும் நாங்கள் குறைந்துவருகிறது என்று ஓய்வெடுக்கமாட்டோம். தொடர்ந்து தீவிரமாக செயல்படுவோம்” என்று கூறினார்.
சென்னையில் கடந்த திங்கள்கிழமை சென்னை மாநகராட்சி 503 காய்ச்சல் முகாம்களை நடத்தியது. இந்த முகாமில் 28,368 பேர் கலந்து கொண்டனர். இதில், 2,142 பேருக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருப்பதாக அடையாளம் காணப்பட்டது. இதையடுத்து, அவர்களில் 2,092 பேர் கொரோனா பரிசோதனைக்கு மாதிரிகளை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
சென்னையில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை குறைட்ந்து வருவதோடு, கொரோனாவில் இருந்து குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது என்பது சாதகமான சூழலாகப் பார்க்கப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"