தந்தை மரணம்; மருத்துவ நிபந்தனைகளுடன் இறுதி சடங்கு செய்த கொரோனா நோயாளி!

ஒரே மகனாக இருந்து தன்னுடைய தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதி கடமைகளை நிறைவேற்றிவிட்டு ஆம்புலன்ஸில் ஏறி மீண்டும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் அவர்

By: Updated: August 3, 2020, 09:52:59 AM

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியை சேர்ந்தவர் தமிழரசன். அவருக்கு 20 வயதில் மகன் ஒருவர் இருக்கிறார். மகனுக்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருக்கும் கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் 31ம் தேதி அன்று தமிழரசன் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார். இந்த செய்தியை அறிந்த அவருடைய மகன் அதிர்ச்சி அடைந்துள்ளார். தந்தைக்கு இறுதி சடங்குகள் செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் அவரை மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. அவருக்கு ஆறுதல் கூறியும் கூட அவரின் மனநிலையை அறிந்த மருத்துவர்கள் மாவட்ட ஆட்சியரின் விசயத்தை கொண்டு சென்றுள்ளனர்.

மேலும் படிக்க : அமித்ஷா, எடியூரப்பாவுக்கு கொரோனா: சந்தித்த தலைவர்கள் சுய தனிமைப்படுத்தல்

மகனின் நிலையை உணர்ந்த அவர், இறுதி சடங்கிற்கு செல்ல அனுமதி அளித்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் பாதுகாப்பு உடைகள் அணிந்து மருத்துவ நிபந்தனைகளுன் தன்னுடைய தந்தைக்கு இறுதி சடங்கினை நடத்தியுள்ளார். ஒரே மகனாக இருந்து தன்னுடைய தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதி கடமைகளை நிறைவேற்றிவிட்டு ஆம்புலன்ஸில் ஏறி மீண்டும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் அவர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Coronavirus positive patient did last rites to his father in pudukottai district

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X