வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகை வழங்குங்கள் – ரஜினி ட்வீட்

அரசோடு இணைந்து மக்களாகிய நாமும் இந்த கொடிய வைரஸ் பரவாமல் தடுக்க ஒத்துழைப்பு தரவேண்டும்

Coronavirus Rajinikanth requests tn government to give compensation
Coronavirus Rajinikanth requests tn government to give compensation

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக அரசு எடுத்துக் கொண்டிருக்கும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் தமிழக அரசு எடுத்துக்கொண்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என்றும், அரசோடு இணைந்து மக்களாகிய நாமும் இந்த கொடிய வைரஸ் பரவாமல் தடுக்க ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க : கொரோனா சிகிச்சை : உங்களை உலகம் தலை வணங்குகிறது! மருத்துவர்களுக்கு “ராயல் சல்யூட்”!

மேலும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவித்தொகை அளித்தால் அவர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும் என்றும் தன்னுடைய வேண்டுகோளை ட்வீட்டர் மூலம் தமிழக அரசுக்கு வைத்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

மால்கள் முதல் கடைகள், பள்ளிகள், மக்கள் அதிக கூடும் நிகழ்வுகள் என அனைத்திற்கும் செயல்பட தடை விதிக்கப்பட்டிருக்கின்ற நேரத்தில் அன்றாட வேலை செய்து தினக்கூலி வாங்கும் நபர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போன்று சிறு தொழில் புரிபவர்களின் நிலையும் மோசம் அடைந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Coronavirus rajinikanth requests tn government to give compensation to whose livelihoods highly affected

Next Story
“கை சுத்திகரிப்பான் அவசியம் இல்லை; கைகளை சோப்பு போட்டு கழுவினாலே போதும்” – அமைச்சர் விஜயபாஸ்கர்coronavirus, covid-19, tamil nadu govt action on covid-19, அமைச்சர் விஜயபாஸ்கர், minister vijayabaskar interview, கை சுத்திகரிப்பான், hand sanitiser, கொரோனா வைரஸ், கைகளை சோப்பு போட்டு கழுவினால் போதும், handwash with soap enough to public, chennai, corona action news, coronavirus news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com