Advertisment

கொரோனா நிவாரணம் ரூ 1000: ரேஷன் கடைகளில் கூட்டத்தை தவிர்க்க அரசு கண்டிப்பான உத்தரவு

கொரோனா நிவாரண நிதியாக தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.1000, ரேசன் கடைகளில், ஏப்ரல் 2 முதல் 15ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. ரேசன் கடைகளில் அதிக மக்கள் கூடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus, tamil nadu corona virus relief fund, coronavirus relief fund will ditributed from April 2, கொரோனா வைரஸ், coronavirus relief fund rs 1000, tamil nadu government announced, corona, கொரோனா நிவாரண நிதி, தமிழக அரசு, கொரோனா நிவாரண நிதி ரூ.1000 ஏப்ரல் 2 -ம் தேதி வழங்கப்படும், corona virus, coronavirus news, corona latest news, latest coronavirus news in tamil, tamil nadu govt announced coronavirus relief fund, cm edappadi palaniswami

தமிழகத்தில் ஏப்ரல் 2-ம் தேதி முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை ரேஷன் கார்டுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படுகிறது. ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்டவைகள் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்து உள்ளது.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பிரதமர் மோடி நாடு முழுவதும் 21 நாட்களுக்கு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதனைத் தொடந்து, தமிழகத்தில் ஏற்கெனவே அறிவித்த மார்ச் 31 வரையிலான ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 வரை நீட்டிக்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி இன்று அறிவித்தார்.

முன்னதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன் தினம், தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 நிவாரணமாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் ஏப்ரல் 2ம் தேதி முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை ஒரு ரேஷன் அட்டைக்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது. ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்டவைகள் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்து உள்ளது.

தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஊழியர்கள் மூலம் டோக்கன் கொடுக்கப்படும். அதில் நிவாரண நிதி எந்த தேதியில், எப்போது வழங்கப்படும் என்பது தெரிவிக்கப்பட்டு இருக்கும். அட்டைதாரர்கள் அந்த தேதியில் வந்து பெற்று கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குடும்ப அட்டைதாரர்கள் பணத்தை பெறுவதற்கு ரேஷன் கடைகளில் கூட்டமாக கூடுவதைத் தவிரிப்பதற்காக டோக்கன் வழங்கப்பட்டு அந்த டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,  பொதுமக்களை ஒரு மீட்டர் இடவெளியில் வட்டமிட்டு நிற்கவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil”
Tamil Nadu Corona Corona Virus Edappadi K Palaniswami
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment