தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 1,201 பேர் பலி

கடந்த சில நாட்களாக தினமும் 3,000-க்கும் மேலான கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக பலி எண்ணிக்கை 1201 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 50,074 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில்,  3,943 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 90,167ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 60 உயிரிழந்ததைத் தொடர்ந்து கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,201 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் கடந்த ஒருவாரமாக கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு, ஜூலை 31-ம் தேதி வரை தமிழகம் முழுவது ஊரட்டங்கை நீட்டித்துள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக சுகாதாரத்துறை மாநிலத்தில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை, உயிரிழப்பு எண்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கை உள்ளிட்ட புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறது.

அதன்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 3,943 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 90,167ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 60 உயிரிழந்ததைத் தொடர்ந்து கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,201 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மொத்தம் 90 கொரோனா பரிசோதனை மையங்களில் இன்று 30,053 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்றும் இதுவரை மொத்தம் 11 லட்சத்து 16 ஆயிரத்து 622 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், இன்று ஒரே நாளில், 2,325 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 50,074 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 38,889ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 2,393 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னயில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 58,327 ஆக உயர்ந்துள்ளது. சென்னையை அடுத்து அதிகப்பட்சமாக மதுரை மாவட்டத்தில் 257 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 160 பேருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் 153 பேருக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 90 பேருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 88 பேருக்கும் தேனி மாவட்டத்தில் 75 பேருக்கும் கடலூர் மாவட்டத்தில் 65 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தினமும் 3,000-க்கும் மேலான கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிகப்படியான கொரோனா தொற்று பதிவாகி வருகிறது. இன்று அதே போல, பதிவாகியுள்ளது. தென் மாவட்டங்களில் மதுரையில் அதிகப்பட்சமாக கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக பதிவாகி வருகிறது. இதனால், மதுரை கொரோனா ஹாட் ஸ்பாட் பகுதியாக மாறுகிறதோ என்று பொதுமக்களிடையே கவலை ஏற்படச் செய்துள்ளது.

இன்று அரியலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களில் ஒரு தொற்றுகூட பதிவாகவில்லை என்பது ஆறுதல் அளிக்கும் விஷயமாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close