Advertisment

சென்னையில் இந்த 3 பகுதிகளில் குறையாத கொரோனா; மாநகராட்சி தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம்

தேனாம்பேட்டை, அடையாறு, வளசரவாக்கம், மாதாவரம், கோடம்பாக்கம் பகுதிகளில் மாவட்ட சராசரியைக் காட்டிலும் குறைவான தொற்று எண்ணிக்கையே பதிவாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
Chennai corona virus, daily reports

coronavirus second wave chennai : மே மாத மத்திய வாரங்களில் 7500க்கும் மேலாக கொரோனா வைரஸ் தொற்று சென்னையில் பதிவான நிலையில் தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை 2000க்கும் குறைவாக பதிவாகியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் கொரோனா தொற்று பரவும் வீதம் 34% ஆக குறைந்துள்ளது. ஆனால் அனைத்து மண்டலங்களிலும் ஒரே மாதிரியாக தொற்று குறையவில்லை. தண்டையார்பேட்டை, ராயபுரம் மற்றும் திருவிக நகர் போன்ற பகுதிகளில் தொற்று விகிதம் இன்னும் குறையவில்லை. மற்ற பகுதிகளில் 34% தொற்று குறைந்துள்ள நிலையில் இந்த மண்டலங்களில் முறையே 8%, 10% மற்றும் 16% மட்டுமே குறைந்துள்ளது. இந்த மூன்று மண்டலங்களில் மே 25 முதல் 31 வரை பதிவான வழக்குகள் எண்ணிக்கை சராசரியாக 485 ஆக இருந்த நிலையில் ஜூன் 1 முதல் 7 தேதிகளில் தொற்றின் எண்ணிக்கை 429 வரையே குறைந்துள்ளது.

Advertisment

அண்ணா நகர் பகுதிகளில் தினசரி பதிவாகும் வழக்குளில் 50% குறைந்துள்ளது. 309 ஆக இருந்த நோய் தொற்று தற்போது 168 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டு வாரங்களில் ஒரு லட்சம் மக்கள் தொகையில் ஏற்படும் பாதிப்பின் எண்ணிக்கை குறைந்த போதிலும் கூட மூன்று மண்டலங்களில் கொரோனா தொற்று பரவும் வீதத்தில் மாற்றம் ஏதும் இல்லை.

முதல் தொற்றின் போது மூன்று மண்டலங்களும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன என்பதையும், மற்ற மண்டலங்களுடன் ஒப்பிடும்போது, இரண்டாவது அலைகளின் போது ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு ஒப்பீட்டளவில் குறைவான வழக்குகள் இருப்பதையும் கவனத்தில் கொள்ளலாம். ஆனால் அதிக மக்கள் தொகை கொண்ட இந்த பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக தொற்று எண்ணிக்கை குறையவில்லை. தொற்று எண்ணிக்கையை குறைப்பதற்கு அதிக அளவில் முயற்சிகள் இந்த மண்டலங்களில் தேவைப்படுகிறது.

தேனாம்பேட்டை, அடையாறு, வளசரவாக்கம், மாதாவரம், கோடம்பாக்கம் பகுதிகளில் மாவட்ட சராசரியைக் காட்டிலும் குறைவான தொற்று எண்ணிக்கையே பதிவாகியுள்ளது.

கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்த போதிலும் சோதனைகளின் எண்ணிக்கையை குறைக்காமல் 32 ஆயிரம் என்ற அளவிலேயே வைத்துள்ளோம். மேலும் தனியார் மருத்துவமனைகள், ஸ்கேன் செண்டர்கள் மற்றும் மருந்தகங்களில் கொரோனா அறிகுறிகளுடன் இருக்கும் மக்களைப் பற்றி தகவல்கள் தருமாறும் கேட்டுள்ளோம் என்று ககன்தீப் கூறியுள்ளார்.

சென்னை மாந்கராட்சி கொரோனா தொற்று ஏற்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் தடம் அறிவதை மிகவும் தீவிரப்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார். கொரோனா பாசிட்டிவ் வீதம் இங்கு குறைவாகவே இருப்பதை மேற்கோள் காட்டிய அவர், சென்னை மாநகராட்சி தடுப்பூசிகளை இப்பகுதிகளில் வழங்குவதை தீவிரப்படுத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment