Advertisment

கோவை, சென்னை, நெல்லையில் அதிகம்: மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்

ஒரே நாளில், 'கொரோனா' வைரஸ் பாதிப்பு, 110 பேரிடம் கண்டறியப்பட்டுள்ளதால், பாதிப்பின் மூன்றாம் கட்டத்திற்கு தமிழகம் மாறுமோ என்ற, அச்சம் எழுந்துள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus, tamil nadu, delhi congregation, corona test, health deapartment, beela rajesh, coronavirus cases in india, coronavirus cases globally,coronavirus tamil news, coronavirus tamil nadu news, coronavirus chennai news, coronavirus Tamil nadu, coronavirus outbreak

டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகம் திரும்பிய 110 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது.

Advertisment

ஒரே நாளில், 'கொரோனா' வைரஸ் பாதிப்பு, 110 பேரிடம் கண்டறியப்பட்டுள்ளதால், பாதிப்பின் மூன்றாம் கட்டத்திற்கு தமிழகம் மாறுமோ என்ற, அச்சம் எழுந்துள்ளது. அபாய கட்டத்தை நோக்கி, தமிழகம் நகரும் நிலை ஏற்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை செயலர் பீலா விளக்கம் : கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, 74 ஆயிரத்து, 330 பேர், அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 81 பேர், அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 4,070 பேர், தொடர் கண்காணிப்பு முடிந்து, இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். அரசு மருத்துவமனைகளில், 995 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை, 2,726 பேருக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், டெல்லி மாநாட்டில் பங்கேற்ற, 110 பேருக்கு, கொரோனா வைரஸ் இருப்பது, உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 234 ஆக உயர்ந்துள்ளது. மாநாட்டில் பங்கேற்றவர்களில், இதுவரை, 190 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்ற, மற்றவர்களும் தாமாக முன்வந்தால், அவர்களுக்கும், அவரது வீட்டில் உள்ளவர்களுக்கும், சமூகத்திற்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.

மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விபரம்

சென்னை - 29

திருநெல்வேலி - 29

ஈரோடு - 21

நாமக்கல் - 18

சேலம் - 6

மதுரை - 15

கன்னியாகுமரி - 5

கோவை - 33

விழுப்புரம் - 3

வேலுார் - 1

ராணிப்பேட்டை - 1

விருதுநகர் - 1

திருவண்ணாமலை - 2

திருப்பூர் - 1

திருச்சி -1

துாத்துக்குடி - 3

தஞ்சாவூர் - 1

கரூர் - 2

காஞ்சிபுரம் - 3

செங்கல்பட்டு - 8

தேனி - 20

திண்டுக்கல் - 17

திருப்பத்துார் - 7

சிவகங்கை - 5

திருவாரூர் - 2

மொத்தம் - 234

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 1,103 பேரின் முகவரி உள்ளிட்ட தகவல்கள் உள்ளன. அவர்கள் வீட்டில் உள்ளவர்கள், அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள் என அனைவரிடமும் தற்போது சோதனை மேற்கொண்டு வருகிறோம். மேலும் அவர்கள் அனைவரின் வீட்டின் அருகே தொற்று நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் செயல்படுத்த தொடங்கி உள்ளனர். அவர்கள் வீட்டின் அருகே 8 கி.மீ. சுற்றளவு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக கொண்டுவரப்பட்டு, அங்கு 50 வீடுகளுக்கு ஒரு ஊழியர் என கணக்கெடுப்பு நடத்தப்படும். மேலும் கணக்கெடுக்கும் 4 ஊழியருக்கு ஒரு டாக்டர் போடப்பட்டு இந்த தொற்று நோய் கட்டுப்படுத்துதல் திட்டம் தொடர்ந்து 2 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Tamil Nadu Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment