கொரோனா தொற்று கர்ப்பிணிக்கு பிறந்தது ஆண் குழந்தை – தாயும் சேயும் நலம்

தாய் மற்றும் குழந்தையின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.

By: Updated: April 13, 2020, 09:57:32 AM

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட கர்ப்பிணி, ஈரோடு அரசு மருத்துவனையில் ஆண் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் பலரையும் அதன்பக்கம் ஈர்த்துள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு பகுதியை தனிமைப்படுத்துவதாக அறிவித்திருந்தது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ளவர்களுக்கு சுகாதாரத்துறை சாார்பில் கொரோனா சோதனை நிகழ்த்தப்பட்டது.

இதில் நிறைமாத கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் தனிமைப்படுத்தப்பட்டார். இவரது கணவர் டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்றிருந்தார். அப்போது அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரது கர்ப்பிணி மனைவிக்கும் தொற்று பரவியுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

இவர்கள், ஈரோடு அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்தன.

இதனிடையே, கர்ப்பிணிக்கு பிரசவ வலி வந்ததை தொடர்ந்து, அவர் பெருந்துறையில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. கடந்த சனிக்கிழமை இரவு, சிசேரியன் மூலம், அவர் ஆண் குழந்தையை பிரசவித்தார். தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தாய் மற்றும் குழந்தையின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Coronavirus tamil nadu erode caeserian delhi congreagation baby boy

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X