Corona Updates : தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 411ஆக உயர்வு; சென்னையில் 81

Coronavirus Latest LIVE Updates: இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2300-ஐ கடந்துள்ளது.

Coronavirus Latest LIVE Updates: இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2300-ஐ கடந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Corona Updates : தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 411ஆக உயர்வு; சென்னையில் 81

Covid-19 Positive Cases Update: இன்று காலை இந்திய மக்களிடையே உரையாற்றினார். அப்போது, கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வை நோக்கி நாம் செல்ல வேண்டும் எனவும், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒளிமயமான காலத்தை கொண்டு வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Advertisment

தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர்களில் 74 பேர் டெல்லியில் நடந்த மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள். ஒருவர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர். தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 309 ஆக உயர்ந்துள்ளது. ஆகையால் பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்னும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மாநிலங்களுக்கான நிதியை முன்கூட்டியே ஒதுக்க வேண்டுமென, பிரதமர் மோடியுடனான வீடியோ கான்பரன்சிங் கூட்டத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2300-ஐ கடந்துள்ளது. இதில் 156 பேர் குணம் அடைந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

Advertisment
Advertisements

Coronavirus Latest News Live Updates

கொரோனா வைரஸ் குறித்த, அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.














Highlights

    22:20 (IST)03 Apr 2020

    ஈஷாவுக்கு எதிராக அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை

    ஈஷாவுக்கு எதிராக அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகக் காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

    22:07 (IST)03 Apr 2020

    உங்கள் குடும்பத்தை பாதுகாப்பதற்கு சமம்

    உங்களை பாதுகாப்பது உங்கள் குடும்பத்தை பாதுகாப்பதற்கு சமம்; வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்!

    - பிரபல நடிகர் ஜாக்கி சான்

    21:50 (IST)03 Apr 2020

    10 நாட்களில் சிறைகளிலிருந்து 3,963 கைதிகள் விடுதலை

    கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களில் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 3963 கைதிகள் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் 70 சதவீதம் பேர் விசாரணைக் கைதிகளாகவும், 30 சதவீதம் பேர் தண்டனைக் கைதிகளாகவும் உள்ளனர்.

    சிறையில் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்ட 50 சதவீதம் பேர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2 நாட்களில் சென்னை புழல் சிறையிலிருந்து 200 கைதிகள் ஜாமினில் விடுதலையாகி தங்கள் வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.

    21:32 (IST)03 Apr 2020

    ஒன்றரை வயது குழந்தையுடன் 25 வயது இளம்பெண்....

    அசாமில் ஊரடங்கு உத்தரவால் 25 வயது இளம்பெண் ஒருவர் தனது ஒன்றரை வயது குழந்தையை தனது தோளில் தூக்கிக்கொண்டு நடைபயணத்தை தொடங்கியுள்ளார்.

    21:27 (IST)03 Apr 2020

    அனைவரும் 14 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்

    டெல்லியில் தப்லீக் ஜமாத் மாநாட்டுக்குச் சென்று திரும்பியவர்களில் 647 பேருக்கு கடந்த 2 நாட்களில் கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் 14 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    20:27 (IST)03 Apr 2020

    பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன்.

    பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன்.பாதுகாப்புக்கவசங்கள் தட்டுப்பாடுக்கான தீர்வு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி விநியோகம், ஏழைமக்களின் வாழ்வாதாரம், வருங்கால பொருளாதார நடவடிக்கை என, ஆனால் நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்.கமல் டுவிட்டர் பதிவு

    20:20 (IST)03 Apr 2020

    பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2500 ஐ கடந்ததது

    இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2500 ஐ கடந்ததது

    மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2547 ஆக உயர்வு

    உயிரிழப்பு 62 ஆக அதிகரிப்பு

    163 பேர் குணமடைந்துள்ளனர்.

    20:07 (IST)03 Apr 2020

    7 மணி முதல் 10 மணிவரை திறந்திருக்க அனுமதி

    காய்கறி, மளிகை கடைகள், உணவகங்கள், பால் கடைகள் ஏற்கனவே அறிவித்த கால கட்டத்தில் திறந்திருக்க அனுமதி நீட்டிப்பு

    சலூன் கடைகள் காலை 7 மணி முதல் 10 மணிவரை திறந்திருக்க அனுமதி

    மருத்துவமனைக்கு இருசக்கரவாகனத்தில் செல்ல தடை - ஆம்புலன்சில் மட்டுமே செல்ல அனுமதி

    மருத்துவரின் பரிந்துரை சீட்டுக்கு மட்டுமே மருந்து கொடுக்க மருந்த‌கங்களுக்கு உத்தரவு

    19:53 (IST)03 Apr 2020

    மாநில அரசுகளுக்கு ரூ.11,000 கோடி நிதி

    'கொரோனா: மாநில அரசுகளுக்கு ரூ.11,000 கோடி நிதி'

    மாநில அரசுகளுக்கு முதற்கட்ட பேரிடர் மேலாண்மை நிதியாக ரூ.11,092 கோடி வழங்க ஒப்புதல் அளித்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா

    19:50 (IST)03 Apr 2020

    நெகட்டிவ் என வந்தாலும் மீண்டும் பாசிட்டிவ் வர வாய்ப்புள்ளது

    தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்புவோர் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். கொரோனா சோதனையில் ஒருமுறை நெகட்டிவ் என வந்தாலும் மீண்டும் பாசிட்டிவ் வர வாய்ப்புள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்

    19:27 (IST)03 Apr 2020

    சிக்கன், மட்டன், மீன் கடைகள் மூடப்படும்

    மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 6 ம் தேதி ஒரு நாள் மட்டும் சிக்கன், மட்டன், மீன் கடைகள் மூடப்படும்

    மற்ற நாட்களில் விற்பனையின்போது சமூக விலகலை பின்பற்றாமல் இருந்தால் கடைகளுக்கு
    சீல் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

    19:09 (IST)03 Apr 2020

    4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

    கர்நாடகாவில் மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

    பெலகவியை சேர்ந்த மூவர், டெல்லி இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்றவர்கள் - மாநில சுகாதாரத்துறை

    19:09 (IST)03 Apr 2020

    11 CISF வீரர்களுக்கு கொரோனா!

    மும்பை விமான நிலையத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 11 சி.ஐ.எஸ்.எஃப் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

    நேற்று 4 பேருக்கும், இன்று 7 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக சி.ஐ.எஸ்.எஃப் அறிவிப்பு.

    18:43 (IST)03 Apr 2020

    சென்னையில் 81 பேருக்கு கொரோனா

    சென்னையில் 81 பேருக்கு கொரோனா. தமிழகத்தில் அதிகபட்சமாக, சென்னையில் 81 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது

    - சுகாதாரத்துறை

    18:26 (IST)03 Apr 2020

    பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை

    பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு அறிகுறிகள் இருக்குமேயானால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வரவும் - பீலா ராஜேஷ்

    18:25 (IST)03 Apr 2020

    கோவை ஈஷா நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடமும் விசாரணை

    கொரோனா பாதிப்பில் தமிழகம் 2வது நிலையில்தான் உள்ளது - சுகாதாரத்துறை

    * தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 411 ஆக உயர்வு - சுகாதாரத்துறை

    * கோவை ஈஷா நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது - சுகாதாரத்துறை

    18:22 (IST)03 Apr 2020

    இந்திய பொருளாதார வளர்ச்சி 4% ஆக குறையும் - ஆசிய மேம்பாட்டு வங்கி கணிப்பு

    இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதம் 4 சதவீதத்துக்கு குறையும் என ஆசிய மேம்பாட்டு வங்கி கணிப்பினை வெளியிட்டுள்ளது. கொரோனா தாக்கம் காரணமாக தொழில்துறை முடங்கியுள்ள நிலையில் வளர்ச்சி எதிர்பார்ப்பு சரியும் என தெரிவித்துள்ளது. கடந்த சில நிதியாண்டுகளாக பொருளாதார வளர்ச்சி சரிந்து வந்த நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 6 புள்ளி 2 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது பொருளாதார வளர்ச்சி 4 சதவீதமாக சரியும் என கணிப்பு வெளியாகியுள்ளது

    18:07 (IST)03 Apr 2020

    102 பேரில் 100 பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள்

    இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 102 பேரில் 100 பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள்

    - சுகாதாரத்துறை செயலாளர்

    18:03 (IST)03 Apr 2020

    தமிழகம் இன்னும் 2ஆம் நிலையில்தான் இருக்கிறது

    கொரோனா தொற்றில் தமிழகம் இன்னும் 2ஆம் நிலையில்தான் இருக்கிறது - சுகாதாரத்துறை செயலாள

    18:02 (IST)03 Apr 2020

    4 போலீசார் படுகாயம்

    கர்நாடகாவின் மங்களூரு மற்றும் ஹூப்ளியில் கூட்டம் கூடி தொழுகை நடத்த அனுமதி மறுப்பு

    * கூட்டத்தினர் கடுமையாக தாக்கியதில் 4 போலீசார் படுகாயம்

    * தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த போலீசார்

    * 40 பேர் மீது வழக்குப்பதிவு

    18:02 (IST)03 Apr 2020

    ஒரே நாளில் 172 பேருக்கு வைரஸ் தொற்று

    உத்திர பிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது

    இதில் 42 பேர் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள்

    17:39 (IST)03 Apr 2020

    ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படாது

    "7 ஆம் தேதி முதல் நியாய விலைக்கடைகளில் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படாது. வீடு வீடாக சென்று மட்டுமே ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்" - தமிழக அரசு புதிய உத்தரவு

    17:14 (IST)03 Apr 2020

    இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு

    சென்னையில் ஏப்ரல் 12 வரை இறைச்சிக் கடைகளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவு

    17:14 (IST)03 Apr 2020

    ரூ.4,500 கட்டணம்

    கொரோனா கண்டறியும் சோதனைக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.4,500 கட்டணம் நிர்ணயம் செய்ததற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.

    16:56 (IST)03 Apr 2020

    கொரோனா உறுதி என தகவல்

    சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் இருவருக்கு கொரோனா உறுதி என தகவல்

    * இருவரும் தப்பிவிட்டனர் என காவல் துறையிடம் சுகாதாரத் துறை புகார்

    16:56 (IST)03 Apr 2020

    ஒரு நாளில் மட்டும் 102 பேருக்கு கொரோனா

    தமிழகத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

    16:51 (IST)03 Apr 2020

    ரூ.1,00,61,989 நிதியுதவி

    பிரதமரின் கொரோனா தடுப்பு நிவாரணத்திற்கு உச்சநீதிமன்ற ஊழியர்கள் ரூ.1,00,61,989 நிதியுதவி

    16:27 (IST)03 Apr 2020

    தனிமைப்படுத்தப்பட்ட நபர் உயிரிழப்பு

    டெல்லி மாநாட்டில் பங்கேற்று சேலம் திரும்பி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் உயிரிழப்பு

    * சேலத்தில் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட 58 வயதான நபர் திடீரென உயிரிழந்தார்

    16:06 (IST)03 Apr 2020

    ஆந்திராவில் முதல் பலி!

    கொரோனா - ஆந்திராவில் முதல் பலி!

    ஆந்திர மாநிலத்தில் மார்ச் 30ம் தேதி உயிரிழந்த விஜயவாடாவைச் சேர்ந்த 55 வயது நபருக்கு கொரோனா இருந்தது உறுதியானது!

    இறந்தவரின் மகன் டெல்லிக்கு சென்றுவந்த நிலையில் இருவருக்கும் கொரோனா தொற்று பாதித்திருந்ததாக தகவல்..

    15:50 (IST)03 Apr 2020

    உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54,045ஆக உயர்வு

    உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54,045ஆக உயர்வு

    அதிகபட்சமாக இத்தாலியில் 13,915, ஸ்பெயினில் 10,935, அமெரிக்காவில் 6,095 பேர் உயிரிழப்பு

    15:38 (IST)03 Apr 2020

    கபசுர குடிநீர் வழங்க அரசுக்கு உத்தரவிட முடியாது

    கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்க அரசுக்கு உத்தரவிட முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்

    * கபசுர குடிநீர் வழங்க வேண்டும் என்ற வழக்கில் தமிழக அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம் - சென்னை உயர்நீதிமன்றம்

    15:38 (IST)03 Apr 2020

    ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது

    சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து மத தலைவர்களுடனான தலைமைச் செயலாளரின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.

    15:38 (IST)03 Apr 2020

    இலவச உணவு வழங்கும் திட்டம் ரத்து

    கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கின் எதிரொலி

    * இந்திரா கேண்டீனில் ஏழை, எளிய மக்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் ரத்து

    * தவறாக பயன்படுத்தப்படுவதாக நகர மேம்பாட்டு நிர்வாகம் விளக்கம்

    * இந்திரா கேண்டீன் என்பது தமிழகத்தில் அம்மா உணவகம் போல் செயல்பட்டு வருவது...

    15:18 (IST)03 Apr 2020

    நோயாளிகளுக்கு உதவ ரோபோ

    சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு உதவ ரோபோ அறிமுகம்

    நோயாளி / தனிமைப்படுத்தப்பட்டோருக்கு மருந்து, உணவு வழங்கும் பணியில் ரோபோ ஈடுபடுத்தப்படும்

    - அமைச்சர் விஜயபாஸ்கர்

    15:17 (IST)03 Apr 2020

    ஒரு நாள் சம்பளம் பிடித்தம்

    முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்க முடிவு செய்துள்ள அரசு ஊழியர்களின் ஊதியத்தில், ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் - தலைமைச் செயலாளர் சண்முகம்.

    15:16 (IST)03 Apr 2020

    சிங்கப்பூர் லாக்டவுன்

    சிங்கப்பூரில் வரும் 7ம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

    15:15 (IST)03 Apr 2020

    மதத்தலைவர்களுடன் ஆலோசனை

    கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்வது தொடர்பாக மதத்தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

    14:55 (IST)03 Apr 2020

    கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின்

    கொரோனா ஊரடங்கால், பாதிக்கப்பட்டுள்ள, கொளத்தூர் மக்களுக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் பல்வேறு உதவிகளை செய்தார். காய்கறி கடைகளை பார்வையிட்ட அவர், வியாபாரிகளிடம் விலை குறித்த விவரங்களை கேட்டறிந்தார். அதோடு, தொகுதி மக்களுக்கு இலவச உணவு பொருட்களையும் வழங்கினார். தூய்மை பணியாளர்களுக்கு உணவு, முக கவசம், சானிடைசர், பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்டவையும்,  வெளிமாநில மக்களுக்கு தேவையான உதவியையும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் செய்து கொடுத்தார். 

    13:53 (IST)03 Apr 2020

    முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர் சந்திப்பு

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”சமூக விலகலை கடைப்பிடிக்கவே ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது 144 சட்டம் கடுமையாக்கப்படும். வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகள் அரசு சார்பில் செய்து தரப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்புபவர்கள் மீது 92 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் வழங்கப்படும் விலையில்லா உணவுப்பொருட்களை இந்த மாத இறுதிக்குள் வாங்கிக் கொள்ளலாம். ஒவ்வொருவரின் வீடுகளுக்குச் சென்று டோக்கன் வழங்கப்படும். அப்போது ரூ.1000 வழங்கப்படும். இந்த இக்கட்டான சூழலில் உணவு மற்றும் போக்குவரத்து செலவுகளுக்கு, அரசு அங்கீகரித்த பத்திரிக்கையாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.3000 வழங்கப்படும்” என்றார்.  

    13:31 (IST)03 Apr 2020

    உச்சநீதிமன்றம் உத்தரவு

    ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்த மற்றும் தனியார் தொழிலாளர்களின் நிலை தொடர்பான வழக்கில், வரும் 7-ம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    13:00 (IST)03 Apr 2020

    உ.பி-யில் புதிதாக 172 பேருக்கு கொரோனா தொற்று

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக கொரோனா உறுதியான 172 பேரில் 42 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது. 

    12:34 (IST)03 Apr 2020

    தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

    கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்காவிடில் தனியார் மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சில சிகிச்சைகளை அளிக்க தனியார் மருத்துவமனைகள் மறுப்பதாக புகார் எழுந்ததால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    11:59 (IST)03 Apr 2020

    விளையாட்டு பிரபலங்களுடன் மோடி ஆலோசனை

    கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக விளையாட்டு பிரபலங்கள் 40 பேருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் சச்சின் டெண்டுல்கர், கங்குலி, பி.வி.சிந்து, ராணி ராம்பால் உள்ளிட்டோர் காணொலி மூலம் பங்கேற்றுள்ளனர். 

    11:37 (IST)03 Apr 2020

    ராமதாஸ் ட்வீட்

    11:33 (IST)03 Apr 2020

    3100 வாகனங்கள் பறிமுதல்

    புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 850 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 3100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

    11:15 (IST)03 Apr 2020

    ஆளுநர்களுடன் குடியரசுத் தலைவர் ஆலோசனை

    கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில ஆளுநர்களுடன், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆலோசனை நடத்துகிறார். 

    10:39 (IST)03 Apr 2020

    கொரோனா எண்ணிக்கை நிலவரம்

    இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,301 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆகவும்,157 பேர் குணமடைந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

    10:32 (IST)03 Apr 2020

    மதத் தலைவர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை

    அனைத்து மதத் தலைவர்களுடன் இன்று பிற்பகல் 3 மணிக்கு தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்துகிறார். இதில் கொரோனா குறித்து மதரீதியாக கருத்துகள் வெளியாவதைத் தவிர்க்க வேண்டுமென வலியுறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 

    சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்ட கொரோனா வைரஸ் மருத்துவ மேலாண்மை குறித்த வழிகாட்டுதல்களின்படி, லேசான அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகள், மூச்சுத் திணறல் இல்லாமல் குறைவான காய்ச்சல், இருமல், தொண்டைப்புண் அறிகுறி உள்ளவர்ளுக்கு விரைவான பாதிப்பு இல்லாவிட்டால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படக் கூடாது. ஆனாலும், இந்த வழிகாட்டுதல்கள் “மருத்துவ நடைமுறையை அல்லது நிபுணர்களின் ஆலோசனையை மாற்றுவதற்காக அல்ல” என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
    Tamil Nadu Coronavirus Corona

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us: