சென்னை தி.நகரில் உள்ள கடைகள் மூடல் : மாநகராட்சி அதிரடி நடவடிக்கை
Chennai t nagar shops closed : சென்னை தி நகரில் உள்ள ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகளில் கிருமிநாசினி தெளிப்பது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பது ஆகியவற்றை கடைபிடிக்கவில்லை என தெரியவந்தது.
சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகளை மூட சென்னை மாநகராட்சி அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது.
Advertisment
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனிக் கடைகள் மட்டும் திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகள் உள்பட சென்னையின் பல பகுதியில் உள்ள கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் சென்னையில் கொரோனாவால் தாக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டிய நிலையில் சென்னை சுகாதார அமைச்சகத்தின் சார்பில் குழுக்கள் நியமனம் செய்யப்பட்டு அந்த குழுக்கள் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று திறக்கப்பட்ட கடைகளில் அரசு அறிவித்த வழிகாட்டு முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றனவா? என ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வில் சென்னை தி நகரில் உள்ள ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகளில் கிருமிநாசினி தெளிப்பது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பது ஆகியவற்றை கடைபிடிக்கவில்லை என தெரியவந்தது. இதனை அடுத்து திநகர் ரங்கநாதன் தெருவில் உள்ள 150 கடைகளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டதை அடுத்து அனைத்து கடைகளும் மூடப்பட்டன . இதனால் ரங்கநாதன் தெரு மீண்டும் வெறிச்சோடி காட்சியளிக்கிறது.
சமூக இடைவெளியை கடைபிடித்தல், கிருமி நாசினி தெளித்தல், மாஸ்க் அணிதல் உள்பட அரசின் வழிகாட்டுதல் அனைத்தையும் கடைக்காரர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் இல்லையேல் கடைகள் மூட உத்தரவிடப்படும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil