தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் ஜூலை 31 வரை ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு

Southern railway : எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் - புது டெல்லி - எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் ராஜ்தானி ஸ்பெஷல் ரயில் தொடர்ந்து இயங்கும்

By: Updated: July 14, 2020, 05:25:35 PM

தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் ஜூலை 31 வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. வைரஸ் தொற்றில் இருந்து குணமடையும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் பலி எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டிருக்கிறது. பலருக்கும் அறிகுறிகள் தென்படாததால் மிகுந்த குழப்பத்தில் இருக்கின்றனர். மறுபுறம் பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக, தமிழகத்தில் பொதுப் போக்குவரத்திற்கான தடை வரும் ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே அறிவிப்பு : தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் ரத்து நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன்னதாக ஜூன் 26ஆம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. இந்த சூழலில் வரும் ஜூலை 31ஆம் தேதி சிறப்பு ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

திருச்சி – செங்கல்பட்டு – திருச்சி (தினசரி சிறப்பு ரயில்)
மதுரை – விழுப்புரம் – மதுரை (தினசரி சிறப்பு ரயில்)
கோயம்புத்தூர் – காட்பாடி – கோயம்புத்தூர் (தினசரி சிறப்பு ரயில்) – எஸ்.எஃப் இண்டர்சிட்டி ஸ்பெஷல்
திருச்சி – செங்கல்பட்டு – திருச்சி வழி மயிலாடுதுறை (தினசரி சிறப்பு ரயில்)
அரக்கோணம் – கோயம்புத்தூர் – அரக்கோணம் எஸ்.எஃப் இண்டர்சிட்டி(தினசரி சிறப்பு ரயில்)
கோயம்புத்தூர் – மயிலாடுதுறை – கோயம்புத்தூர் ஜன்சதாப்தி(வாரத்தில் 6 நாட்கள் மட்டும்)
திருச்சி – நாகர்கோயில் – திருச்சி எஸ்.எஃப்(தினசரி சிறப்பு ரயில்) உள்ளிட்ட சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. அதேசமயம் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் – நியூ டெல்லி – எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் ராஜ்தானி ஸ்பெஷல் ரயில் தொடர்ந்து இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Coronovirus lockdown tamilnadu special trains southern railway cancellation

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X