இருமல் மருந்து மரணம்: ஸ்ரீசன் பார்மா உரிமையாளரிடம் மத்திய பிரதேச போலீஸ் விசாரணை

Coldrif Cough Syrup Row: இருமல் மருந்து குடித்து குழந்தைகள் பலியான சம்பவத்தில் ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனை அவரது நிறுவனத்திற்கு அழைத்து வந்து மத்திய பிரதேச போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Coldrif Cough Syrup Row: இருமல் மருந்து குடித்து குழந்தைகள் பலியான சம்பவத்தில் ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனை அவரது நிறுவனத்திற்கு அழைத்து வந்து மத்திய பிரதேச போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
parma

Cough Syrup Deaths:  மத்தியப்பிரதேச மாநிலம், சிந்த்வார மாவட்டத்தில் சமீபத்தில் சிறுநீரக செயலிழப்பால் 22 குழந்தைகள் அடுத்தது உயிரிழந்தனர். இவர்கள் காஞ்சிபுரம் அடுத்த சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிப் என்னும் இருமல் மருந்தை குடித்து தான் உயிரிழந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து, அந்த மருந்தை சோதனை செய்த போது அதில்  அதிகப்படியான  விஷத்தன்மையுள்ள வேதிப்பொருளான டைதிலீன் கிளைகால் (DEG) இருப்பது கண்டறியப்பட்டது. 

Advertisment

இதையடுத்து, பல மாநிலங்களில் இருந்த மருந்திற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மத்தியப்பிரதேச அரசு சிறப்பு புலனாய்வு குழு அமைத்தது. இதையடுத்து, ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன், சென்னை கோடம்பாக்கத்தில்  வைத்து கைது செய்யப்பட்டார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரங்கநாதனுக்கு, டிரான்சிட் வாரண்ட் வழங்கியதையடுத்து, மத்திய பிரதேசம் போலீசார் அவரை அம்மாநிலத்துக்கு அழைத்து சென்றனர்.

இதையடுத்து, மத்தியப்பிரதேச போலீஸார் அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து மத்தியப்பிரதேசம் சிந்த்வாரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து, ரங்கநாதனை 10 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அந்த இருமல் மருந்து எந்தவித பிரச்சனையும் இன்றிதான் இத்தனை வருடங்களாக தயாரிக்கப்பட்டதாக ரங்கநாதன் வாதிட்டார்.

மேலும், மருத்துவ கம்பெனியை முறையாக கண்காணிக்கவில்லை என கூறி இரண்டு அதிகாரிகளை தமிழக அரசு பணியிடை நீக்கம் செய்தது. கைதான மருத்து நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் வீடு உள்பட ஏழு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து, ஸ்ரீசன் பார்மா உரிமையாளர் ரங்கநாதனை நிறுவனத்திற்கு அழைத்து வந்து மத்திய பிரதேச போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

Advertisment
Advertisements

ED Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: