பார் கவுன்சில் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கியது!

முன்னுரிமை வாக்குப்பதிவு முறையில் வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும். இந்த முடிவுகள் வெளியாக குறைந்து 20 நாட்கள் ஆகும்

Bar-Council-of-Tamil-Nadu-and-Puducherry

தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் இன்று தொடங்கியது.

தமிழநாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் மார்ச் 28 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 180 மையங்களில் நடைபெற்றது. மொத்தம் 25 உறுப்பினர்கள் பதவிக்கு192 பேர் போட்டியிட்டனர். தமிழகம் முழுவதிலும் இருந்த வழக்கறிஞர்களில் 53 ஆயிரத்து 640 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இவர்களில் சுமார் 82 சதவீதம் பேர் வாக்களித்திருந்தனர்.

இதில் பதிவான ஓட்டுக்கள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஓட்டு எண்ணிக்கை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வேலை நாட்களிலும் எண்ணப்படும். மொத்தம் 302 பெட்டிகளில் உள்ள ஓட்டுக்கள் உயர்நீதிமன்றத்தில் உள்ள வக்கீல்கள் கூடுதல் கட்டடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு தான் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. முன்னுரிமை வாக்குப்பதிவு முறையில் வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும். இந்த முடிவுகள் வெளியாக குறைந்து 20 நாட்கள் ஆகும் என எதிர்பார்க்கபடுகின்றது.

தேர்வு செய்யப்பட்ட 25 உறுப்பினர்களில் இருந்து ஒரு தலைவர், ஒரு துணை தலைவர், ஒரு அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Counting of votes in the bar council election

Next Story
நீட் தேர்வுக்கு வெளிமாநிலத்தில் மையங்கள் ஒதுக்கீடு எதிர்த்து வழக்கு!Neet cut off
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X