scorecardresearch

சமயபுரம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி கொலை முயற்சி: உயிர் தப்பிய முத்தரையர் சங்க நிர்வாகி

திருச்சி சமயபுரம் அருகே முத்தரையர் சங்க நிர்வாகி கார் மீது முன்விரோதம் காரணமாக நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமயபுரம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி கொலை முயற்சி: உயிர் தப்பிய முத்தரையர் சங்க நிர்வாகி

க. சண்முகவடிவேல், திருச்சி

திருச்சி சமயபுரம் அருகே முத்தரையர் சங்க நிர்வாகி கார் மீது முன்விரோதம் காரணமாக நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி புத்தூர் பகுதியை சேர்ந்தவர் திலீபன். இவர் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க திருச்சி மாவட்ட இளைஞரணி செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில் சங்கம் சார்பில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் கொடியேற்ற விழாவை முன்னிட்டு நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை செய்வதற்காக சந்திரன் என்பவரை அழைத்துக்கொண்டு பார்சூனர் காரில் திருச்சியில் இருந்து லால்குடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

கார் நெ.1 டோல்கேட் அடுத்து அகிலாண்டபுரம் அருகே சென்றுகொண்டிருந்தபோது வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் ஆதரவாளர்கள் முன்விரோதம் காரணமாக 7 பேர் கொண்ட கும்பல் திலீபன் ஓட்டிச்சென்ற பார்சூனர் கார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்ய முயன்றுள்ளனர். உடனே சுதாரித்துக்கொண்ட திலீபன் காரை நிறுத்தாமல் சென்றதால் திலீபனும் அவரது நண்பர் சந்திரனும் உயிர் தப்பினர். இதனைத்தொடர்ந்து தீலிபன் காருடன் சமயபுரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று தஞ்சமடைந்தார்.

இதுகுறித்து திலீபன் அளித்த புகாரின் பேரில் நாட்டு வெடி குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக அகிலாண்டபுரம் கிராமத்தை சேர்ந்த கோபால், மதன், நந்தகுமார் , வினோத்குமார், ரவி, சுரேஷ் உள்ளிட்ட 7 பேரை சமயபுரம் போலீஸார் கைது செய்து அவர்களிடம் இருந்து வெடிக்காத நாட்டு வெடிகுண்டு மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவ இடத்திற்கு திருச்சி மாவட்ட எஸ்பி சுஜித்குமார் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Country bomb attack on mutharaiyar association functionary car at near samaypuram