/indian-express-tamil/media/media_files/sicxUFGWKDv6cbn1fhJv.jpg)
தருமபுரம் ஆதீனத்தை பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் பாஜக மாவட்டத் தலைவருககு முன்ஜாமின் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
Chennai High Court | Mayiladuthurai |தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோவை வெளியிட்டு விடுவோம் எனக் கூறி பணம் கேட்டு மிரட்டிய புகாரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில், பா.ஜ.க மாவட்ட தலைவர் அகோரம் தலைமறைவாகி விட்டார். மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்தை தற்போது தருமை ஆதீனம் 27ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாசாரியா சுவாமிகள் நிர்வகித்து வருகிறார்.
இவரை மயிலாடுதுறை பா.ஜ.க மாவட்ட தலைவர் அகோரம் மற்றும் சிலர் ஆபாச வீடியோ இருப்பதாக கூறி மிரட்டியுள்ளனர். இந்த விவகாரத்தில், தருமபுரம் ஆதீன மடாதிபதியின் சகோதரர் விருத்தகிரி அளித்த புகாரில் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதில், மயிலாடுதுறை பா.ஜ.க மாவட்ட தலைவர் அகோரம் தலைமறைவாகி விட்டார். இவர் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இனறு விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதி அகோரத்தின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.