/indian-express-tamil/media/media_files/ZhLScmU4PnhrYQpSU3aH.jpg)
கோச்சடையான் பட விவகார வழக்கில் லதா ரஜினிகாந்திற்கு பெங்களூரு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
Latha Rajinikanth | சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் கோச்சடையான். இந்தப் படத்தை ரஜினிகாந்தின் மகன் சௌந்தர்யா இயக்கி இருந்தார்.
இந்தப் படத்தை மீடியா ஒன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தரப்பில் முரளி என்பவர் தயாரித்து இருந்தார். முரளிக்கு ஆட் பீரோ நிறுவனம் சார்பில் ரூ.6.2 கோடி கடன் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் படத்தின் நஷ்டம் காரணமாக முரளி பெற்ற ரூ.6.2 கோடி பணத்தை திரும்ப செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இந்தப் பணத்துக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாத கடிதம் கொடுத்துள்ளார்.
இதற்கிடையில், ஆட் பீரோ நிறுவனத்தின் தரப்பில் அபிர் சந்த் என்பவர் பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனடிப்படையில், லதா ரஜினிகாந்த் மீது 196, 199, 420, 463 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதில் 3 பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. எனினும், 463 பிரிவு மட்டும் தொடர்கிறது. இந்த வழக்கில் லதா ரஜினிகாந்த் இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அப்போது அவருக்கு எதிராக வழங்கப்பட்ட பிடிவாரண்டை ரத்து செய்து நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.